இது ஏன் ஏற்படுகின்றது என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?
சிலர் இதற்கு பதிலாக உடலில் உள்ள நீர் வெளியே செல்வதன் காரணமாக சுருக்கம் ஏற்படுகின்றது என்று கூறுவார்கள். இதனை விஞ்ஞானத்தில் திணிவுப்பாய்ச்சல் (Osmosis) என்று அழைப்போம்.
திணிவுப்பாய்ச்சல் என்றால் என்ன?
பதார்த்தங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்திற்கு கடத்தப்பட பரவல், திணிவுப்பாய்ச்சல் என்ற முறைகளில் நடைபெறும். இதில் திணிவுப்பாய்ச்சல் என்பது நீர்ச்செறிவு அதிகம் உள்ள இடத்தில் இருந்து நீர்ச்செறிவு குறைவான இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் இடம்பெயர்தல் ஆகும்.

நீரிலும் மேற்குறிப்பிட்ட திணிவுப்பாய்ச்சல் செயற்பாடு நடைபெறுமா என்றால் இல்லை. காரணம் எமது உடலின் உள்ளே நீர் அளவு கடலில் உள்ள நீரின் அளவை விட குறைவு. எனவே கடலில் உள்ள நீர்தான் எமது உடலிற்குள் செல்லவேண்டும். ஆனால் நாம் கூறுவது எமது உடலில் உள்ள நீர் கடல் நீருக்கு இடம்பெயர்வதனால் விரலில் சுருக்கம் உண்டாகின்றது என்பதை...
ஆக தவறான புரிந்துணர்வு...
ஏன் விரல் சுருக்கம் ஏற்படுகின்றது?
எளிய பதில் கூறுவதாயின் உராய்வு அதிகரிக்க வேண்டி...
சரி அது எவ்வாறு என்று பார்ப்போம்.
நீரினுள் பொதுவாக உராய்வு குறைவாக இருப்பதனால் ஒரு பொருளை பற்றி பிடிப்பதில் சிரமம் ஏற்படும். காரணம் எமது நீர் சிறந்த உராய்வு நீக்கி.

இதனால் நாம் நீரில் உள்ள வேளைகளில் எதாவது பொருளை பற்றிப்பிடிக்கவும் நீரினுள் வழுக்கி விழாமல் கால்களால் இலகுவாக நடந்து செல்லவும் இது உதவியாக அமையும்...
குறிப்பிட்ட நிலைப்பாட்டை நீங்கள் மகற்பேறு நிலைப்பாட்டின் போது பிறக்கும் குழந்தைகளில் கூட அவதானிக்கலாம்.
No comments:
Post a Comment