பெற்றுக்கொண்ட அறிவுகளை நிதானமாக பகுப்பாய்வு செய்து எனக்கென்று ஒரு தனித்துவ அறிவை களஞ்சியம் செய்துகொள்வது எனது வழக்காறு. இது இவ்வாறு இருந்தாலும் எந்தவொரு தளத்திலும் எனது பகுப்பியல் சிந்தனையை ஒப்பிவித்தமை கிடையாது. மாறாக நான் அறிந்த மூலத்தின் சிந்தனை புள்ளியினை முன்வைப்பேன்.
முரண்பாட்டு கருத்தியல் சூழலில் எப்போதும் நான் மூன்றாம் நிலை குடிமக்களில் நின்றுகொள்வேன். இதனால் எனக்கு தனியன் சார்ந்தோ அமைப்பு சார்ந்தோ எனது சிந்தனை முடக்கத்தை வரையறை செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்தும் பலரின் பல சாராரின் சிந்தனை நுகர்ச்சி என்னை ஆகர்சித்தது.
எல்லைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்ச காதல் என்னுள் இதுவரை தோன்றவில்லை. அதனாலோ என்னை தவிர ஏனையவர்கள் யாவரும் புத்திஜீவியாக தோற்றமளித்தார்கள். நான் சாதரணமா(ண/ன)வன் என்ற அடிப்படைவாதம் என்னை ஆட்கொண்டது. கருத்தியல் சுதந்திரத்தை மதிப்பதனால் கருத்தியலாளர்களைக் காட்டிலும் கருத்தியலை முன்னுரிமைப்படுத்த ஏதுவானது.
என் எல்லை இதுதான் என்பதற்கு இல்லை என்ற தீர்மானம் என்னுள் ஆளப்பதிந்தனால் எனது தேடலுக்கும் வாசிப்புக்கும் சமயமோ, சமூகமோ தடங்கலாய் இருந்ததில்லை.
"பிரபஞ்சக் கூறுகளான நட்சத்திரங்களின் எண்ணிக்கை என்பது பூமியின் கடலோரத்து மணல்களின் அளவை விட மிகஅதிகம்" என்று Mysterious Universe என்ற நூலில் James Jeans கூறுவதை நோக்கினால் நான் என்ற சொல் ஒரு சூனியம் என்ற நிலையை விட இழிவானதாய் உருவாகிவிட்டது....
சூனியம் என்பதை புரிந்துகொண்டால் இங்கே யாவும் யாதுமாகிவிடுமோ!
No comments:
Post a Comment