இது சத்தியத்திற்கு அசத்தியத்திற்குமான போர் வீடுகை எனலாம். இவை எப்போதும் சமூகத்தின் நிலனிலும் எதிர்கால நிலைத்திருப்பு மற்றும் உரிமைகளோடு கலந்த சலுகையிலும் சார்ந்த நடைமுறை போக்கை வெளிக்காட்டும். அதே காலப்பகுதியில் சத்தியத்தை வெளிப்படுத்தும் கூட்டம் அல்லது தனியன் தனது கருத்தியல் வெளிப்பாட்டல் பலமான கயிற்றை கைப்பற்றி இருக்கும் நிலையில் தான் சார்ந்த நெருக்கமான மானிட பிணைப்பு சமூக தலைமைகள் அதிகார வகுப்பார்களிடையே தனது கருத்தியல் பலத்தை எவ்வாறு ஒப்புவிக்க முனைக்கிறான் என்பதில் தான் கொண்ட கொள்கையின் வெற்றி தீர்மானமாகிறது.
விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் சுதந்திர சலுகை ஒரு தனிப்பட்ட நபர், கூட்டம் சார்ந்து முடக்கப்படுவதை தடுக்கவும் அது அதே சமூகத்தின் மீதான தான் கொண்டுள்ள பொறுப்புக்கூடலையும் வகிபாகம் அத்தஸ்தையும் உறுதிசெய்யும் முற்போக்கு சிந்தனை, செயற்பாட்டு முனைவாகும். இது ஒரு சிலரை பாதித்த போதும் பலரின் எதிர்காலத்தில் தங்கிய காரணி என்பதை அச்சமூகம் உணர நீண்ட கால எல்லை தேவைப்படலாம்.
"அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்"
(அல்-குர்ஆன் 15:81)
No comments:
Post a Comment