பேரண்டத்தில் ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது என்கிறது இயற்பியல். ஆனால், பிக்பேங் பெருவிரிவின் போது வெளியானது, ஒளியைவிட அதிக மடங்கு வேகத்தில் விரிந்தது என்று சொல்வதும் அதே இயற்பியல்தான். அதுமட்டுமில்லாமல், பேரண்டமானது இப்போதும்கூடத் தன்னை ஒளியைவிட அதிக வேகத்தில் விரித்துக் கொண்டே செல்கிறது என்கிறது இயற்பியல்.
இவை அனைத்துமே, நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அப்படியெனில் இது எப்படிச் சாத்தியம்?
இயற்பியலே தன் கோட்பாடுகளால், தனக்குத் தானே முரண்படுகிறதா?
இல்லை,
இங்குதான் நாம் ஒரு முக்கிய விசயத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
ஒளியால்கூட ஒளியைத் தாண்டிய வேகத்தில் செல்ல முடியாது. ஆனால், இவையெல்லாமே அண்டத்தின் உள்ளே மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இயற்பியல் விதிகள். இந்த விதிகள், அண்டத்திற்கு வெளியே பயன்பாட்டில் இருக்க மாட்டா. அதாவது, பேரண்ட விரிவின் செயற்பாடு நடைபெறுவது அண்டத்தின் வெளி விளிம்புகளில். அண்டத்தின் உள்ளேயல்ல. அண்டத்தின் வெளியே இயற்பியல் விதிகளுக்கு எந்த வேலைகளும் கிடையாது.
"ஆற்றல் என்பது ஒரு ஆன்மாவின் அடையாளம்; அதனை திருடவோ அல்லது திணிக்கவோ முடியாது" என்று Zikra Nawhal அவர்களின் கவி வரியில் ஒன்றில் கூறுவது போன்ற எண்ணப்பட்டை இது விளக்கி நிற்கிறது.
No comments:
Post a Comment