Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 21, 2019

உறைநிலைக்குளிர் உறக்கம் (Cryogenic Sleeping)

Image result for Cryogenic Sleeping
உறைநிலைக்குளிர் உறக்கம் அல்லது கடுங்குளிர் உறக்கம் என்று இம்முறையை பற்றி பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றது. அதுபற்றி இப்பதிவில் சற்று நோக்குவோம். க்ரையோஜெனிக் என்ற சொல் க்ரையோஸ் (kryos) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உறைநிலைக்குளிர் (Icy cold) பொருள். இதில் இருந்தே இப்பெயர் தோற்றம் பெற்றது. இப்போதைக்கு நாம க்ரையோஜெனிக் உறக்கமென்றே ஒலிபெயர்த்துக்கொள்வோம். நுட்பப்படி இதனை Cryonic Suspension என்று சொல்வார்கள்.
2014 இல் வெளிவந்த Interstellar திரைப்படத்துடன்தான் இவ்வறிவியல் பற்றி பெரும்பாலானோர் பேசத்தொடங்கினார்கள். இதற்கு முன்னர் 1993 - Demolition Man, 1992 - Forever Young என்ற திடைப்படங்களில் கூட இதனைபற்றி காட்சிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக The Matrix III, Island, Captain America I, Oblivion ஏன் அண்மையில் வெளிவந்த Passengers திரைப்படத்தில் தெளிவாக இதுபற்றி காட்சிப்படுத்தியுள்ளார்கள். இவற்றை தாண்டி 1819ல் Washington Irving என்பார் எழுதிய Rip Van Winkle என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிகாட்டியிருப்பார்.
Image result for Cryogenic Sleepingஉறைநிலைக்குளிர் உறக்கம் என்றால் என்ன? 
க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சடாரென்று நிறுத்தி வைப்பது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும். அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant).
எப்படிச் செய்வது? 
இனிதான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும். உடலையும் சடாரென்று குளிர்நிலைக்குக் கொண்டு போய்விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும். அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கிவிட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற்கலவையை உட் செலுத்துவார்கள். ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectantயை உற்பத்தி செய்து கொள்ளும்.

Image result for CryogenicGlycols  எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும். எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும். எத்திலின் க்ளைக்கால் ஆட்டோமொபைலில் உள்எரி எஞ்சின்களில் குளிர்விப்பானாக தண்ணீருக்குப் பதிலாகவோ அல்லது தண்ணீருடன் கலந்தோ பயன்படுத்தப்படும். இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.
ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறைநிலைத்தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும். எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள். உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள். இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப்படுத்தப்படவில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.
Image result for Cryogenic sleepமேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறைநிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள். எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்னவென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பதுதான். இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன் ஆழ்குளிர் நிலைக்கு (Deep Cooling without Freezing) உட்படுத்தி வளர்சிதை மாற்றம் நிகழ்வதில் இருந்து நிறுத்தி வைக்கும் முறைக்குப் பெயர்தான் Vitrification.

அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது. அதற்குப் பின்னர் -196°Celcius வெப்பநிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள். ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர்நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.

Image result for Cryogenic sleep wecap
அவ்வளவுதான் க்ரையோனிக் சஸ்பென்ஷன். ஆனால், திருப்பி உயிர்ப்பிக்கும் நுட்பம்தான் இன்னும் நமக்குக் கைவரப்பெறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்று விஞ்ஞானிகளும் கூறிவிட்டனர். மீளுயிர்ப்பிப்பதில் என்னவொரு கடினம் என்றால், சரியான வெப்பநிலைக்கு படிப்படியாக உடல் செல்களைக் கொண்டு வராவிட்டால், பனிப்படிகங்கள் உருவாகி செல்களை விரிவடையச் செய்து சிதைத்துவிடும் என்பதுதான். ஆனால், நானோ தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டால், மிக நுணுக்கமாக அணுஅளவிலே போய்க்கூட செல்களைப் பாதுகாப்பாக மீளுயிர்க்கச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.
Image result for Cryogenic foodக்ரையோனிக் சஸ்பென்ஷன் பயன்பாடுதான் என்ன?
தற்போதைய மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத, ஆனால், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் அதி தீவிரமாக இருக்கும்பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால், பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.
தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspensionல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டப்படி இறந்துவிட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?
Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக்கொள்வதுதான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன்தான் இருக்கும். நம் உடல் அழிந்துபட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது. நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்திவைக்கப்படும். அப்படியொரு செயல்பாடுத்தான் இதில் மேற்கொள்ளப்படுகின்றது.
உணவு பதப்படுத்தல் முறைமையில் இது தற்காலங்களில் விருத்தியடையும் ஒரு தொழினுட்பமாகும்.

Related image
மனிதர்கள் உறைநிலைக்குளிர் உறக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள் 
1. Dr. James Bedford, உளவியல் பேராசிரியர்
2. Dick Clair Jones, தொலைக்காட்சி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
3. Thomas K Donaldson, கணிதவியலார்
4. Fereidoun M. Esfandiary (FM-2030), எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் மீவுமனிதத்துவச் சிந்தனையாளர் (Transhumanist Philosopher)
5. Dora Kent, Alcor Life Extension Foundationன் ஒரு உறுப்பினரான Saul Kent என்பாரின் தாய்.
6. Jerry Leaf. Alcor Life Extension Foundationன் துணைத் தலைவர்
7. Ted Williams, பேஸ்பால் விளையாட்டு வீரர்
8. John Henry Williams, Ted Williamsன் மகன், இவரும் பேஸ்பால் விளையாட்டு வீரர்.
9. Walt Disney, கார்ட்டூனிஸ்ட், திரைப்படத் தயாரிப்பாளர், அசைபடத் தயாரிப்பாளர், குரல் நடிகர் மற்றும் தொழிலதிபர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages