இதைவிட இன்னொரு நிலைப்பாட்டை மூளை காண்பிக்கும். அது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்சிப்படுத்தும் பிரம்மை. இந்த நிலைப்பாட்டைதான் குறித்த விடீயோவிலும் நாங்கள் காண்கின்றோம். கேள்விபரிக்கும் மூன்று தேர்வு நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட குறித்த வீடியோ வித்தையை விபரிக்க முயற்சிக்கின்றேன்.

பல் தேர்வு முறை காணப்படும்போது எதனை எமது மூளை தேர்வு செய்யும் என்பதை விளக்கும் ஒரு கோட்பாடு.
உதாரணமாக பல நிறங்களில் இனிப்பு மிட்டாய்கள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மிட்டாயை தேர்வு செய்ய உங்களை பணித்தால் நீங்கள் கண்டிப்பாக பச்சை, நீலம் இரண்டு நிறங்களில் ஒன்றையே அதிகம் தேர்வு செய்வீர்கள். இதற்கான காரணம் உங்கள் கண் குறித்த இரு நிரங்களுக்கு அதிக நாட்டம் கொண்டது என்பதனால்.
Choice Blindness -
நேர்த்தியான ஒன்றை தேர்வு செய்யும் கோட்பாடு.
அதாவது பல தேர்வுக் காரணிகள் இருக்கும்போது அவற்றில் நேர்த்தியான சிறப்பான ஒன்றை தேர்வுசெய்யும் நிலைப்பாட்டை இது குறிக்கும்.
Decoy Effect -
ஒப்பீட்டு முறைமையில் சாதக நிலைப்பாடு ஒன்றை தேர்வுசெய்யும் கோட்பாடு. உதாரணமாக 100, 90, 99 ரூபாய்களில் ஒரே பொருட்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளது என்றால் நீங்கள் 99 ரூபாய் பொருளையே தெரிவு செய்வீர்கள்.
நேற்று Whatsapp இல் ஒரு வீடியோ வந்தது. 12 இலக்கத் தொகுதிகொண்ட ஒரு Video அது. அதில் நீங்கள் மனதிற்குள் நினைக்கும் எண் சற்று நேரத்தின் பின்னர் மறைந்துவிடும். நீங்களும் முயற்சித்து பார்க்கலாம் என்பதே அந்த Video.... இந்த வீடியோ பார்த்ததுமே இலகுவாக அவ்வீடியோவின் நுட்ப முறையை கண்டுகொள்ள முடிந்தது. இது ஏற்கனவே நான் படித்த ஒரு விடயதானமே. அதுபற்றி பார்ப்போம்.
குறித்த வீடியோவில் முதல்பகுதியில் காட்சிப்படுத்தும் இலக்கச்சோடிகள் அனைத்தும் அடுத்த பாதியில் காட்டப்படும் இலக்கச்கோடியில் இருந்து மாறுபட்டு காணப்படும். இதனால் உங்கள் மூளை தான் நினைத்த இலக்கம் இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றது. இந்நிலைப்பாடு பெரும்பாலான சாதாரண மனநிலை கொண்ட நபர்களிற்கு நிகழும். இதுவே குறித்த வீடியோவின் இரகசியம்.
No comments:
Post a Comment