மலைகள் பற்றி மிகத்தெளிவான விளக்கம் “புவி” (The Earth) எனப்படும் நூலில் காணப்படுகிறது. இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவரானவரும், அமெரிக்க விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பணியாற்றியவரும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரினின் அறிவியல் ஆலோசகருமான ஃபிராங் பிரஸ் என்பவர் மலைகள் பற்றியும் அவற்றின் தொழிற்பாடுகள் சம்மந்தமாகவும் அவர் பின்வருமாறு விளக்கினார்.
இத்தகைய அறியவகை உண்மைகளை 1960ஆம் ஆண்டின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட புவித்தட்டு கட்டமைப்பு கொள்கைகளின் மூலமாகவே நாம் அறிகின்றோம். மலைகள் என்பவை பூமியின் மேலொட்டை அசையாது உறுதிமிக்க பிணைப்பாக வைத்திருக்கும் செயற்பாட்டினை மேற்கொள்கின்றது. மேலும் இவை பூமியின் மேற்பரப்பில் தெரியும் அளவை விடவும் மிகப்பெரும் அளவு பூமியின் ஆழத்திற்கு (வேர்கள் போன்று) ஊடுருவிக் காணப்படும். அவ்வேர்கள் உதாரணமாக நாம் மரத்தைப் பிளக்க பயன்படுத்தும் ஆப்பு (Wedge) வடிவத்தை ஒத்ததாகும்.

பொதுவாக மலைகளைப் பொருத்த மட்டில் இரண்டு புவித்தட்டுக்கள் எதிர் எதிர்திசையில் ஒன் றோடொன்று மோதுவதனூடாக தோற்றம் பெறுகின்றன. இதில் அடர்த்தியான புவித்தகடானது கீழ்ப் புறமாக தள்ளப்பட அடர்த்தி குறைவான தகடு மேற் புறமாக மடிப்புத் தடங்களையும் (Folding) உண்டு பண்ணும். இவை பின்னர் மலைகளாக தோற்றம் பெரும். மேலும் எரிமலை வெடிப்புக் காரணமாக வெளிவருகின்ற மக்மா குழம்புகள் குளிர்ச்சியடைவதன் மூலமும் மலைகள் உருவாகும் வாய்ப்புக்களுண்டு.

பூமியானது பல்வேறு படைகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். இதில் மேற்புறக்கட்டமைப்பு மெல்லிய உறுதியான படையாகும். உட்புறமுள்ள படை ஓரளவு உறுதியானதுடன் மிகவும் தடிப்பான கட்டமைப்பாகும். மிகவும் உட்புறக் கட்டமைப்பு உயர் வெப்பநிலையுடைய திரவநிலை கூறுகளைக் கொண்டதாகவும் காணப்படும். உதாரணமாக ஒரு முட்டையின் கட்டமைப்புக்கு மிகவும் பொருத்தமாக அமையும். திரவநிலையில் கொதித்துக்கொண்டிக்கும் மக்மாக் குழம்புகள் பூமியின் நலிவான பகுதியூடாக வெளிவர வாய்ப்பாக அமையும். பூமியானது மிகவேகமாக சுழன்று கொண்டு பயணிப்பதன் காரணமாக உட்புற கூறுகள் வெளிப்புறமாக வீசப்படவும் வாய்ப்புண்டு. இதனை தடுக்க மேற்புற அமைப்பு உறுதியானதாக இருப்பது மிக அவசியமாகும். இச்செயற்பாட்டையே மலைகள் மேற்கொள்கின்றன என்று தற்போதைய மண்ணியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

மலைகளை பற்றியும் அதன் செயற்பாடுகள் குறித்தும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிப்பட்ட புனிதமிக்க ஒரு நூல் பின்வருமாறு எடுத்துக்கூறுகின்றது.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை (இப்பூமிக்கு) முளைகளாக ஆக்கவில்லையா” (அல்-குர்ஆன் 78:6~7)
இங்கே பயன்படும் அரபு வார்த்தை “அவ்தாத்” என்பதாகும். இதன் பொருள் பாலைவன மணல் மேற் பரப்பில் அமைக்கப்படும் கூடாரத்திற்கு அறையப்படும் “ஆப்பு” (Pegs/ Stakes/ Wedge) என்பதாகும். இன்னும் அல்-குர்ஆன் இதுபற்றி இவ்வாறும் கூறுகின்றது.
“நாம் பூமியை விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப்படுத்தினோம்; இன்னும் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்” (அல்-குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 79:32 )
“இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்” (அல்-குர்ஆன் 27:88)

மேற்கூறிய வசனத்தில் பயன்படும் “தமர்ர” எனப்படும் வார்த்தைக்கு அரபிய மொழிபெயர்ப்பு “நகர்வு” (Drift) என்பதாகும். இவ்வசனமானது மலை களை பறந்தோடும் மேகங்களுக்கு ஒப்பானதாக எடுத் துரைக்கப்படுகின்றது. இது குறித்து தற்போதைய புவியியல் மற்றும் மண்ணியல் நிபுணர்கள் கூறுகையில் “சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் புவியில் இருக்கும் நிலப்பகுதிகள் ஒன்றிணைந்து ஒரு தொகுதியாகவே காணப்பட்டது. இவ்வொன்றிணைந்த தொகுதியினை “பஞ்சியா” (Pangea) என்றழைத்தனர். புவியின் சுழற்சி காரணமாக பஞ்சியா தொகுதி ஒன்றிலிருந்து ஒன்று விலகி நகர்ந்தன என்றும் விபரிக்கின்றனர்”
இக்குறித்த செயற்பாட்டை நவீன விஞ்ஞானிகள் கண்ட நகர்வு (Continental Drift) என்று அழைக்கின்றனர். இதன் காரணமாகவே பூமியின் தற்போதைய மேற்பரப்பு வேறுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கண்ட நகர்வு காரணமாகவே மலைகள் தோற்றம் பெறுவதுடன் அவைகள் வளர்ச்சி அடையவும் வாய்ப்பாக அமைகின்றது. மேலும் சில கடற்பகுதிகள் விரிவடைகின்றமையும் (expanse) தெரியவந்துள்ளது.
இதற்கு உதாரணமாக அத்திலாந்திக் சமுத்தி ரத்தினை குறிப்பிட முடியும். இதனால்தான் நீர் மற்றும் நிலம் பகுதிக்கான விகிதம் மாறுபடக்கூடிய வாய்ப்பாக அமைகின்றது. சுமார் வருடமொன்றுக்கு 3cm அளவான கண்டத் தகடுகள் நகர்வுறுகின்றன என்று நவீன புவியியல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அல்-குர்ஆன் மேகங்களின் நகர்வை குறித்து மலைகளை ஒப்பிட்டதற்கான காரணம் மேகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எவ்வாறு வானில் விலகி நகர் கின்றனவோ அவ்வாறாகவே பூமியின் புவித்தட்டுக் களும் (கண்டங்கள்) பூமியின் மேல் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பதாகும். இவ்வாறான அறிவியல் உண்மையானது 20ஆம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டது. இது குறித்த உண்மையினை எவ்வாறு 14ங்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாரால் கூறியிருக்க முடியும்?
No comments:
Post a Comment