
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் விதத்தில் அமிழாகியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூலமாக பாதுகாப்பு படையினருக்கு முழுமை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகிக்கும் சந்தேகநபர்கள் விடயத்தில் முப்படையினருக்கும் ஒருவரை கைதுசெய்து விசாரிக்கவும், அவரின் சூழலை சோதனை இடவும் மற்றும் 24 மணிநேரத்திற்குள் தடுப்புக்காவலில் வைத்திருக்கவும் குறித்த நபரின் Phone, Laptop என்பவற்றை சோதனை செய்யவும் உரிமையுண்டு.
இருந்தபோதும் சிலவேளைகளில் இனம்தெரியாத நபர்கள் உங்களை குறித்து தவறான அணுகுமுறை மேற்கொள்ளவும் வாய்ப்புண்டு. எனவே இவ்விடயத்தில் அவதானமாக இருக்க அரச வர்த்தமானியில் மேலும்சில சட்டவியல் சார்ந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019.04.22 வெளியிடப்பட்டுள்ள 2120/5 என்ற வர்த்தமானி அறிக்கையின் ஏற்பாடு 20 யின் கீழ்வரும் உப்பிரிவுகள் (1) தொடக்கம் (11) வரை உள்ள ஏற்பாடும் படி
உப-பிரிவு(2),1ம் இப்பிரிவின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்படும் ஏதாவது நபர் 24 மணிநேரத்திற்குள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டது வேண்டும்.
உப்பிரிவு-7(பெண்களை தேடுதல் தொடர்பில்)
உப-பிரிவு-8(கைது செய்யும் அதிகாரி பொலிஸ் எனின் அவர் அது தொடர்பில் குறித்த பிரிவின் SP க்கு அறிவிக்க வேண்டும்.
ஆயுதப் படையினால் கைது செய்யப்படின் கட்டளையிடும் அதிகாரிக்கு தெரிவித்தல் வேண்டும். இவை யாவும் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட்டது வேண்டும்.
உப-பிரிவு-9, குறித்த ஏற்பாடுகளின் கீழ் கட்டுக்காவலில் எடுக்கப்படும் போது குறித்த நபர்கள ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்ற விடயத்தை பாதுகாப்பு செயலாளர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆவணத்தில் கைது செய்யப்பட்ட நபரின் மனைவிக்கு, தந்தை, தாய் அல்லது வேறு யாராவது நெருங்கிய உறவினர்களுக்கு கைது செய்யும் அதிகாரி வழங்குதல் வேண்டும்.
குறித்த ஆவணத்தை பெற்ற உறவினர்கள் குறித்த கைது செய்யப்பட்ட நபர் கட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படும் போது உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் வேண்டும்.
எவ்வாறாயினும் மேற்படி கைது செய்வதற்கான ஆவணம் கைது செய்யும் நேரத்தில் வழங்க முடியாது போனால் கைது செய்த நபர்
1. பொலிஸ் எனின்- கைது செய்த அதிகாரி ஏன் தன்னால் குறித்த ஆவணத்தை வழங்க முடியவில்லை என பொலிஸ் தகவல் புத்தகத்தில் பதிதல் அவரின் கடமை.
2.ஆயுதப் படை(முப்படை) எனின்- குறித்த கைது நடைபெற்ற பொலிஸ் நிலையத்தின் OIC க்கு காரணத்தை அறிவிக்க வேண்டும்.குறித்த OIC அதற்கான காரணத்தை குறித்த பொலிஸ் தகவல் புத்தகத்தில் பதிதல் வேண்டும்.
உப-பிரிவு - 10, மேற்படி உப-பிரிவு 9 யில். உள்ள விடயங்களை யாராவது அதிகாரி வேண்டும் என்று நியாயமான காரணம் எதுமின்றி கைது செய்தமைக்காக காரணம் காட்டி ஆவணத்தை வழங்காவிடின் மேல் நீதிமன்ற விசாரணை ஒன்றின். பின் 2வருடத்தால் தண்டிக்கப்படக் கூடிய சிறைத்தண்டணைக்கும் குற்றப்பணமும் கட்டுதல் வேண்டும்.
உப-பிரிவு-11, சொத்துக்கள் ஏதும் கைப்பற்ற படுமாயின் அல்லது தடுத்து வைக்கப்படுமாயின் அது தொடர்பான பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது வினா?
வெளியீடுகள் பற்றியதானது - நூல், சஞ்சிகை, வேதப்புத்தகம் மற்றும் இதர ஆவணங்களான Audio, Video CD, Pen drive, Head Disk என்பன 22.4.2019ம் திகதிய 2120/5 ஆம் இலக்க அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் (முன்னர் பிரசுரிக்கப்பட்ட வெளியீடுகளை) வைத்திருப்பது குற்றமா?

குறித்த ஒழுங்கு விதியின் பிரிவு-37 யின் படி,
யாராயினும் சட்டரீதியான அதிகாரம் இல்லாமல் அல்லது நியாயமான அனுமதி இல்லாமல் (மேற்படி விடயத்தை நிரூபிப்பது அத்தகைய நபரைச் சார்ந்தது) தேசிய பாதுகாப்பு அக்கரைகளுக்கு அல்லது பொதுமக்கள் கட்டளையின் கீழான பாதுகாப்பு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்களை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் அல்லது நபர் ஒருவரின் உணர்வினைத் தூண்டும் அல்லது அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் அல்லது அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆட்களை தூண்டும் வகையான ஏதாவது புத்தகம், ஆவணம், எழுத்து மூலமான ஏதாவது பேப்பர் போன்றவற்றை அவருடைய உடமையில், கட்டுக்காவலில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் குற்றமாகும்.
இவ்வொழுங்கு விதியின் பிரிவு-15, வெளியீடுகள் மீதான மட்டும்பாடுகள் பற்றி கூறும் போது, அதன் உப பிரிவு- 12 இல் கீழ்வருமாறு கூறுகின்றது?
மேற்படி பிரிவு- 15யிற்கு முரணாக வெளியிடப்படும் செய்தித்தாள் அல்லது வெளியீடுகள் தேசிய பாதுகாப்புக்கு இடையூறு செய்யுமாயின் முகாமையாளர், பதிப்பாளர், விநியோகத்தர் மற்றும் உரிமையாளர் இவ்விதியின் கீழ் குற்றமிழைத்தவர்களாக கருதப்படுவர்.
மேலும் குறித்த பிரிவு அனைத்திலும் shall மற்றும் may என்று இவ்விதி வந்தவுடன் பிரசுரிக்கப்படும் விடயங்கள் பற்றியே கூறப்பட்டுள்ளது.ஆனால் அதில் ஓரிடத்தில் was என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னர் சட்ட அனுமதி இன்றி பிரசுரிக்கப்பட்ட வெளியீடுகளும் அடங்கும்.
எனவே மேற்படி இரு பிரதான பிரிவுகளையும் ஆராயும் போது வீட்டில் இருக்கும்
(1) குர்ஆன் பிரதிகள்
(2) கிதாபுகள்
(3) சட்ட அனுமதி பெற்று பதிப்பு செய்யப்பட்ட மாதாந்த சஞ்சிகைகள்
(4) இன்னும் ஒருவரின் அறிவினை வலுவூட்டும் தற்போதய ஒழுங்கு விதியின் கீழ் அல்லது முன்னர் தடைசெய்யப்படாத இருவெட்டுகள் மற்றும் இதர வெளியீடுகளையும் மேற்படி பிரிவுகளுக்கு முரண்படாத வகையில் இருந்தால் அதனை வைத்திருக்கலாம் அதன் எண்ணிக்கை பற்றி அவசியம் இல்லை.
எவ்வாறு எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு உச்சபட்சமான ஒத்துழைப்பு வழங்குதல் எம்முடைய பொறுப்பு அதற்காக மேல் (1) தொடக்கம் (4) வகையான மற்றும் சட்டரீதியாக பாவனைக்கு என ் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் புனித குர்ஆன் உட்பட ஏனைய நூல்களை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளுவது நாட்டின் சட்டம் பற்றி ந
No comments:
Post a Comment