
பண்டைய தொப்புள்கொடி மருத்துவம்

அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காயவைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் நாட்டு வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடியில் காணப்படும் தூளை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் குணமாகிவிடும்.

மூலவுயிர் கலங்கள் (Stem Cells) என்று அழைக்கப்படும் முதன்மை கலங்கள் மூலமாகவே எமது உடலில் காணப்படும் அனைத்து கலங்களும் தோற்றம் பெற்றுள்ளது. இக்கலங்கள் குழந்தை கருவுறும் காலத்தில் தோற்றம்பெறும் அடிப்படையான கலங்கலாக காணப்படும். இவ்வாறான காலங்கள் அதிக செறிவாக தொப்புள்கொடி பகுதியில் காணப்படும். இது குறித்த குழந்தையின் உடலில் காணப்படும் கலங்களை மீளுருவாக்கும் திறன் கொண்டவை என்பதை அண்மைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.
தொப்புள்கொடி மருத்துவம் என்றா என்ன?
தொப்புள்கொடிகளை கொண்டு மருத்துவ சிகிச்சை செய்யும் முறையே இது. அநேக நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் தொப்புள்கொடி (Umbilical cord) பகுதியினை காப்பு செய்யும் (Cord blood banking) நடைமுறை வழக்கிற்கு வந்துள்ளது. இவ்வாறு காப்பு செய்யும் தொப்புள்கொடிகள் குறித்த நபரின் தனித்துவ அடையாளமாக பேணப்படும்.


1. குறித்த நபரின் அடிப்படை கலத்தை கொண்ட பகுதி ஆனதனால் சிகச்சை முறைக்கு சாதகமான இரத்த வகை மற்றும் கல வகையை கொண்டிருக்கும்.
2. விரைவாக பெருக்கமடையும் கலங்கள் அதிகம் இதில் காணப்படுவதனால் காயம் ஆறுதல் விரைவுபடுத்தப்படும்.
3. நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இக்கலங்களில் காணப்படும்.
4. எல்லா வகையான கலங்களையும் தோற்றுவிக்கும் திறன் உண்டென்பதனால் உடலின் எப்பாகத்திலும் இக்கலங்களை பயன்படுத்த முடியும்.
5. DNA பகுப்பாய்வில் இக்கலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
தேடல் வலைதளங்கள்
https://www.acog.org/Patients/FAQs/Cord-Blood-Banking?IsMobileSet=false
https://www.cryo-cell.com/cord-blood-banking
https://www.nature.com/articles/stemcells.2007.23
https://www.closerlookatstemcells.org/stem-cells-medicine/
https://www.closerlookatstemcells.org/stem-cells-medicine/nine-things-to-know-about-stem-cell-treatments/
No comments:
Post a Comment