தென்னாபிரிக்காவில் அமைந்துள்ள இக்காட்டின் தாவர சாகியங்களின் பிரதிபலிப்பே ஏனைய காடுகள் என்பதும் இக்காட்டின் விசேட தனித்துவம். இக்காடுகள் 5500000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இக்காடுகளில் தான் உலகில் 2வது நீளமான நதியான அமேசான் நதி பரந்துள்ளது. இது 3903-4195 மைல் நீளத்தினை கொண்டுள்ளதோடு 20% நன்நீரினை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்காடுகளின் எல்லையினை அவதானிக்குமிடத்து வடக்கே கயானா உயர்நிலத்தினையும், கிழக்கே அத்திலாந்திக் சமுத்திரத்தினையும், தெற்கே பிரேசில் மத்திய நிலத்தினையும் , மேற்கே அந்தீஸ் மலைத்தொடரினையும் கொண்டுள்ளது.
உயிர்பல்வகைமையினை பொருத்தமட்டில் 2.5 மில்லியன் பூச்சி வகைகளினையும், 40000 தாவரவகைகளினையும், 16000 மரவகைகளினையும், 1300 பறவையினங்களையும், 5600 மீனினங்களையும், 427 முலையூட்டி வகையினங்களையும், 400 ஈரூடக வாழிகளினையும், 378 ஊர்வன வகைகளையினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் பிரேசில் நாட்டில் மாத்திரம் 96660-128843 உயிர்பல்வகைமைகள் நிறைந்துள்ளன. இக்காடுகளில் 390 பில்லியன் அளவுள்ள மரங்கள் காணப்படுகின்றன.
அமேசான் காடுகளில் சுதேசிய இனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இற்றைக்கு 32000-39000 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுசிறு குடியிருப்புகளினை அமைத்து கொண்டு இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இக்காடுகளில் 12.5% ஆன சுதேசிய இனங்கள் வாழ்கின்றனர். செவ்விந்தியர்கள் 450000 பேரும், இக்காட்டுக்கே உரிய 450 இனங்களும் பிரேசிலில் வாழ்கின்றனர். இவ் இனங்களில் Yanomami, Yagua, Huaorani, Riberenos ஆகியன முக்கியம் வாய்ந்த இனங்களாகும்.
உலகின் இயற்கை சொத்தான அமேசான் காடுகள் இன்று மக்களின் செயற்பாடுகள் காரணமாகவும், இயற்கையின் சீற்றம் காரணமாகவும் அழிக்கப்பட்டு வருகின்றது. இக்காடுகள் 90-140 பில்லியன் மெட்ரிக் தொன் காபனினை சேமித்து வைத்துள்ளது. அத்துடன் இக்காட்டினை மூலவளமாக கொண்டு 34 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இக்காடுகள் 2001-2012 ஆம் ஆண்டு வரை வருடாவருடம் 1.4 மில்லியன் ஹெக்டேயர் அழிக்கப்பட்டு வந்தது.
இதில் குறிப்பாக பிரேசில், பேரு, பொலிவியா ஆகிய பகுதிகளில் 17.7 மில்லியன் ஹெக்டேயர் அழிக்கப்பட்டுள்ளன. இக்காடழிப்பானது 2030களில் 48 மில்லியன் ஹெக்டேயர் ஆக அழிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் நாம் இவ் அளப்பரிய சொத்தினை பாதுகாப்போம்.
நேற்றில் இருந்து ஏற்பட்ட காட்டித்தீ உலகின் மிகப்பெரும் காட்டுத்தீ அழிவாக புதிய வரலாற்றை நிலைநாட்டியுள்ளது. இவ்வுலகின் சுவாச வாய்வின் இருப்பு கேள்விக்குறி ஆகின்றது....
No comments:
Post a Comment