வேறு என்ன????
திரும்பல் அசைவுதான்
இதற்கு முன்னரும் இதுபற்றி தொட்டால் சுருங்கி இலை எவ்வாறு மூடுகிறது என்ற வினாவிற்கு இதுபற்றி சுருக்கமாக கூறினேன்.(http://www.mutur-jmi.com/2018/12/blog-post_12.html) இருந்தாலும் இதில் விரிவாகவே நோக்குவோம்.
உயிரின அசைவு முறைகள்

திருப்ப அசைவுகளில் நேர், மறை நிலைப்பாடுகள் உண்டு. உதாரணமாக வேர்கள் புவியீர்ப்பு நோக்கியும் தண்டு புவியீர்ப்பை எதிர்த்தும் வளரும். அதுபோன்று ஏராளமான உதாரணங்கள்.
சூரியகாந்தி மலரும் இவ்வாறான ஒரு செயற்பாட்டையே காண்பிக்கும். அது ஒளியை நோக்கிய திரும்பல் அசைவு (Heliotropism). பொதுவாக திருப்ப அசைவுகள் வளர்ச்சியை நோக்கிய அடிப்படையை கொண்டிருக்கும். அதுபோல சூரியகாந்தி மலரின் அசைவும் தாவர தண்டின் வளர்ச்சியை நோக்கியதே....

தாவரங்களின் ஒவ்வொரு பகுதியும் சூரிய ஒளிக்கு ஏற்ப திருப்ப அசைவு மேற்கொள்ளும். சூரியகாந்தியைப் பொறுத்தவரையில் பூக்களே அந்த அசைவை மேற்கொள்கின்றன. இதனை Floral Heliotropism என்போம்.
தண்டின் வளர்ச்சியை தாண்டி அவைகள் மகரந்த வளர்ச்சிக்குத் தேவையான வெப்பமும், மகரந்த மணிகளின் ஊட்டத்து, சூல்பிடிக்கத் தரமான விதை உற்பத்திக்காகவும் இவ்வாறு சூரியஒளியை நோக்கித் திரும்புகின்றன.
இரவில் திரும்புவது எவ்வாறு?
காலையில் சூரியனைப் நோக்கி இருக்கும் மலரானது, மெதுமெதுவே சூரியனோடு சேர்ந்து உச்சிக்குத் திரும்பி மாலையில் மேற்கே தலை கவிழும்பொழுது சூரியகாந்திச் செடியின் தண்டின் கிழக்குப் பகுதி வளர்ச்சி பெறுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லாத போது தண்டின் மேற்குப்பகுதி வளர்ந்து பூவை கிழக்கு நோக்கித் திரும்ப வைக்கின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக மலர்கள் முதிர்ச்சி அடையும் வரை நடைபெறும்.

இதன் மூலம் சாதாரண நிலையை விட, 10% முதல் 15% வரையிலான சூரிய ஒளி அதிகப்படியாக உள்வாங்கப்படுகின்றது. எல்லாம் மலரின் மகரந்தங்கள் வளர்ச்சி பெறும் வரையில் அல்லது விதை சூல்பிடிக்கும் வரையில் மட்டுமே இவ்வசைவை காண்பிக்கும். அதன் பின்னர் சூரியகாந்தி மலரும் கிழக்குப் பக்கம் நோக்கியபடியே தலை சாய்ந்து நிற்கும்.
No comments:
Post a Comment