இவரின் கூற்று என்னை அலாதி இரசனைக்கு உற்படுத்திய போதும் அந்த கருத்தின் ஆழ்பொருள் நோக்கு அண்மைக்காலமாகவே உணரக்கூடியதாக உள்ளது. ஏனெனில் பாரம்பரிய எழுத்தாளர்கள் அநேகர் ஆக்க இலக்கியம் சார் படைப்புகளை (சுய ஆக்கம்) நாட்டம் கொண்டவர்களாக அடையாளம் காட்டியுள்ளார்கள். அவ்வகையில் நவீனத்துவ இலக்கிய வாதிகள் பெரும்பான்மையானோர் தொகுப்பாக்க இலக்கியத்தில் அதீத முனைப்பை காட்டிவர அவர்களது பல்துறை தேடல்தல், வாசிப்பு அடித்தளமிட்டது எனலாம்...
மற்றைய கண்ணோட்டத்தில் தரமான படைப்பாக்கம் வெளியீடு செய்யப்படுவது தொகுப்பாக்க இலக்கியத்திலே என்பதை யாரும் மறுக்க முடியாது. இருந்தபோதும் கற்பனை, ரசனை, அனுபவம் வாயலான பின்னணியினை ஆக்க இலக்கியங்கள் தன்னுள் கொண்டுள்ளது. பல்தரப்பட்ட சிந்தனையாளர்களின் சிந்தை, பன்னூல் வாசிப்பில் நுகர்ந்த வாசகம், ஆதாரம் என்பவற்றை கொண்ட கருவமைப்பை ஒரு முழுவடிவான நூல் எனும் குழந்தையை பிரசிவிக்க தொகுப்பாக்க இலக்கியங்களாலேயே தரமுடியும்.
No comments:
Post a Comment