இந்நிலை தொடர்ந்தும் ஆதிக்கம் பெருமானால் நாட்டின் பல்வேறுபட்ட மக்களிடையில் எதிர்பாராத இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் சித்தாந்த சிந்தனை விருத்தியுருவதோடு மட்டுமன்றி அது துரித வளர்ச்சியும் காண்பதில் ஐயப்பாடில்லை. இதன் தேறிய விளைவாக அரசியல் தொடக்கம் ஆன்மிகம் வரை பரவலாக்கம் பெற்று நாட்டின் ஒட்டுமொத்த அடித்தளத்தையும் ஆட்டம்காண வைக்க வழிகோலும்.
The cobra effect - occurs when an attempted solution to a problem makes the problem worse, as a type of unintended consequence. The term is used to illustrate the causes of incorrect stimulation in economy and politics.
நாகப்பாம்பு விளைவு என்றால் "ஒரு சிக்கலுக்கு வழங்கப்படும் தீர்வானதே அச்சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் வலுப்படச் செய்யுமென்றால் அதுவே நாகப்பாம்பு விளைவு எனப்படும். இது எதிர்பாராத விளைவுகளுக்கு (unintended consequence) எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும்"
உதாரணமாக சிகரட் புகைப்பவனை சிகிரட் புகைப்பதை தடை செய்தால் எவ்வாறு அவன் கஞ்சா புகைக்க பலகுவனோ அதுபோலவே ....

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில், தலைநகர் டில்லியில் நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காலம் அது. நாகப்பாம்புகள் கடவுளாக வணங்கப்பட்ட மக்களிடையே யாரும் அதனைக் கொல்வதில்லை என்பதால் அதன் எண்ணிக்கைகள் கணக்கின்றி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இதனைப் பார்த்த அரசு அப்பாம்புகளைக் கொல்ல ஊக்குவிக்கும் விதமாக அதிகஎண்ணிக்கையில் பாம்புகளைக் கொன்று வந்து தருபவர்களுக்கு எண்ணிக்கைகளுக்கு ஏற்றவாறு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. நல்ல திட்டமாகத்தான் இருந்தது. பாம்புகளின் எண்ணிக்கையும் குறையத் துவங்கியது. ஒரு கட்டத்தில் மக்கள் கொல்வதற்கு பாம்புகள் இன்றிப் போயின.
நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்பட்ட ஒரு கூட்டம் மாற்று வழி ஒன்றைக் கண்டறிந்தது. நாகப்பாம்புகளை அதிகளவில் வளர்க்கத் துவங்கியது. இது எல்லாவிடத்தும் பரவி, அவரவர் நாகப்பாம்புகளை வளர்த்து வளர்த்து அரசிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொண்டனர். இது தெரியவந்த அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.
இனி பரிசுப்பணம் கிடைக்காது என்று தெரிந்த மக்கள், வளர்த்து வந்த பாம்புகள் அனைத்தையும் வெளியே விட்டு விட்டனர். விளைவு.... மீண்டும் ஊருக்குள் நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தே இருந்தது.
ஆக, நாகப்பாம்புகளைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே அதன் எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாக இருந்ததால் இது போன்ற நிகழ்வுகளுக்கு நாகப்பாம்பு விளைவு என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
No comments:
Post a Comment