Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 3, 2019

இரவில் ஒளியுள்ள இடத்திற்கு ஏன் பூச்சிகள் வருகின்றது? (Moths around a light bulb)


Related image
பூச்சிகளை ஒளி நாட்டம் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒளியியல் நாட்டம் கொண்டவை (Positively Phototaxic), ஒளியியல் நாட்டம் அற்றவை (Negatively Phototaxic).
ஒளியியல் நாட்டம் அற்றவைகளை பற்றி எமக்கு தேவையில்லை. ஒளியை நோக்கி வரும் பூச்சிகளை மட்டும் பார்ப்போம். பல பில்லியன் வருடங்களாக, அதாவது செயற்கை ஒளி, ஒளி மூலகங்கள் கண்டுபிடிக்கப்படாத அதிபழங்காலத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியில் தங்களைத் தகவமைத்துக்கொண்ட பூச்சியினங்கள் அவை. இவ்வாறான உணர்திறன் பூச்சிகளிற்கு மாத்திரம் உரித்தானது இல்லை. மனிதன், விலங்கு, நுண்ணங்கி ஏன் சில தாவரங்களிற்கும் காணப்படுகின்றது. இதனால்தான் இருள் ஆனதும் எமக்கு தூக்கம் வருகின்றது. அதுபோல சூரியனை கண்டதும் சூரிய காந்தி மலர் திரும்புகின்றது.

கண்களும் ஒளி நாட்டமும் 
Image result for Positively Phototaxic
ஒளிவாங்கி கலங்கள் (கட்புள்ளி - Eyespot) முதலில் ஜெலிபிஸ், கடல் அணிமணிகளில் தோற்றம் பெற்றது. இவை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியில் கண்களாக திரிபு பெற்றது. கண்களில் ஒளிவாங்கும் கலங்கள் (Photoreceptor Cell) மற்றும் நிரவுருமணிகள் (Pigment Cell) உள்ளடக்கியதாக காணப்படும். அதன் தொடர்ச்சியில் பூச்சிகளிற்கு இவை காணப்படுகின்றது. இக்கலங்கள் ஒளிச்செறிவு அடிப்படையில் அங்கிற்கு அங்கி வேறுபட்டதாக காணப்படும்.
சில பூச்சிகளுக்கு அக்கதிர்கள் செறிவான கதிர்களாக இருக்க வேண்டும். அதாவது உயர் ஒளிச்செறிவு (intensity) அதிகமாக இருக்கவேண்டும். உதாரணமாக ஈக்களால் இரவில் சரியாகப் பறக்கமுடியாது. அவைகள் சூரிய வெளிச்சத்திற்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டவைகள். சந்திரனின் ஒளிச்செறிவு அவற்றிற்குப் போதாது. அதுபோல அந்துப்பூச்சி இரவில் சந்திர ஒளிக்கு இயைப்பாக்கம் கொண்டவை. அவற்றால் சூரிய ஒளியினை தாக்குபிடிக்க முடியாது.
Related image
உதாரணமாக மனிதனை எடுத்துக்கொண்டால் மனிதனின் சமநிலை பேணுவதில் மனிதனின் உள்காதுக்குள்ள நத்தைச் சுருள் (Membranous labyrinth) என்னும் ஒரு பகுதியில் காணப்படும் Endolymph என்ற திரவம் பங்கெடுக்கும். இது எமது உடலின் சமநிலையில் உள்ளோம் என்பதை இத் திரவத்தினை அசைவைக் கொண்டு உணர்மயிர்கள் மூலமா நமது மூளை உணர்ந்து கொள்ளும். நீங்கள் சிறுவயதில் சுற்று இராட்டினத்தின் ஏறி விளையாடி இருப்பீர்கள். இறங்கிய பின்னரும் நீங்கள் சுற்றிக்கொண்டு இருப்பது போல சில நொடிகள் உணர்வீர்கள். இதற்கான காரணம் உங்களின் உட்காதில் உள்ள குறித்த பாயி அசைவில் இருப்பதுவே....
எமது சமநிலை எவ்வாறு உட்காதின் பாயி அசைவை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றதோ அதுபோல சில பூச்சிகளின் சமநிலை, திசையுணர்நிலைகள் சூரிய, சந்திர வெளிச்சத்தை நம்பி உள்ளது. அவ்வியற்கை ஒளிகள் நேர் மற்றும் தொடர்கதிர்களாகும். அக்கதிர்களை வைத்து பூச்சிகள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு பறக்கின்றன.

மின்குமிழ் ஒளியும் பூச்சி அசைவும்
Related image
இரவில் மின்குமில்களை அல்லது விளக்கை சூழ்ந்து பூச்சிகள் பறப்பது ஏன் என்று ஓரளவு ஊகிக்க முடிந்து இருக்கும் உங்களிற்கு.மின்குமிழில் இருந்து வரும் ஒளியானது தொடர் மற்றும் நேர்கதிர்கள் அல்ல. ஒரு குறித்த திசை இல்லாத ஒளி பரப்பும் கதிர்கள் அலைவுக் கதிர்கள் எனப்படும்.  இரவு நேரத்தில் விளக்கில் இருந்து வரும் ஒளியானது செறிவு மிக்கதாக இருப்பினும், நேர்கதிர்களாக இல்லாது அலைகின்ற காரணத்தால் அவ்வொளி எங்கெல்லாம் அலைகிறதோ அதனைக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பூச்சிகள் வட்டவடிவில் மின்குமிலை அல்லது விளக்கை சுற்றி வட்டவடிவில் தள்ளாடிப் பறக்கின்றன.
Image result for MOTHS AROUND A LIGHTஒளியும் அண்மைத் தொலைவில் இருந்து வருவதனால், நேர்கோட்டில் பறக்கிறோம் என்று அவைகள் ஒரு வளைவான பாதையைத் தேர்ந்தெடுக்கும். அப்படி ஒவ்வொரு ஒளிக்கதிருக்கும் ஒத்த வளைவான பாதைக்குத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்பொழுது அது நேர்கோட்டுப் பாதையாக அல்லாமல் வட்டப்பாதையாக அமைந்து விடுகின்றது.
Image result for why Moths around a light bulb
அப்படிப் பறக்குந்தோறும், அது ஒளிமூலகத்தை நோக்கிச் சென்று... வெப்பம் அதிகரிக்கக் கண்டு தம் திசையை மாற்றிக்கொள்கின்றன. அதையே நாம் பூச்சிகள் விளக்கைச் சுற்றிப் பறப்பதாகச் சொல்கிறோம். இது பூச்சிகளைப் பொறுத்தவரை ஒளிமாசு (light pollution). பாவம், அவைகளின் இயல்பு வாழ்க்கையில் நம் வசதிகள் குறுக்கிடுகின்றன. இதனால்தான் சில வேளைகளில் நாங்கள் மின்குமிழை சூழ வேப்பிலை கட்டி விடுகின்றோம். பூச்சிகளிற்கு ஒளிச்செறிவை மட்டுப்படுத்துக்கொள்ளவும் இன்னும் அலைவு கதிரை தடுக்கவும் இவ்வாறு உதவுகின்றோம்.... கிள்ளிவிட்டு தாலாட்டுகின்றோம் நாங்கள்....  அதுபோல உணவகங்கள் மற்றும் சில ஆய்வுகூடங்களில் பூச்சிகளை கொல்ல இம்முறையை அடிப்படையாக்கொண்ட Fly Catcher பயன்படுகின்றது.

தேடல் வலைத்தளம்
https://en.wikipedia.org/wiki/Phototaxis
https://www.pnas.org/content/113/19/5299
https://www.livescience.com/33156-moths-drawn-artificial-lights.html

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages