திருமணமாகியும் குழந்தை பாக்கியம் அற்று காணப்படும் தம்பதிகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் நவீன மருத்துவ முறைமை இதுவாகும். ஆரோக்கியமான கருத்தரிப்பு மற்றும் திருப்தியளிக்கும் சிகிச்சை முறையிலாக குழந்தையை பெற்றுக்கொள்ள இந்நடைமுறை உலகளாவிய ரீதியில் சமகாலத்தில் வரவேற்பு பெற்றுவருகின்றது.
குழந்தை பாக்கியம் இல்லாமல் காணப்பட பிரதான காரணமாக மலட்டுத்தன்மையை குறிப்பிடலாம். மலட்டுத்தன்மையை பொருத்தமட்டில் இரு பாலருக்கும் (ஆண், பெண்) பொதுவான காரணி. இருந்தபோதும் இங்கே நிரந்தர மற்றும் தற்காலிக மலட்டுத்தன்மையை கருத்தில்கொள்ளப்படும்.
மலட்டுத்தன்மை (Infertility)
பிரதானமாக மலட்டுத்தன்மை பின்வரும் வகையில் ஏற்படுகின்றது.
1. பிறப்பு முறை - டவூன்சின்றோம் குழந்தைகள்
2. நோய் - இனப்பெருக்க தொகுதி சார்ந்த புற்றுநோய்
3. விபத்துக்கள் - இனப்பெருக்க தொகுதி பாதிக்கப்படுதல்
:max_bytes(150000):strip_icc()/symptoms-of-infertility-1960282_lighter-5b3f8f3a46e0fb00375b7995.png)
4. சில மருந்துகள், போதைப்பொருள், கருத்தடுப்பு மாத்திரைகள்
5. ஆணின் விந்து எண்ணிக்கை மற்றும் அதன் வீரியம்
6. பெண்ணின் இனப்பெருக்க தொகுதி சார்ந்த பலவீனம் மற்றும் சூல் வட்டம்
7. ஆண் இனப்பெருக்க தொகுதி சார்ந்த பலவீனம் - விதை விருதியின்மை, சேமிக்கும் விந்துகளின் எண்ணிக்கை, புணர்தலின் போது விடுவிக்கப்படும் விந்து எண்ணிக்கை, சுக்கிலத்தின் போசணை அளவு, விந்துக்களின் ஆரோக்கியம்
8. வயது - எல்லா பெண்களுக்கும் 45 வயதை விட உயர்வு
நிரந்தர மலட்டுத்தன்மை - இது பொதுவாக ஒப்பீட்டளவில் உடலியல் ரீதியான குறைபாட்டை சார்ந்து மிக அரிதாக காணப்படுகின்றது. இதைவிடத்து எல்லா பெண்களுக்கும் வயது முதிர்ச்சி நிரந்தர மலட்டுத்தன்மை உண்டாக்கும். இவற்றுக்கு அப்பால் மேற்குறிப்பிட்ட சில காரணிகளான விபத்துகள், பிறப்பு சார்ந்தவை, நோய்கள் காரணமாக இனப்பெருக்க தொகுதி சார்ந்த நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படலாம். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது இல்லை...
தற்காலிக மலட்டுத்தன்மை - பெரும்பாலான மருத்தவ முறைமை தற்காலிக மலட்டுத்தன்மையை சார்ந்தே அமைகின்றது. அவ்வகையில் தற்காலிக மலட்டுத்தன்மை பின்வரும் முறைகளில் நிகழலாம்.
1. புணரிகளின் தன்மை - ஆணின் விந்து அணுக்கள் மற்றும் பெண்ணின் சூல் கலங்களின் கருக்கட்டும் தன்மை. குறிப்பாக ஆண்களின் விந்தணுகளின் ஆரோக்கிய குறைபாடு, எண்ணிக்கை பற்றாக்குறை (100 million விட அதிகமாக), விந்தின் போசணை ஊடகம் மற்றும் விந்தணுக்கள் பெண் இனப்பெருக்க சுவட்டில் நீந்தும் தகவு குறைவு என்பன இதில் செல்வாக்கு செலுத்தும்.
2. பெண் இனப்பெருக்க சுவட்டின் குறைபாடுகள் - பலோப்பியன் குழாயில் அடைப்புகள், முறையற்ற சூல் விடிவிப்பு சுழற்சி (மாதவிடாய்), கருப்பை முளையத்தை பதிக்கும் தன்மை குறைவாக உள்ளமை, யோனிவழியின் தன்மை (விந்து நீந்தி செல்ல போதுமான திரவ ஊடக பற்றாக்குறை) போன்றவை தாக்கம் செலுத்தும்.
3. ஆண் இனப்பெருக்க சுவட்டின் குறைபாடுகள் - விதைகள் போதியளவு விந்து உற்பத்தி செய்யாமை, சேமிக்கப்படும் விந்துகளின் எண்ணிக்கை பற்றாக்குறை, தனித்த விந்தின் நீந்தும் தகவு மற்றும் அது உயிர் வாழும் கால எல்லை 72 மணித்தியாலங்களாக இருக்க வேண்டும் அதற்கு முன்னர் இறக்கும் நிலை. விந்து அணுகளை கொண்ட சுக்கிலப்பாயி கொண்டு போசணை அளவு.
4. ஆண்குறியின் அளவு - மிகச்சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களினால் விந்தை செலுத்தும் எல்லை அதிகம் என்பதனால் குறித்த தானத்திற்கு விந்து சென்றடைவதில் சிக்கல்.
5. உடலியல் மிகை திறன் - அதாவது சில பெண்கள் உயர் நிர்பீட எதிர்ப்பை கொண்டு காணப்படுவதனால் சூல்கள் விந்துடன் இணைய வாய்ப்பு அளிக்கப்பட மாட்டது. அதுபோன்று கருப்பை சுவர்கள் தடித்த தசை அமைப்பையும் கருப்பை கழுத்து குறுகிய வாயிலையும் கொண்டுந்தாலும் விந்து செல்ல சிரமமாக இருத்தல்.
செயற்கை கருவூட்டல் (Insemination)

மேற்குறிப்பிட்ட தற்காலிக மலட்டுத்தன்மை நிவர்த்திக்க செயற்கை கருவூட்டல் (Artificial Insemination) பரிந்துரை செய்யப்படுகின்றது. இது இருவகைப்படும்.
1. உள்ளக கருவூட்டல் (In vitro fertilisation - IVF) - பெண்ணின் சூலகத்தை ஓமோன்கள் மூலமாக தூண்டி குறித்த ஒரு நேரத்தில் பல் சூல் விடுவிக்க வைக்கப்படும். இந்த தருணத்தில் குழாய் வழியாக விந்து கருப்பைக்கு செலுத்தப்பட்டு கருக்கட்டும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும் செயன்முறை இதுவாகும். இதன்போது ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கட்டல் நடைபெற்று பல குழந்தைகள் பெறவும் வாய்புகள் உண்டு.
2. வெளியக கருவூட்டல் (Intrauterine Insemination - IUI) - இதனை (Test tube) முறை என்று கூறுவார்கள். அதாவது தூய்மையாக்கப்பட்டு வேறுபிரித்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான ஆணின் விந்து அணுக்களையும் பெண்ணின் சூல் கலத்தையும் மிகக்குறுகிய இடைவெளியில் அதாவது சோதனை குழாய் ஒன்றினுள் இட்டு கருக்கட்ட வாய்பளித்து அவ்வாறு கருக்கட்டப்பட்ட நுகத்தை (Zygote) கருப்பையில் முளையம் பதிப்பு (Implantation)செய்யப்படுதல் முறையாகும்.
17ஆம் நூற்றண்டிலேயே இந்நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டாலும் வெளியக கருக்கட்டல் முறை 1950 களின் பின்னரே சிறப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வாடகை தாய் என்ற நிலைப்பாட்டில் கருத்தரிப்பை குறித்த காலத்திற்கு செய்யும் பணியை திருமண தம்பதிகள் அல்லாத வேறு பெண்ணொருவள் மேற்கொள்வாள். அதாவது குழந்தையை பிரசவிக்கும் வாடகை தாய் என்றும் கூறலாம்.
குறிப்பு - இலங்கையிலும் இந்நடைமுறை பிரபலமாக மேற்கொள்ளப்பட்டு பாரிய வரவேற்பை பெற்றுவருகின்றது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் செயற்கை கருக்கட்டல்
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வம்சாவளி மிகவும் அவதானமாக கருத்தில் கொள்ளப்படுகின்றது. இதற்கான பிரதான காரணம் சமூக நிலைப்பாட்டையும் அத்தோடு ஒரு குழந்தையின் தூய அடையாளத்தையும் இது பின்னணியில் கொண்டுள்ளதே காரணமாகும். இந்த கண்ணோட்டத்தில் மேற்படி நடைமுறை வரையறை செய்யப்பட்டு அனுமதி
அளிக்கப்படுகின்றது கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தினூடாக.
"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்" (அல்-குர்ஆன் 2:223)
மேற்படி வசனத்தின் படி நவீன இஸ்லாமிய அறிஞர்களின் மேற்குறித்த செயற்கை கருக்கட்டல் ஆகுமானது என்பதை முன்வைப்பதோடு அதற்கான நிபந்தனைகளையும் முன்வைக்கின்றார்கள்.
நிபந்தனைகள்
1. கருக்கட்டல் செய்யப்படும் புணரிகளான விந்து, சூல் இரண்டும் குறித்த தாய், தந்தையினுடையதாக இருத்தல் அவசியம்.
2. கருக்கட்டப்பட்ட நுகம் குறித்த பெண்ணின் கருப்பையில் வளர்க்கப்பட்டு பிரசவம் நடைபெறவேண்டும்.
மேற்படி இரு நிபந்தனைக்கு அப்பால் சில நடைமுறைகள் இருக்கின்றன.
01. கணவனின் விந்தணுவையும் , வேறு ஒரு பெண்ணின் முட்டையையும் எடுத்து மனைவியின் கருவறையிலே வளர விடுதல்.
02. மனைவியின் முட்டையை கணவன் அல்லாத வேறொரு ஆணின் விந்தணுவை எடுத்து மனைவியின் கருவறையில் வளர விடுதல் .
03. கணவனுடைய விந்தணுவையும் மனைவியின் முட்டையையும் எடுத்து வேறொரு பெண்ணின் கருவறையில் வளர விடுதல்.
04. வேறொரு ஆணின் விந்தணுவையும் , வேறொரு பெண்ணின் முட்டையையும் எடுத்து தன்னுடைய மனைவியின் கருவறையில் வளர விடுதல்.
05. கணவனுடைய விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து கணவனின் வேறு மனைவியின் கருவறையில் வளர விடுதல்.
மேற்படி 5 முறைகளிலும் தாய், தந்தை மற்றும் வளர்பூடகம் மாறுபடுவதனால் இஸ்லாத்தின் பார்வையில் இம்முறைகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்

அண்மைகாலத்தில் விந்து சேமிப்பு வங்கி என்று அறிமுகம் செய்யப்பட்டு விஞ்ஞானிகள், பிரபலங்கள் மற்றும் சில சமூக தலைவர்களின் விந்து அணுக்களை காப்பு செய்து அதனை விற்பனையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சில தம்பதியினர் அவ்வாறு தங்கள் குழந்தைகள் அறிவாளியாகவும் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்றும் இவ்வாறான விந்தணுக்களை வாங்கி செயற்கை முறை கருவூட்டல் செய்து கொள்கின்றார்கள். அதுமட்டுமன்றி சில பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சில பெண்கள் ஆண்களின் செல்வாக்கை தடுக்கவும் திருமணத்தை வெருப்பதனாலும் இவ்வாறு தங்களுக்கான குழந்தை பாக்கியத்தை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் அன்றி விலங்குகளில் இது தாராளாமாக மேற்கொள்ளப்பட்டு புதிய ஆரோக்கியமான தலைமுறைகள் உருவாக்கப்படுகின்றமை விலங்கு வேளாண்மையில் கண்ட ஆரோக்கியமான செயற்பாடாகும்.
தேடல் வலைதளங்கள்
No comments:
Post a Comment