அண்மைக்காலத்தில் உயிரிகளின் அடிப்படை கட்டமைப்பு தொழிற்பாட்டு அலகான கலத்தின் (Cell) மீதான நுணுக்க ஆய்வுகளின் வெளிப்பாடு எமக்கு மிக ஆச்சரியமான வியக்கத்தக்க முடிவுகளை வழங்கியது. மேலும் ரொபர்ட் ஹுக் என்பவர் 1839ஆம் ஆண்டு கலத்தை கண்டறிந்தார்.
மிகவும் செயற்திறன்மிக்க உயிரி உடலின் ஆக்க அடிப்படை கட்டமைப்பு அலகு கலம்.
இது தனிக்கலமாகவோ அல்லது பல்கலமாகவோ அமையலாம்.
இதன் (கலத்தின்) பெரும்பகுதி உள்ளடக்கம் நீர்.

“மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு” (அல்-குர்ஆன் 24:45)
"நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம்; உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா?" (அல்-குர்ஆன் 21:30)
மேற்கூறப்பட்ட இரு வசனங்களில் பொதுவாக உயிர்களை படைத்ததை பற்றி பேசும் அல்-குர்ஆன் மனிதனைப் பற்றி பேசும் போது சற்று வித்தியாசமான மொழி நடையினை கையாள்கின்றது.
“இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு (அவனது) வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்” (அல்-குர்ஆன் 25:54)
மனிதனை பற்றி பேசும் வசனத்துக்கு இருவகை பொருள்கொள்ள முடியும். வெளிப்படையான கருத்து கலங்களின் உள்ளடக்கக்கூறு நீர் என்பதாகும். மற்றைய கருத்து மனிதனின் புணரிக் கலங்களின் உள்ளடக்கமான சுக்கிலம் நீரை பெருமளவு கொண்டு ள்ளது என்பதாகும். மேற்படி இருவகையான விளக்கங் களையும் இஸ்லாமிய ஆய்வாளர்கள் வழங்குகிறார்கள். கலத்தில் காணப்படும் முதலுருவில் (Cytoplasm) நீர் மூலமாகவே கலத்தின் அனைத்து செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றது என்று விஞ்ஞானம் தற்போதே குறிப்பிடுகின்றது. ஆனால் இக்கூற்றை அல்-குர்ஆன் கி.பி 7ஆம் நூற்றாண்டிலே கூறிவிட்டது.
No comments:
Post a Comment