
இம்முறைமை குறிப்பாக நாஸ்திக சித்தாந்த புரிதலை தவிடுபொடியாக்கும் மேட்டுக்குடிகளின் தலைக்கன போக்கை அடியொத்திய சாடல் காட்சியை காட்டியபோதிலும் உண்மை இறையியல் புலனை உலகரியச்செய்யும் சமாந்தரதள செப்பனிடுகையை கொண்டிருந்தது.
இந்த தத்துவவாதம் ஒரு இஸ்லாமிய அறிவுலகின் கலையாக வரலாற்றில் கொடிகட்டி திகழ்ந்ததாக அறியமுடிகின்றது. இந்த கலையியல் பண்பு அறிவார்ந்த அதாவது மத்தியகால துறைசார் விற்பன்னம் கொண்டமைந்த இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பரவலாக்கம் செய்யப்பட்டு இருந்துள்ளது. இப்பின்னணியினை தழுவிவந்த சமகால நவீன இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஒருசில இஸ்லாமிய உள்ளார்ந்த அமைப்புகள் தங்கள் தளத்தில் நின்று அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா, சமூகச்சட்ட்டவியல் மற்றும் ஷரீயாவின் நோக்கு (மகாஸிதுஸ் ஷரீஆ) போன்ற பல்வேறுபட்ட இஸ்லாமிய கற்றல் கலைதிட்டங்களை முன்மொலிவு செய்துள்ளன.
நாத்திக, அநாத்திக என்றவிரு தரப்பு வாதங்களை உலக எடுகோள் கண்ணோட்டத்தில் அல்-குர்ஆன் பிரஸ்தாபிக்கும் வினோத முரண்பாட்டியல் அணுகுமுறைமை எல்லாவித கடவுள் ஏற்பு மற்றும் மறுப்பியல் கோட்பாடுகளையும் ஐயங்களையும் உடைத்து புத்தம்புது சிந்தனை தெளிவை முன்வைக்க காரணமாகியது. இதே பாதையில் மிக அண்மைகாலமாக மக்கள் அவையில் மீடிறன் தாக்கம் செலுத்த முற்படும் வேளையில் பாரம்பரிய மதப்போதகர்கள் மற்றும் மேடைப்பேச்சாளர்கள் என்று தங்களை அடையலாம் காட்டிய முஸ்லிம் மதகுருக்கள் சிலரும் அவர்களின் பாசறையில் பயின்ற மற்றும் மூளைச்சலவை செய்யப்பட புதுமுக மாந்தர்களும் பெரும் தடங்களாக முட்டுக்கொடுக்கின்றனர்.
அறிவியலை அடிப்படை எடுகோளாக கொண்டு நகரும் நவீன மக்கள் மன்றத்தில் எதனைக்கொண்டு இஸ்லாத்தின் அறிவார்ந்த இறையியல் பண்பின் அற்புத தன்மையை விபரிக்கவேண்டும் என்ற கேள்விக்கு உள்ளக பிரச்சாரம் செய்யும் குழுக்களால் சுவர்க்கம், நரகம், கன்னியர்கள் என்ற அடிப்படை நம்பிக்கை வாதத்தை மாத்திரமே சமர்பிக்கமுடியுமே தவிர முஸ்லிம் அல்லாதோருக்கு தங்கள் மார்கத்தை அல்-குர்ஆன் 16:125 வசனத்தில் முன்வைக்கும் தர்க ரீதியான அறிவார்ந்த மேற்கோள்களை எடுத்துயம்ப முடியாது...
இலவசமாக கிடைத்த மார்க்கத்தில் நாம் உறுதிகொண்டது போலவே ஏனைய மதத்தாரும் தங்கள் மதங்களில் நிலைகொண்டுள்ளார்கள். இப்புரிதலை தாண்டி தான் இருக்கும் தளம் மட்டுமே சத்தியம் என்ற வாதத்தை முன்வைக்க எத்தனிக்கும் நாம் எதுவரை மற்றைய மதங்கள் பற்றிய தேடலையும் அறிவையும் பெற்றுள்ளோம் என்ற கேள்வி தொக்கி நிற்கின்ற வேளையில் உலகாவிய கடவுள் கோட்பாட்டை (Universal God Doctrine) நிராகரித்து ஒதுங்கும் நாத்திகத்தின் மீது இயலாமையோடு ஒதுங்கும் எம்மவர்கள் நிலை துரதிஷ்டம்தான்...
மார்க்கம், சட்டம், கொள்கை பற்றி நாம் எதுவரை ஆழ்ந்த புலமை பெற்றுள்ளோம்? அதனை குருட்டு நம்பிக்கை கொண்டு எம்மூதையர் செய்ததை ஏற்ற சமூகம் இன்று நிராகரிக்கும் போக்கில் பெற்ற அறிவு நாம் யோசித்த காரணத்தினால் பெற்ற விடுதலையே தவிர வேறு எவ்வாறு அதனை கூறிக்கொள்வது என்று தெரியவில்லை...
எதிர்பவனால் மாத்திரமே அதீத அன்பு கொள்ளமுடியும் என்ற நிலையில் உமரின் வாழ்வியல் மேற்கோள் போன்று சமூகத்தின் சில உள்ளார்ந்த எதிர்ப்பலைகளை தொடர்பவர்களை வரவேற்று அவர்களின் வாதத்திற்கு தெளிவை வழங்கும் தார்மீக பொறுப்புடைமை (Accountability) இச்சமூகத்தின் ஒவ்வோர் தனியனை சார்ந்துள்ள ஒன்று என்பதை ஏற்பதை ஏன் இன்னும் மறுக்கின்றோம்?
No comments:
Post a Comment