
பிரித்தானியர் எப்படியேனும் இலங்கையை கைப்பற்றிவிட வேண்டும் என தருணம் பார்த்துக்கொண்டு இருந்த போது பிரித்தானியாவின் கிழக்கிந்தியக் கம்பனிக்கு சொந்தமான ANN என்ற கப்பல் கொட்டியாரக்குடாவுக்கு வந்து இந்திய விற்பனைப்பிரதிநிதிகளையும் பொருள்களையும் மூதூர்கரையில் இறக்கி விடும்.
அவர்கள் மூதூரில் உள்ள தவளம்களை(பழக்கப்பட்ட பொதி சுமக்கும் மாடுகள் )வாடகைக்கு எடுத்துக் கொண்டு மட்டக்களப்புவரை சென்று வியாபாரம் செய்வார்கள் .


அந்தக்காலத்திலேயே நாடு அந்நியரின் ஆக்கிரமிப்புக்குட்பட்டுவிடக்கூடாது என்ற தேசாபிமானத்தோடு வாழ்ந்த நம்முன்னோராகிய மூதூர் படைவீரர்கள் கப்பல் சிப்பந்திகள் கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் முதலானோருடன் மோதினர்,
இறுதியில்
கப்பலின் கெப்டன் நொக்ஸ்,அவாரது 19 வயது நிரம்பிய மகன் ரொபட் நொக்ஸ் உட்பட பலரைக்கைது செய்து கண்டிக்கு அனுப்பி வைத்தனர்,அக்காலத்தில் கண்டி செல்ல ஒரு வாரம் எடுத்ததாம்,
அதன்பின் நடந்தவை மிகவும் சுவாரஸ்யமானவை.
மேலும் உசாவுகைக்கு - HISTORICAL RELATIONS OF THE ISLAND CEYLON - BY ROBERT KNOX (இந்நூல் Dr.Zahir அவர்களால் Thadayam Museum க்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது )
No comments:
Post a Comment