
"ஆன்மா ஒன்று சத்தியத்தை மரணத்தின் கண்களாலேயே பார்க்க முடியும்" என்ற சோப்ரிஸ்ட் (Bertrand Zobrist) தத்துவவியாளர் உயிரில் ஆய்வாளர் தன் கூற்றை முன்வைக்கிறார்.
வாழ்வில் வெற்றி பெறத்துடிக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படியாவது தான் எண்ணியதை அடைந்து வரும் விட வேண்டும் என்ற துடிப்புடன் சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்தை மீறியும், சமயக்கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டும், அவற்றைப் புறக்கணித்தும், தர்மமார்க்கங்களின் படியும் தர்மத்தைப்புறந்தள்ளி அதர்மமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு மனச்சாட்சியின்படியும், சில நேரங்களில் அதற்கு வஞ்சனை செய்தும் எதை எதையோ செய்கிறான்.
வரம்புமீறி அவன் செய்யும காரியங்கள் தோல்லியைத்தந்தால், பிரச்னை எதுவும் இல்லை. "நாம் சென்றது தவறான பாதை. ஆகவே தோற்றோம் "என்று அவனது ஆழ்மனதில் அவனறியாமலேயே ஒரு மெல்லிய திருப்தியும் மனசமாதானமும் ஏற்படும்.
ஆனால் வெற்றி பெற்றவன் பாடு திண்டாட்டம், அப்போதைக்கு அவன் வெற்றிக்களிப்பில் இருப்பான். சிறிது காலம் சென்று வெற்றிப்பெருமித உணர்வுகள் மடிந்த பின்அவனுக்கு உறுத்த ஆரம்பிக்கும்.
ஒவ்வோர் விளைவுக்கும் ஓர் எதிர்விளைவு உண்டோ?
மரணத்துக்குப்பின் இவை சேர்ந்து வந்து தாக்குமே?
அப்போது என்ன செய்வது?
என்று பயப்பட ஆரம்பிப்பான்.
இந்த பயம்தான் மனிதனை தத்துவங்களை நோக்கி, மதங்களை நோக்கிச் செலுத்துகின்றது.
அவன் சென்று சேர்கிறமதங்களில் கூறப்படும் தத்துவங்களோ, கோட்பாடுகளோ அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிப்பதில்லை. அங்கேஅவனுக்கு க் கிடைக்கும் ஒவ்வொரு விடையின் முடிவிலும், "அதற்கு பிறகு என்ன "?என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படி முடிவுற்ற சந்தேகங்களும் பயங்களும் எண்ணங்களும் மனிதனின் மனத்தை களைப்படையச் செய்கின்றன. ஒரு கட்டத்தில் எண்ணங்களின் சுமை தாங்கமுடியாமல் மனிதன் சோர்ந்து விடுகிறான்.
இதற்கு மாறாக நம்பிக்கையை வலியுறுத்தும் மதங்களில் இந்தப் பிரச்சினைகள் இல்லை. அவை குறிப்பிட்ட மனிதரைப்பின்பற்றும்படி கூறும், அவ்வளவுதான்.
ஆகவே மதம் என்பது மரணத்தின் மீது மனிதன் கொண்ட பயமே!
No comments:
Post a Comment