
இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரினால் பல்வேறு மட்டங்களில் அழுத்தம் கொடுக்கப்பட்டு விவாதத்திற்கு முறைபாட்டு உடன்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு முடிவினை எட்டியுள்ளது இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சிக்கல்கள்...
அமைச்சரவை அங்கீகரித்துள்ள மாற்றங்கள்
👉 திருமண வயது ஆண் பெண் இருபாலாருக்கும் 18 வயதிற்குக் குறையாமல் இருத்தல்.
அதே நேரம் 16-18 வயதுடையவர் களுக்கு காதியின் அனுமதியைப் பெற்று (சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு) திருமணம் நடைபெறலாம்.
👉 தற்போது அமுலிலுள்ள வலியோடு சேர்த்து மணமகளின் அனுமதியும் பெறப்படல் வேண்டும்.
👉 நிகாஹ் நடைபெறும் அதே நேரத்தில் விவாகப் பதிவும் (Registration) இடம்பெறுவதும் கட்டாயமாகும்.
👉 இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணம் செய்யும் போது, முதல் மனைவியின் சம்மதம் பெறப்பட்டு இருப்பது அவசியம்.
அது இல்லாதபோது, முதல் மனைவிக்கு தனது கணவனை "பஸஹ்" முறைப்படி விவகரத்துச் செய்ய உரித்துள்ளதாகக் கருதப்படும்.
👉 காதியாக நியமிக்கப்படுபவர் ஒரு சட்டத்தரணியாக இருப்பது அவசியம்.
👉 காதி நீதிமன்றம் என்ற பெயருக்கு பதிலாக திருமண மேன் முறையீட்டு சபை ( கொமிஷன்) என பெயர் மாற்றப்பட வேண்டும்.
👉 விவாகப்பதிவாளராக ( Registrar of Marriage) ஆக பெண்களை நியமிக்க முடியும்.
👉 காதி மேன்முறையீடுகளை விசாரிக்கும் சபைக்கு (Board of Qazi) பெண் அங்கத்தவர்களையும் நியமிக்கலாம்.
No comments:
Post a Comment