வினா இலக்கம் - 01 அல்குர்ஆன் கொண்டுள்ள மொத்த வசனங்கள் எண்ணிக்கை
இது கிருத்தவ மிஷனரிகளால் பரப்பப்பட்ட ஒரு பொய்யான தகவலாகும். அறியாமையின் காரணமாக முஸ்லிம்களில் பலரும் இதையே பரப்பி வருகின்றனர். பல இணையதளங்களில் பார்க்கும் போது கூட இப்பேற்பட்ட தவறான பதில்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் கூட நான் மேற்கூறியவாறு குர்ஆனில் மொத்தம் "6666" வசனங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
கிருத்தவ மத சாஸ்திரப்படி பைபிளில் தஜ்ஜாலின் குறியீடாக "666" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குர்ஆனோடு தொடர்பு படுத்தி நமது நபிகள் நாயகத்தை தஜ்ஜாலாக ( நவூதுபில்லாஹ்!) அந்தி கிருஸ்துவாக பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறான தவறான செய்திகளை பரப்பி உள்ளனர். இது சம்பந்தமாக கிருத்தவர்களை நாம் நம்முடைய கேள்விகளை கொண்டு வெகு சுலபமாக வீழ்த்தலாம்...
கிருத்தவர்களில் பெந்தகோஸ்தே பிரிவினர் தங்களுடைய புனித பைபிளில்
66 புத்தகங்கள் தான் கடவுளின் வார்த்தையாக நம்புகின்றனர். கிருத்தவர்கள் "6666" அந்திகிருஸ்துவோடு இணைக்கும்போது ஏன் "66" புத்தகங்களையும் இணைக்கக்கூடாது?
"666" வுடன் "6" சேர்க்கும் இவர்கள் ஏன் ஒரு "6" எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே!
2. பைபிளில் அந்திகிருஸ்துவின் எண் "666" என்று எழுதப்பட்டிருக்கும் புத்தகமான "வெளிப்படுத்தின வீஷேசம்" புத்தக்கத்தை முந்தைய கால கிருஸ்தவர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு மர்சியோன், ரோமை சேர்ந்த சியோஸ், அலெக்ஸ்ஸான்டிரியாவைச் சேர்ந்த டியோனிஸிஸ், சிரில் ஆஃப் ஜெருசலேம், போன்றவர்களாவர்.
3. இன்றுவரை கிழக்கு பகுதியில் உள்ள கிருத்தவ தேவாலயங்கள் இந்த "ரிவிலேஷன்" என்னும் புத்தகத்தை எற்றுக்கொள்ளவில்லை.
4. பெந்தகோஸ்தே கிருத்தவர்களின் மூத்த தலைவர் மார்ட்டின் லூதர் உட்பட பலரும் இந்த புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
5. பழைய கால பைபிள்களில் "666" என்பதற்கு பதிலாக "616" என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆக இவர்கள் குர்ஆனையும், ரஸூலையும் அந்திகிருஸ்துவோடு இணைப்பது அபத்தமாகும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆனின் மொத்த வசனங்கள் "6236" என்பது தான் சரியானதாகும். இது சிலரின் கருத்துக்களோடு சற்று மாறுபடும். சிலர் ஒவ்வொரு சூராக்களிலும் உள்ள "பிஸ்மில்லாஹ்....." யும் ஒரு வசனாமாக் எண்ணுவார்கள். எப்படி இருந்த போதிலும் குர் ஆனின் வசனங்கள் "6666" என்பது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். யார் எண்ணிவிடப்போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்பேற்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறார்கள்.
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அது உண்மைதானா என்று சரி பார்த்த பின்னர் பிறருக்கு தெரிவியுங்கள் என்று குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது. ஆகவே இத்தகைய தவறான பிரச்சாரத்தில் இருந்து ஏனைய முஸ்லிம்களையும் பாதுகாப்போம்!
666 சக்திவாய்ந்த தூதர் அல்லது சக்திவாய்ந்த மாயவன் அல்லது சீர்திருத்த வாதி என்ற பொருளில் ஒரு தூதர் வெளிப்படுவார் இறுதிக்காலத்தில். அவர் யூதர்களையும் கிருத்தவர்களையும் பாதுகாக்கும் பாதுகாவலராகவும் செயற்படுவார். மேற்படி நபர் இஸ்லாமிய பார்வையில் தஜ்ஜால் என்ற சக்திவாய்ந்த யூதன் என்பதாக பொருள்கொள்ள முடியும்.
மேற்படி 666 என்ற குறியீடுகள் உலகின் பிரபல சின்னங்களை அடிப்படையாக்கொண்டு அமையப்பெறும்.
மொத்தம் - 6236 வசனங்கள்.

சூரத்துல் பகரா 286
சூரத்துல் ஆல இம்ரான் 200
சூரத்துன் நிஸா 176
சூரத்துல் மாயிதா 120
சூரத்துல் அன்ஆம் 165
சூரத்துல் அஃராஃப் 206
சூரத்துல் அன்ஃபால் 75
சூரத்துத் தஃவ்பா129
சூரத்துல் யூனுஸ்109
சூரத்துல் ஹூது123
சூரத்துல் யூசுஃப்111
சூரத்துல் ராஃது43
சூரத்துல் இபுராஹிம்52
சூரத்துல் ஹிஜ்ர்99
சூரத்துல் நஹ்ல்128

சூரத்துல் கஹ்ஃப்110
சூரத்துல் மரியம்98
சூரத்துத் தாஹா135
சூரத்துல் அன்பியா112
சூரத்துல் ஹஜ்78
சூரத்துல் முஃமினூன்118
சூரத்துந் நூர்64
சூரத்துல் ஃபுர்கான்77
சூரத்துல் ஷுஹரா227
சூரத்துந் நம்லி93
சூரத்துல் கஸஸ்88
சூரத்துல் அன்கபூத்69
சூரத்துல் ரூம்60
சூரத்துல் லுக்மான்34

சூரத்துல் அஹ்ஜாப்73
சூரத்துல் ஸபா54
சூரத்துல் ஃபாத்தீர்45
சூரத்துல் யாஸீன்83
சூரத்துல் ஸாஃப்ஃபாத்182
சூரத்துல் ஸாத்88
சூரத்துஜ் ஜுமர்75
சூரத்துல் முஃமீன்85
சூரத்துல் ஹாமீம் ஸஜ்தா54
சூரத்துல் ஷூரா53
சூரத்துல் ஜுக்ரூஃப்89
சூரத்துல் துகான்59
சூரத்துல் ஜாஸியா37
சூரத்துல் அஹ்காஃப்35
சூரத்துல் முஹம்மது38
சூரத்துல் ஃபதஹ்29

சூரத்துல் ஃகாஃப்45
சூரத்துத் தாரியாத்60
சூரத்துத் தூர்49
சூரத்துந் நஜ்ம்62
சூரத்துல் கமர்55
சூரத்துர் ரஹ்மான்78
சூரத்துல் வாகியா96
சூரத்துல் ஹதீத்29
சூரத்துல் முஜாதலா22
சூரத்துல் ஹஷீர்24
சூரத்துல் மும்தஹினா13
சூரத்துல் ஸஃப்ஃபு14
சூரத்துல் ஜுமுஆ11
சூரத்துல் முனாஃபிக்கூன்11
சூரத்துல் தகாபூன்18

சூரத்துத் தஹ்ரீம்12
சூரத்துல் முல்க்30
சூரத்துல் கலம்52
சூரத்துல் ஹாஃக்ஃகா52
சூரத்துல் மஆரிஜ்44
சூரத்து நூஹ்28
சூரத்துல் ஜின்னு28
சூரத்துல் முஸ்ஸம்மில்20
சூரத்துல் முத்தஸ்ஸிர்56
சூரத்துல் கியாமா40
சூரத்துத் தஹ்ர்31
சூரத்துல் முர்ஸலாத்50
சூரத்துந் நபா40
சூரத்துல் நாஜியாத்46
சூரத்து அபஸ42
சூரத்துத் தக்வீர்29
சூரத்துல் இன்ஃபிதார்19
சூரத்துல் முதஃப்ஃபிஃபீன்36
சூரத்துல் இன்ஷிகாக்25
சூரத்துல் புரூஜ்22
சூரத்துல் தாரிக்17
சூரத்துல் ஆலா19
சூரத்துல் காஷியா26
சூரத்துல் ஃபஜ்ரி30
சூரத்துல் பலத்20
சூரத்துஷ் ஷம்ஸ்15
சூரத்துல் லைல்21
சூரத்துல் ளுஹா11
சூரத்து அலம் நஸ்ரஹ்8
சூரத்துத் தீன்8
சூரத்துல் அலக்19
சூரத்துல் கத்ரி5
சூரத்துல் பய்யினா8
சூரத்துஜ் ஜில்ஜால்8
சூரத்துல் ஆதியாத்தி11
சூரத்து அல்காரியா11
சூரத்துத் தகாஸுர்8
சூரத்துல் அஸ்ரி3
சூரத்துல் ஹுமஜா9
சூரத்துல் ஃபீல்5
சூரத்து குறைஷின்4
சூரத்துல் மாவூன் 7
சூரத்துல் கவ்ஸர் 3
சூரத்துல் காஃபிரூன் 6
சூரததுந் நஸ்ர் 3
சூரத்துல் லஹப் 5
சூரத்துல் இக்லாஸ் 4
சூரத்துல் ஃபலக் 5
சூரத்துந் நாஸ் 6
“அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணத்தினையே போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; இருந்தபோதும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்)” (அல்-குர்ஆன் 29:41)
புனிதமிக்க அல்-குர்ஆன் இதனைக் குறித்து பயன்படுத்துவதும் அரபு வார்த்தை “அன்கபூத்” என்பதாகும். இச்சொல் அரபு மொழியில் “பெண் சிலந்திப் பூச்சிக்கு” பயன்படுத்தப்படுவதாகும். இக்கருத்தையே தற்போதைய நவீன உயிரியல் ஆய்வுகளும் கூறுகின்றது.
http://www.mutur-jmi.com/2018/08/spider.html
வினா இலக்கம் - 03 அல்குர்ஆனில் குறிப்பிடப்படும் ஒரேயொரு பெண்ணின் பெயர்
அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். (அல்குர்ஆன் 3:36)
உங்க(ள் முன்னோர்க) ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:65)
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (அல்குர்ஆன் 34:12)
மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன். (அல்குர்ஆன் 11:84)
வினா இலக்கம் - 08 அல்குர்ஆன் கூறும் மூஸாவுடைய சமூகத்தாருக்கு வழங்கப்பட்ட நீர் ஊற்றுக்கள் எண்ணிக்கை
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள் (அல்குர்ஆன் 2:60)
வினா இலக்கம் - 09 அல்குர்ஆனில் கூறப்படும் நபி யூஸூஃப் அவர்களின் சகோதரனின் பெயர்
பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, யூஷுஃப் தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார். (அல்குர்ஆன் 12:70)
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ? (அல்குர்ஆன் 18:9)
வினா இலக்கம் 11 அல்குர்ஆனில் பெயர் கூறப்படும் நபிமார்களின் எண்ணிக்கை




உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும் (அல்குர்ஆன் 9:111)
வினா இலக்கம் 13 அல்குர்ஆனில் அதிக தடவைகள் பெயர் கூறப்படும் நபி

வினா இலக்கம் 14 அரபு எழுத்துக்கள் அனைத்தும் உள்ளடங்கிய வசனம் ஒன்றை கொண்ட அத்தியாயம்
ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன....... (அல்குர்ஆன் 3:154)
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கடுமையான பிறேயத்தனம் (ஜிஹாத் செய்யப்) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும் என்று) சொன்னவரைப் பார்த்து, “நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன்” எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களைத்தான் தேடுகிறீர்கள் என்றால், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் இதே நிலையில்தான் இருந்தீர்கள். பிறகு அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி புரிந்தான். எனவே, நீங்கள் தெளிவாகப் புரிந்து செயல்படுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் திண்ணமாகத் தெரிந்திருக்கின்றான். (அல்குர்ஆன் 4:94)
வினா இலக்கம் 1 6 அல்குர்ஆனிய குற்றவியல் தண்டனை அடிப்படையில் அவதூறு பேசுவதற்கான கசையடிகள் எண்ணிக்கை
எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள். (அல்குர்ஆன் 24:4,11)
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு "இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு" என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 6:136)
அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான். (அல்குர்ஆன் 27:39)
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (அல்குர்ஆன் 57:25)
http://www.mutur-jmi.com/2018/04/blog-post_19.html
வினா இலக்கம் 20 அல்குர்ஆன் கூறும் சொத்துப்பங்கீட்டு முறையில் ஆண் : பெண் விகிதம் முறையே
உங்கள் மக்கள் விஷயத்தில், (சொத்துப்பங்கீட்டில், ஓர்) ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான், ஆகவே, அவர்கள் (ஆணின்றி) இருவருக்கும் அதிகமாக பெண்களாக இருந்தால், அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு பாகம் (அப்பெண்களாகிய) அவர்களுக்குண்டு. மேலும் ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி உண்டு, இன்னும் (உங்களில் இறந்த) அவருக்குப் பிள்ளை இருந்தால், அவருடைய தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற) (சொத்)தில் ஆறிலொன்று உண்டு, (இறந்த அவருக்குப் பிள்ளை இல்லாமலிருந்தால், பெற்றோர் (மட்டும்) அவருக்கு அனந்தரக்காரர்களானால் அப்பொழுது அவருடைய தாய்க்கு மூன்றிலொன்று உண்டு, மற்ற இருபாகமும் தகப்பனுக்குரியதாகும், (இறந்த) அவருக்குப் (பல)சகோதரர்கள் இருந்தால், அப்பொழுது எதனை அவர் (மரண) சாசனம் செய்தாரோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ப் பின்னர் அவரின் தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு, உங்கள் தந்தைகளோ இன்னும் உங்கள் ஆண்மக்களோ இவர்களில் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கபபட்டுள்ள கட்டளையாகும், நிச்சயமாக அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)
(தலாக் சொல்லப்பட்ட மனைவியராகிய) உங்கள் பெண்களில் மாதவிடாயை விட்டு நம்பிக்கையிழந்து விடுகிறார்களே அத்தகையவர்கள் (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது பற்றி நீங்கள் சந்தேகப்பட்டால் அப்போது அவர்களின் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும், (அவர்களில் சிறார்களுக்கும், பருவமடையும் வயதை அடைந்தும் இதுவரையில்) மாதவிடாயே ஏற்படாதவர்களுக்கும் (இவ்வாறே இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.) இன்னும் கர்ப்பமுடையவர்கள் - அவர்களின் (இத்தாகால) தவணையானது, அவர்களின் கர்ப்பத்தை வைத்தல் (பிரசவித்தல்வரை) ஆகும், மேலும் எவர், அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு அவரின் காரியத்தில் அவன் எளியதை ஆக்குவான். (அல்குர்ஆன் 65:4)
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தினர், (மதீனா வாசிகளிடம்,) “யஸ்ரிப் வாசிகளே! (யுத்தகளத்தில்) உங்களுக்குத் தங்குதல் இல்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினரோ, “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன” என்று கூறி, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாமலிருந்தும், (அங்கிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள், (அங்கிருந்து) வெருண்டோடுவததைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் நாடவில்லை. (அல்குர்ஆன் 33:13)
வினா இலக்கம் 24 அல்குர்ஆன் கூறும் "முதஷாபிஹாத்" வசனங்கள் என்றால் என்ன
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 3:7)
No comments:
Post a Comment