சமூக அரங்கில் கலாச்சார மனவமைப்பு பலதார மணத்திற்கு இயல்பாகவே எதிர் நிலையில் இருப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அப்பால் நடைமுறை தீர்வு என்ன என்று நோக்கினால் அதற்கு இதுவே சிறந்த வழிமுறையாக நோக்கப்படுகின்றதையும் நாம் உணர்ந்தும் அதனை எமது குறைநிலை புத்தியோடு மதிப்பீடு செய்து மறை கண்ணோட்டத்தில் நோக்க காரணமாகின்றது.
பலதாரமணதின் அனுகூலங்கள்
1. உடலியல் தேவை - ஒரு ஆணின் உடலியல் தேவை ஆகக்குறைந்தது 4 பெண்களில் திருப்தி அளிக்கப்படுகின்றது என்று Human Sexual Psychology கூறுகின்றது. அதேபோல் பெண்ணை பொருத்தமட்டில் ஒரு ஆணின் உடலியல் தேவையே போதுமானது. அளவியலின் தாக்கத்தினால் ஆண்களின் பொதுநிலைப்பாடு பெண்களின் உடலியல் சுகமாகவும் பெண்களின் பொதுநிலைப்பாடு உளவியல் சுகமாகவும் இலக்காக கொள்ளப்படுவதே இதற்கான அடிப்படை காரணம் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகின்றது.

2. பெண் சதவீதம் - ஆண்களை கட்டிலும் உலகில் பெண்களின் வீதம் இரண்டு வீதத்தினால் உயர்வாக உள்ளது. இதே போக்கும் இன்னும் 25 வருடங்களில் 10% னை அண்மிக்கலாம் என்று ஆய்வுகள் கூடுகின்றது. இந்த போக்கில் பலதார திருமணத்தை நோக்கும் போது நடைமுறைக்கு எதுவாக உள்ளது.
3. பாதுகாப்பு - உடல், உள, சமூக பாதுகாப்பை திருமணமுடிப்பதனூடாக ஆணும் பெண்ணும் பெற்றுக்கொள்கிறார். இதனால் தகாத மானிட தொடர்புடமை இழிவளவாக்கப்பட்டு ஆரோக்கிய சமூகம் தோற்றம் பெறுகின்றது.
4. பொருளாதார பங்கீடு - செல்வந்தர்கள் பலதாரமணம் செய்வதனால் பல ஏழை பெண்களின் பொருளாதார வாழ்வியல் உயர்ச்சி பெறுவதோடு சமூகத்தின் வறுமை நிலையும் இல்லாமல் அழிக்கப்படுகின்றது. இதனால் அனாதையாக காணப்பட்ட குடும்பம் ஒன்று பொருளாதரம் தொடக்கம் கல்வி, சமூக அந்தஸ்து மற்றும் அடிப்படை தேவை நிவர்த்தி செய்யும் தகுதிநிலையை பெறஏதுவாகின்றது.
5. உறவுமுறை விருத்தி - பலதாரமணம் காரணமாக குடும்ப உறவுகள், குழந்தை பிறப்பு அதிகரித்து வலுப்பெற்ற மானிட தொடர்புடமை மற்றும் மானிட வளங்கள் சமூகத்தில் பயனுள்ளதாய் வெளியீடு செய்யப்படுகிறது.
6. உதவிகளும் ஒத்தாசைகளும் - பலதாரமணம் மூலமாக இயலாமை / நோய் மற்றும் முதுமை நிலையில் பல்வேறு உதவிகள் ஒத்தாசைகள் கிடைக்கப்பெறுகின்றது.
பலதாரமணதின் பிரதிகூலங்கள்
1. இணக்கப்பாடின்மை - மனைவிகளுக்கு இடையில் பொறாமை, குரோதம் காரணமாக குடும்ப பிளவுகள். அத்தோடு குழந்தைகளுக்கு இடையில் இணக்கப்பாடின்மை.
2. சொத்து வீண்விரயம் - குறித்த ஆணின் சொத்துகள் சிலவேளைகளில் மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் வீண்விரயம் செய்யப்படும் சூழல்.
3. நீதம் தவறுகின்றமை - ஒரு பெண்ணின் கூடிய அக்கறை காட்டும் அதேவேளை மற்றவர்களை ஒதுக்குவதும் அவர்களுக்கான சலுகை, உரிமைகளை பறிப்பதும் அடிமைத்துவ பண்பை வெளிகாட்டும் சூழல் ஏற்படலாம்.
இஸ்லாத்தின் பார்வையில் பலதார திருமணம்
"தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், நீங்கள் திருமணமுடிக்க தகுதியானவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து மஹராக கொடுத்துத் திருமணம் செய்யத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது" (அல்-குர்ஆன் 4:24)
"அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 4:3)

மேற்படி மூன்று வசனங்களில் இருந்தும் நாம் புரிந்துகொள்ள கூடியது...
பலதாரமணம் அனுமதி இருக்கும் அதே வேலை உங்களால் குறித்த நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்க முடியாது என்றும் அல்குர்ஆன்
(மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது) கூறுகின்றது. அவ்வாறாயினும் நீங்கள் மிக நீதமற்று நடந்துவிடக்கூடாது என்பதே நிபந்தனையாகவும் (முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்) முன்வைக்கின்றது. அல்லது (நீங்கள் இவர்களிடையே நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்" என்ற நிபந்தனையை வலியுறுத்துகின்றது.

"நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய உங்கள் மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருகிறான்" (அல்-குர்ஆன் 30:21)
அல்குர்ஆன் திருமணம் ஊடாக அமைதி, அன்பு, இரக்கம் ஆகிய மூன்று பண்புகளை இலக்குகளாக வரையறுக்கின்றது. கணவன்-மனைவி தொடர்பை கணவன் மனைவிக்கான ஆடை, மனைவி கணவனுக்காக ஆடை என அல்குர்ஆன் கூறுகிறது. இதனூடாக ஆடை என்பது "வெளிப்படைத்தன்மை"யை கூறுவதாக நாங்கள் புரிந்துகொள்ள முடிகின்றது. கணவன் தனது மனைவிக்கு வெளிப்படைத்தன்மையுடனும் அவள் அவனுக்கு வெளிப்படைத்தன்மையுடனும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்துகொள்ள வேண்டும் என அல்குர்ஆன் நாடுகிறது.
திருமணம் என்பது முழுக்க முழுக்க ஆண்களின் கையில் உள்ள நிலைமை மாறி பெண்களுக்கும் அதில் தீர்மானம் எடுக்கும் சமூக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும் பலதார மணம் குறைந்து போனமைக்கு காரணம்.
தாரிக் ரமழான் போன்ற நவீனகால அறிஞர்களின் கருத்துப்படி முதல் மனைவியின் அனுமதி கட்டாயமானது என்கின்றனர். முதல் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை மணப்பது முதல் மனைவிக்கு வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை என்பதுடன் அவளுக்கு துரோகமிழைத்ததாகவுமே கருதப்படும். இதனால் திருமண வாழ்வியல் ஒழுங்காக நடாத்த முடியாத சூழல் உருவாகும்.
மறுபுறம் பெண்களின் உளவியலின் படி ஒரு பெண் எந்தவொரு நிலையிலும் தங்கள் கணவனை பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டாள் என்பது உலக நியதி. இருந்தபோதும் எந்தப்பெண் மறுமை வாழ்வை இலக்காக கொண்டு தனது வாழ்வியலை ஒழுங்கமைத்து கொள்கிறாளோ அவளால் மாத்திரமே இவ்வாறான ஒரு கடினமான முடிவை நடைமுறைபடுத்த முடியும். இது ஒருவகை சதகா (தர்மம்) என்று நவீன இஸ்லாமிய அறிஞர்கள் கருகின்றார்கள்.
No comments:
Post a Comment