உயிரினங்கள் சில தமக்கேயான சில விசேட சிறப்பியல்பு மற்றும் ஆற்றல்களை கொண்டுள்ளது. உதாரணமாக நாய்கள் மோப்பசக்தி, கேட்டல் திறன், பூனைகள் சிறந்த பார்வைத்திறன், யானை சிறந்த நினைவாற்றல் என்று குறிப்பிடலாம்.
இஸ்லாமிய சமூகம் தங்களின் அன்றாட ஐவேளை இறைவனை நினைவூட்டும் கடமையான தொழுகையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கப்படும் முறையை அதான் (பாங்கு) என்று கூறுவோம். சமகாலங்களில் ஒவ்வொலிகளை ஒளிபேரிக்கிகள் கொண்டு வெளியீடு செய்கின்றார்கள். அவ்வாறான வேளைகளில் குறிப்பாக நாய்கள் ஊளையிடுவதை அவதானிக்க முடியும்.

குறித்த சூழலில் வாழும் நாய்களை நாங்கள் அவதானித்தால் அதான் ஒலிகள் ஒலிக்கப்படும் வேளைகளில் ஊளையிடுவது வழக்கமாக அமையும். இதற்கு இரண்டு வகையான அறிவியல் மற்றும் ஆன்மீக விளக்கங்களை முன்வைக்க முடியும்.
ஆன்மீக விளக்கம்
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். ( புகாரி : 608, முஸ்லிம் 634)
மேற்படி ஹதீஸ் அடிப்படையில் ஓடும் ஷைத்தான்களை நாய்கள் அவதானிப்பதனால் தான் அவ்வாறு ஊளையிடுகின்றது என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.
இதனை ஏற்றுகொள்ள எம்மிடம் ஆதாரமான சான்றுகள் இல்லாதபோதும் சில விலங்குகளின் நடத்தை கோலங்களை வைத்து ஓரளவு அனுமானிக்க முடியும். உதாரணமாக எறும்புகள் ஒரு மாதம் கழித்து பொழியவிருக்கும் மழைகளை முன்கூட்டியே அறிந்து தங்களை காத்துக்கொள்ளவும் தங்களின் உணவை பாதுகாக்கவும் தயாராகுகின்றது.
அறிவியல் விளக்கம்
நாய்கள் பொதுவாக தொடர்புகொள்ளும் ஒரு சமிக்கை ஆகவே ஊளையிடுதல் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. அதுமட்டுமன்றி நாய்கள் சிறந்த கேட்டல் புலம் கொண்ட ஜீவராணி. இதற்கு ஏற்றால்போல அதன் காதுகள் உள்ளக வெளியாக அமைப்பு விருத்தி பெற்று காணப்படுகின்றது. பொதுவாக நாய்கள் 40 Hz to 60,000 Hz கேட்டல் புலத்தை கொண்டுள்ளது. மனிதன் 20 Hz to 20,000 Hz வரை கேட்டல் உணர்வு கொண்டுள்ளான். அவ்வகையில் நாய்களினால் உயர்ந்த மீடிறன் கொண்ட ஒலிகளை இலகுவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.

குறிப்பாக நாய்கள் ஊளையிடும் நேரங்களை அவதானித்தால் சூழல் அமைதியாக உள்ளபொழுதாகவே காணப்படும். இவ்வாறான சூழலில் பாங்கு ஒலிகளை மட்டும் நாய்கள் உணர்வதனாலே நாய்கள் ஊளையிடுகின்றது. பகல்வேளைகளில் சூழலில் வெவ்வேறு ஒலி இரைச்சல்கள் சூழ காணப்படுவதனால் நாய்களினால் அதான் ஒலிகளை மட்டும் பிரித்து உணரமுடியாத நிலை காணப்படும்.
நாய்கள் சில அதிர்வு அலைகளிற்கும் உணர்திறனை காண்பிக்கும். வீட்டில் வளர்க்கும் நாய்களை சில பொழுதுகள் கட்டுப்படுத்த உயர் அதிர்வு கொண்ட ஒலியலை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது.
No comments:
Post a Comment