அந்தவகையில் அல்-குர்ஆனில் உள்ளடங்கிய ஓர் சில சொற்களைக் கொண்டு அச்சொற்களை ஒத்த சொற்களை இங்கே பதிவு செய்துள்ளேன். பலர் அல்-குர்ஆன் வெறும் வரலாறு, விஞ்ஞானம், சட்டம் சார் வெளிப்பாடுகளை மாத்திரம் உள்ளடக்கிய ஒன்று என்று வாதாடுகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறன்று. திருமறை குர்ஆன் வெவ்வேறு தலைப்புக்களில் தனது அறிவியல்சார் உண்மைகளை இவ்வுலகிற்கு வெளியிட்டாலும் பொதுவான விஞ்ஞானம் மற்றும் கணிதவியல் சான்றுகளையும் எமக்கு அருளியுள்ளது. அவ்வாறான சிலவற்றை இன்று பெரும் வியப்புடன் நவீன விஞ்ஞானம் நோக்குகின்றது.
இவ்வாறான அறிவியல் முன்னறிவிப்புக்களை எவ்வாறு அன்றைய யுகத்தில் பாலைவன மணலில் ஒட்டகத்தில் பிரயாணம் செய்த எழுத்தறிவு அற்ற ஒரு மனிதர் மூலம் மொழிந்திருக்க வாய்ப்புண்டு என்றும் அவர்கள் வியப்புடன் வினவுகின்றனர். இதற்கு அல்-குர்ஆன் கூறும் பதில் இவ்வாறு அமைகின்றது.
“நபியே! கூறும், அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன் தான் உங்களுக்கு விரிவானதும், விளக்கமானதுமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேத த்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (திருக்குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டது என்பதை நன்கு அறி வார்கள். எனவே நீரும் அவர்களைப்போன்று சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விட வேண்டாம்” (அல்-குர்ஆன் 6:114)
அவ்வாறான மனிதர்களின் வினாக்களுக்கும் இன்னும் சந்தேகங்கள் கொள்ளும் மானிடர்களிற்கும் விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளதே புனித அல்- குர்ஆனிய சொற்கணிதவியல் ரீதியாக மீட்டப்படும் வார்த்தைகளின் தொடர்புடைமை.
“என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல் வழியைக் காட்டும் அறிவுரைகள் வந்தேதீரும்” (அல்-குர்ஆன் 2:38; 3:160; 22:38, 24:55, 30:47, 40:51)



No comments:
Post a Comment