தனிமனிதனும் ஒரு சமூகம் ஆகலாம் என்ற புலமைத்துவவாதக் கோட்பாட்டை இறை தூதுவர் ஆப்ரஹாம் (இப்ராஹீம்) வாயிலாக புனித வேதங்களான பைபிள் மற்றும் அல்குர்ஆன் முன்வைப்பதை காண முடிகிறது. அதேபோன்று தனிமனிதன் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு தொழிற்பாட்டியல் ஆக்க அலகு என்பதும் தனி மனிதன் தன் சமுதாயத்தில் ஏற்படுத்தும் நேர், மறை மீடிரனான அதிர்வுகள் குறித்தும் பல்வேறு தளத்தின் அல்குர்ஆன் முன்வைக்கும் உதாரணத்திற்கு பஞ்சமே இல்லை.
மனிதன் சமுதாய விலங்கு என்ற சித்தாந்தத்திற்கு அமைவாக தான் கொண்டுள்ள மானிட பிணைப்புகள் (Social Bond) உடனான தொடர்புடமை அடுத்த மானிடரின் வாழ்க்கை கோலத்திலும் தான் சார்ந்த சமூகத்தின் பின்னணியிலும் ஏற்படுத்தும் விளையுள்விசை எதிர்காலத்தின் அடுத்த தலைமுறை மீதான பொறுப்புக்கோடலை மருவியே ஒழுகும்.
ஒரு நல் மனிதனினால் வெளிப்படும் சொல்,செயல், அங்கீகாரம் என்பதும் அதற்கு நேர்முறனாக கெட்ட மனிதனால் வெளிப்படும் வெளியீடுகளும் சமூக அரங்கில் "விருட்சத்தை பிறப்பிக்கும் விதையை" போன்றது. விதை தன்னளவில் மிகச்சியதாக இருந்தபோதும் அதனுலிருந்து பிறக்கும் விருட்சம் பிரமாண்டமானது. அத்தோடு ஒரு விருட்சம் பல்லாயிரம் விதைகளை உற்பத்தி செய்து இப்பூமியெங்கும் வியாபித்து தனது நிலைத்திருப்பை உறுதி செய்கிறது... அல்-குர்ஆன் இந்த உவமானத்தை மிக அழகாக முன்வைக்கிறது.
"நல்ல சொல் என்பது வானளாவிய கிளைகளையும் பூமியில் ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. அதேபோல் அர்த்தமற்ற கெட்டதான சொல் பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு உறுதியின்றி நிற்கும் பட்டுப்போன ஒரு கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது" (அல்-குர்ஆன் 14:25, 26)
No comments:
Post a Comment