உணவு தட்டுப்பாட்டுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வு மக்கள் மன்றத்தில் பாரியதொரு திருப்திகர தீர்வாக இருந்தபோதும் மறுபுறம் GM உணவுகளினால் யூகிக்க முடியாத எதிர்கால பிரச்சினைகள் குறித்தும் மக்கள் ஐயம்கொள்ள எத்தனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மரபணு மாற்றியமைக்கப்பட்ட உணவு உற்பத்தி என்றால் என்ன?
குறித்த ஒரு அங்கியின் மரபணுவில் (DNA) எமக்கு விருப்பமான ஒரு இயல்பொன்றை இணைப்பு செய்தல் அல்லது விரும்பத்தகாத இயல்பொன்றை நீக்கம் செய்து அதற்கு மாற்றீடாக புதிய இயல்பொன்றை இணைப்பு செய்து புதிய தரமான விளைச்சலை அல்லது பயிர்வகையை அல்லது விலங்கு ஒன்றை தோற்றுவித்தல் ஆகும்.
மேற்படி செயற்பாட்டில் வான்வகை இயல்புகொண்ட அங்கி ஆரம்பமாக தேர்வு செய்யப்படும். வான்வகை அங்கி என்பது குறித்த பரம்பரை இயல்பு மாற்றம்பெறாத அங்கியை குறிக்கும். மேற்படி மரபணுவில் எமக்கு விருப்பமான ஒரு அல்லது பல இயல்புகளை இணைப்பு செய்து புதிய இயல்புகொண்ட தாவர/விலங்கு பேதத்தை உண்டாக்கி அதனூடாக புதிய அறுவடையை தோற்றுவித்தல்.
உதாரணமாக சோளம் கதிர் ஆரம்பத்தில் சிறிய அளவிலும் குறைவான சோளம் மணிகளையும் கொண்டு காணப்பட்டது. அதில் காலப்போக்கில் இயற்கையாக நிகழ்ந்த செயற்பாடுகள் காரணமாக ஓரளவு பெரிய கூடிய மணிகள் கொண்ட கதிர் உருவானது. ஆனால் தற்போது மரபணு மாற்றத்தினூடாக பெரிய, மிக அதிகமான மணிகள் கொண்ட கதிரை தோற்றுவிக்க வாய்பாகியது.

1973 இல், முதன் முதலில் Herbert Boyer, Stanley Cohen ஆகியோர் இவ்வாறான ஒரு பாக்டீரியாவை உருவாக்கினர். 1974 இல் Rudolf Jaenisch என்பவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலியை உருவாக்கினார். 1976 இல் தொடங்கப்பட்ட ஜீனன்டெக் என்ற நிறுவனம் மனிதப் புரதங்களை மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்க ஆரம்பித்தது. 1978 இல் இம்முறையால் இன்சுலின் தயாரிக்கப்பட்டது.
அனுகூலம், பிரதிகூலம்
மரபணு மாற்றிமைக்கப்பட்ட அங்கிகள் அல்லது உணவுகளினால் எமக்கு பல அனுகூலங்கள் கிடைக்கப்பெறும் அதேவேளை மறைமுகமாக பல பிரதிகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
அனுகூலங்கள்
கீழ்வரும் காரணங்களிற்காக மரபணு மாற்றிமைக்கும் அங்கிகள் தோற்றுவிக்கப்படுகின்றது.
1- அதிக விளைச்சல் - குறித்த பரப்பில் அதிகளவான அறுவடை பெற்றுக்கொள்ள முடிகின்றது
2- வித்துக்கள் அற்ற அல்லது மலட்டு வித்துக்கள் கொண்ட தாவர நாற்று உருவாக்கம் - திராட்சை, ஒரேஞ்ச், மற்றும் இன்னோறென்ன பழங்களில் வித்துக்கள் அற்றதாக தோற்றுவிப்பதோடு மட்டுமன்றி மலட்டு வித்துக்கள் என்று அடுத்த சந்ததியை உருவாக்கமுடியாத முளைக்காத வித்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
3- குறைந்த கால விளைச்சல் பெறுதல்
4- பீடை எதிர்ப்பு கொண்ட நாற்று உற்பத்தி - சில பூச்சி, புழுக்கள் என்பவற்றுக்கு எதிர்புடையதுமான தாவர வாசனை, நச்சு சுரப்பிகள் மற்றும் இலை, தண்டு சாறுகள் என்பன கொண்டிருக்கும்.
5- அதிக போசணை கொண்ட விளைச்சல் பயிர் உற்பத்தி - புரதம், எண்ணெய் மற்றும் விற்றமின்கள் கொண்ட தானிய உற்பத்தி மேற்கொள்ளுதல். உதாரணமாக பொன் அரசி (Golden Rice)
6- நைதரசன் பதிக்கும் தாவரங்கள் உற்பத்தி செய்தல் - இவை வளியிலுள்ள நைசரனை பதித்து போசணையாக பெறுவதனால் மேலதிக நைதரசன் பசளை தேவைப்படாது.
7- பால், முட்டை, இறைச்சி அதிகளவு பெற்றுக்கொள்ளல்
8- காலநிலை தாக்குப்பிடிக்கும் அங்கி உற்பத்தி
9- மிகயூட்டப்பட்ட ஒளித்தொகுப்பு மேற்கொள்ளும் பயிர்கள்
பிரதிகூலங்கள்
1- ஒவ்வாமை - GM உணவுகள் சிலவேளை சிலருக்கு ஒவ்வாமை தாக்கம் காட்டலாம்.
2- சூப்பர் களைகளின் செல்வாக்கு - GM மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து நடைபெறும் ஒரே சாதியுடனான மகரந்த சேர்கை காரணமாக மிகை எதிர்புகொண்ட சூப்பர் களைகள் உருவாகும். நாளடைவில் இது பெரும் பிரச்சினையாக அமையும்.

4- எதிர்புத்தன்மை கொண்ட பீடை வளர்ச்சி - குறித்த பயிர்களிற்கு எதிர்புத்தன்மை கொண்ட பீடை உருவாக்கம் காரணமாக பீடை நாசினிகள் பயன்பாடு அற்றதாக மாறுதல். அத்தோடு இதனை எதிர்க்க அதிக நச்சு தன்மையான பீடை நாசினிகளை அறிமுகம் செய்தல். இதனால் உணவினூடாக நச்சு உயிரியல் தேக்கம் காட்டுவதனூடாக மனிதர்களிற்கு ஆபத்தான நோய்கள் உண்டாகுதல்.
5- பாரம்பரிய மற்றும் வான்வகை அங்கிகள் அழிவடைதல் - அதிக போட்டிகொண்ட புதிய தாவரங்களினால் சூழலில் பாரம்பரியமாக காணப்பட்ட குறித்த அதே தாவர இனங்கள் முற்றாக அழிவுறும் அபாயம் உண்டாகும்.

"அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது சகல விதமான பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; இதைப் பற்றி கேட்கக் கூடியவர்களுக்கு இதுவே விளக்கமாகும்" (அல்குர்ஆன் 41:10)
தேடல் வலைத்தளங்கள்
https://en.wikipedia.org/wiki/Genetically_modified_food
https://www.who.int/foodsafety/areas_work/food-technology/faq-genetically-modified-food/en/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3791249/
https://www.ncbi.nlm.nih.gov/books/NBK424534/
https://ta.wikipedia.org/wiki/
No comments:
Post a Comment