இதன் தாக்கம் அறிவுசார், துறைசார் மற்றும் ஏனைய சமூக பொறுப்புகள் சார் கடப்பாட்டில் இருந்து தூரமானதொடு முஸ்லிம் பெண்ணியல் சமூகத்தலைமுறை தோற்றம்பெற வழிகாட்டியது. இவ்வாறான சமூக பின்னணியில் தங்களின் கடமை, பொறுப்புகளை உணர்ந்த உலகும் போற்றும் தலைசிறந்த மங்கைகளாக இனங்காட்டி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அறிவார்ந்த வீரப்பெண்களை இப்பதிவில் நோக்குவோம்.
தவக்குல் கர்மான்
மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார்.
2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
இவர் அணிந்திருக்கும் ஹிஜாப் பற்றி பத்திரிக்கையாளர்கள் அவருடைய அறிவுத்திறனுக்கும், கல்வித்தகுதிக்கும் அது ஏற்றதாக உள்ளதா என கேட்ட போது அவர் கூறிய பதில்:
''பண்டைய கால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அவன் அறிவு வளர வளர அவன் ஆடைகளை அணியத் துவங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள எண்ணங்கள் மற்றும் நாகரிகத்தின் உச்சத்தை பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. ஆடைகளை மீண்டும் களைவது தான் பின்னடைவாகும்.''
உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான்.

இஸ்லாத்துக்காக போராடி பல கொடுமைகளை அனுபவித்து தன்னுடைய உயிரயே தியாகம் செய்து முஸ்லீம் சமூகத்தில் எழுச்சி ஏற்படுத்திய ஸைனப் அல் கஸ்ஸாலி (Zainab Al Ghazali) தான் இந்த இரண்டாம் படத்தில் இருப்பவர்.. இவருடைய வரலாற்றை படிக்கும் போது நம்மை அறியாமலே உள்ளம் கலங்கி கண்களில் கண்ணீர் ஓடும்..
அல் இக்வான் முஸ்லீமீன் இயக்கத்துடன் இணைந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டார்கள் .
அல் முஸ் லீமாத் என்ற பெண்கள் இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள் .
1965 ஆகஸ்ட் மாதத்தில் ஜமால் அப்து நாசரின் ஆட்சி காலத்தில் இக்வான்களுடன் தொடர்பு உள்ளது என்ற பெயரில் கைது செய்யப்பட்டு ஆறு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .
அன்று தொடக்கம் தன் வாழ்க்கையில் சந்திக்காத பெரும் பெரும் கொடுமைகளையெல்லாம் சிறைச்சாலையில் சந்தித்ததாக தன்னுடைய சிறைவாழ்க்கை பற்றி பேசும் “ அய்யாமுன் மின் ஹயாத்தி” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார் . அதை வாசித்தபோது உள்ளம் கலங்கி கண்களில் கண்ணீர் வடிந்தது..
அந்நூல் ’’எனது வாழ்வில் மறவாத நினைவுகள்’’ என்ற தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது .இந்நூல் கட்டாயம் ஒவ்வொரு முஸ்லீமும் வாசிக்க வேண்டிய தினமும் வீட்டில் இருக்க வேண்டிய ஓர் அருமையான நூலாகும்..
ஸைனப் அல் கஸ்ஸாலி அவர்கள் 03/08/2005அன்று தனது 88 வது வயதில் காலமானார்கள்..

இஹ்வானுல் முஸ்லிமீனின் பெரும் தலைவர்களில் ஒருவரான முஹம்மத் அல் பெல்தாஜியின் மகள் அஸ்மா அல் பெல்தாஜி தான் இந்த மூன்றாம் படத்தில் இருப்பவர். இவர் சிறு வயதிலேயே தன் உயிரை புரட்சிக்காக ஷஹீதாக்கியவர். வெறும் பதினேழு வயதில் தன்னுடைய உயிரையே தியாகம் செய்ததை நினைத்தாலே உடல் சிலிர்க்கின்றது.
யுவான் ரிட்லி
இந்த நான்காம் படத்தில் இருப்பவர் நம்மில் பலருக்கு நன்கு தெரிந்தவர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல் வாதி என பல பரிமாணங்களை கொண்ட யுவான் ரிட்லி அவர்கள்.
இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் இவர் கூறிய கருத்துக்கள் வியப்பில் ஆழ்த்தியது.
யுவான் ரிட்லி அவர்கள் கூறியது:
"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"
ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,
"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே., இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது..

ஐந்தாம் படத்தில் இருப்பவர் "ஹிஜாபிற்காக தன்னுடைய உயிரை நீர்த்த "மர்வா ஷெர்பினி".
எகிப்தைச் சேர்ந்த மர்வா ஷெர்பினி தனது பாடசாலைக் காலம் முதல் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும்விளங்கியவர்.
இந்த சகோதரியின் தியாகத்திற்காக இந்த சகோதரியை நினைவு கொள்ளும் வகையில் உலகம் முழுவதும் வருடா வருடம் உலக ஹிஜாப் தினமாக "செப்டம்பர் 4" அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
மரியம் ஜமீலா

சிறு வயதிலிருந்தே படிக்கும் ஆர்வம் கொண்டவர். முஸ்லிம் நாடுகளில் சில பிரபல முஸ்லிம்களுடனும், நியூயார்க்கில் மதம் மாறிய சில முஸ்லிம்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பிறகு அவர் இஸ்லாத்தை தழுவினார். பின்பு, மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதியின் எழுத்தாக்கங்கள் அறிமுகமாயின. அவரின் எழுத்தாக்கங்களால் ஈர்க்கப்பட்டு பல ஆக்கங்களை வெளியிட்டார் சகோதரி மரியம் ஜமீலா அவர்கள்.

எகிப்தை பூர்விகமாக கொண்ட டாலியா முஜாஹித், அமெரிக்காவின் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மதங்களுக்கான ஆலோசனை சபையில் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொதுப்பானவராக பதவி வகித்து வருகிறார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் முதல் முஸ்லிம் பெண்ணாக விளங்கும் டாலியா அமெரிக்காவிலுள்ள 10 மில்லியன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாக விளங்குகின்றார். கடந்த மூன்று தசாப்தங்களாக ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வரும் இவர் வியாபார நிர்வாக துறையில் முதுமானிப் பட்டத்தை பெற்றுள்ளதுடன் இரசாயன பொறியியல் துறையில் இளமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். தனது கல்வித் துறைகளுக்கு வெளியே சமூக அரசியல் செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்துவரும் டாலியா முஜாஹித் American Centre for Muslim Studies எனும் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் அதன் சிரேஸ்ட அரசியல் பகுப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னணி அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் கலாநிதி ஜோன் எஸ்பொசிடோவுடன் இணைந்து Who Speaks for Islam?, What a Billion Muslims really think? ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். இந்நூல்கள் ஆறு வருட ஆய்வு மற்றும் 35 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 50,000 இற்கு மேற்பட்ட நேர்காணல்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவையாகும்.

முஸ்லிம் பெண்களில் உடனடியாக ஏற்பட வேண்டியது மனப்பாங்கு மாற்றமே. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிவும் பக்குவமும் எமது பெண்களின் மூதனமாக வேண்டும்.
வாழ்க்கையில் தான் கற்ற பாடம் அதுவே என்கிறார் டாலியா.
இவர்களை போன்றவர்களின் வரலாற்றை படிக்கும் போது இக்கால பெண்கள் சமூகத்தில் பெறும் புரட்சி ஏற்படலாம்..
பெண்களாகிய நாம் படித்து விட்டுவிடாமல் நாமும் சமூகத்தில் இஸ்லாத்திற்காக முயற்சி எடுத்து போராடி பெரும் புரட்சி ஏற்படுத்த வல்ல இறைவன் துனையிருந்து உதவி செய்வானாக..
No comments:
Post a Comment