குறித்த கலாசார ஊடுருவலை எதிர்கொள்ளமுடியாத பேரினவாத சக்தியின் மதக் காவலர்கள் விழிப்படையவும் வெறுப்படையும் வித்திட்டது குறுகியகால ஆடை கலாசார சீர்திருத்தம். ஆங்காங்கே இதுபற்றி பல தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் முஸ்லிம் சமூகத்தில் சீண்டப்பட்ட போதும் ஏப்ரல் 21 ஈஸ்டர் பண்டிகையில் சர்வதேச இஸ்லாமிய கருப்பாட்டு ISIS பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தற்கொலை கொண்டுத்தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமிய ஆடை கலாசாரத்தில் குறிப்பாக முகம் மூடும் கலாசாரத்தில் பெரும் சட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு இறைமை பின்னணியில் நடைமுறை படுத்தப்பட்டது.
இந்நிலைமையின் கீழ் அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு முஸ்லிம் வைத்தியர் முகத்திரை அணிந்துவருவதை தடைசெய்ய கோர குறித்த பெண் தனது வைத்திய தொழிலை துறந்ததாக ஒரு செய்தி பலராலும் கருத்து பரிமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
குறித்த பெண் விடயத்தில் நாம் இரு கண்ணோட்டத்தில் எமது நிலைப்பாட்டை ஒப்பியல் நோக்கில் நோக்கவேண்டிய தேவையாகவுள்ளது.
1 - தனிநபர் உரிமை சலுகை மற்றும் பின்பற்றுதல்
2 - சமூகவியல் ரீதியான எதிர்கால முன்னுதாரணம்
தனிநபர் உரிமை சலுகை மற்றும் பின்பற்றுதல்
சிறுபராயம் தொடக்கம் முகத்திரை அணிந்து தங்களின் தன்மானத்தையும் கௌரவத்தையும் காத்த சாலிஹான பெண்களிற்கு அல்லாஹ் அருள் புரியட்டும். இவ்வாறான பெண்களிற்கு நாட்டில் திடீரென அறிமுகமான சட்டத்தை ஏற்று நடப்பதில் பாரிய சிரமம் ஏற்பட்டு இருக்கும். இருந்தும் அவர்களிற்கு சில காலம் அவகாசம் எடுக்கத்தான் செய்யும் தங்களின் அன்றாட சமூக இயல்பு வாழ்க்கை கோலத்தையும் தங்களின் பொதுவெளி தேவைகளை நிவர்த்தி செய்வதிலும்....
ஆனாலும் குறித்த வைத்தியரின் இராஜினமா அவரின் இறை பின்பற்றுதலின் வெளிப்பாடாக இருக்கலாம். அதனை நாம் மதிக்கவேண்டும். அத்தோடு குறித்த பெண்ணின் உரிமை, சலுகை மற்றும் தன்னிலை தீர்மானத்தை நாம் பொதுவெளியில் விமர்சன நோக்கில் நோக்குவது உண்மையில் தவறானது மட்டுமன்றி குறித்த பெண்ணின் உரிமை மீதான மிலேட்சத்தன மேலாதிக்கத்தையும் வெளிகாட்டுவதாகும். ஆனாலும் குறித்த பெண்ணின் தனி மனித எடுகோளை சமூக எடுகோளாக சித்தரிக்கும் முட்டாள் சிந்தனை வறட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமூகவியல் ரீதியான எதிர்கால முன்னுதாரணம்
குறித்த பெண்ணின் நிலைப்பாட்டை கொண்டு ஏனைய பெண்களும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுமாறு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கின்றார்கள் பல அடிப்படை வாதிகள். அவர்கள் குறித்த பெண்ணின் செயலை நியாயம் கற்பிப்பதோடு மாத்திரமன்றி அதனை ஒரு பத்வா (தீர்வு) நிலையில் நோக்கும் பிற்போக்குவாத எண்ணக்கரு மக்கள் மன்றத்தில் திணிக்கப்படுகின்றதனை உணரமுடிகின்றது.
உண்மையில் எதிர்காலத்தில் குறித்த நிலைப்பாடு பாரிய இஸ்லாமிய பெண்ணியல் வறட்சியையும் வெற்றிடத்தையும் மற்றும் தனிநபர் மீதான பெண்ணியல் சமூக கடமை பொறுப்புக்களை இடைவேளியாக்கும் என்பதில் ஐயமில்லை. இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு கொண்ட முகத்திரை சிலரின் பார்வையில் வாஜிப் (அனுமதிக்கப்பட்டது) என்ற நிலையில் இருக்கும் ஒரு பின்பற்றுதலை பர்ளு கிபாயா (சமூக மீதான கடமை) ஒன்றான பெண் வைத்தியர் உருவாக்கம் இன்னோரென்ன துறைசார் பெண் ஆளுமைகள் மீதான ஒரு உருவாக்க கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் நிலைப்பாட்டை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய பெண்களும் களமிறங்கி விடக்கூடாது என்பதே பலரின் நிலைப்பாடு. (முட்டாள் சஹ்றான் கூட்டம் சேர்த்து போன்று)
"தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்" (அல்குர்ஆன் 24:31)

ஈமானை இழக்கின்ற செயற்பாடு
நிகாப் , புர்காவை அகற்றிவிடுவது என்பது ஈமானை பாதிக்கின்ற ஒரு விடயம் அல்ல என்பதில் எல்லோரும் உடண்படுவார்கள்.
நிகாபுக்கும் , புர்காவுக்கும் மார்க்கத்தில் எந்த சட்டநிலைப்பாட்டை கொடுப்பது என்பதிலையே சட்ட வல்லுனர்களுக்கிடையில் ஓர் உறுதியான நிலைப்பாடு கிடையாது , அரேபிய பாலைவனச் சூழ்நிலையில் குறித்த ஒரு சில தேவைகளுக்காக அணியப்பட்ட அரேபிய காலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அங்கி என்பதிலையே பல நவீன கால சட்ட வல்லுனர்கள் உடண்படுவது ஒரு பக்கம்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அடையாளப்படுத்தப்பட்டு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டும் , நாட்டிலே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு குறித்த அங்கியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை மிகத் தெளிவாக தெரிகின்ற போதும் குறித்த அங்கியை தவிர்ந்திருப்பதே அறிவுடமை மாத்திரமல்ல, சன் மார்க்கக் கடைமையும் ஆகும் ,அகில இலங்கை ஜம்யதுல் உலமா இது தொடர்பான வழிகாட்டலை , அறிவூட்டலை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்.

துறை சார்ந்த நிபுணர்கள் உருவாக்கப்படுவது என்பது ஓர் சமூக கடமை , அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையானவர்கள் புடம் போடப்பட்டு , அரசின் பல் வேறுபட்ட துறைகளில் நின்று நாட்டின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேசிய நீரோட்டத்தில் நின்று தேசிய பங்களிப்புச் செய்தல் என்பது இலங்கை முஸ்லீம் சமூகத்தின் முதன்மை கடமையாகும். என்பது மாத்திரமன்றி எதிர்கால முஸ்லீம் சமூகத்தின் இருப்பை கூட தீர்மானிக்கும் விடயமாகும். ……
இவ்வளவு முக்கியமான முதன்மை கடமையொன்றை நிறைவேற்றும் அந்த சகோதரி கடமை கூட இல்லாத அரேபியக் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அங்கிக்காக முதன்மைக் கடமையொன்றை தூக்கி போடவது என்பது மிகக் கவலைக்கிடமான ஒரு செயலாகும். (உயிரா? மார்க்கமா? என்று வந்தால் கூட போலியாக நடித்து உயிரை முற்படுத்துவதை (பலவீனமான சந்தர்பங்களில்) வலியுறுத்தும் மார்க்கம் இது)….. முன்னுருமைப்படுத்தும் மார்க்க அறிவு சம்பந்தமான தெளிவூட்டல் இன்னும் சமூகத்தில் பேசப்பட வேண்டும்.

இஸ்லாமிய சட்ட வரம்புகளைப் பேணி தமக்குறிய ஆடை அணிகலன்களை அமைத்து கொள்வதற்கு இந்த நாட்டில் சட்ட பூர்வமான அங்கீகாரம் இருக்கும் போது இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு அப்பால் வருகின்ற ஒரு அங்கிக்காக பதவி துறப்பது என்பது , இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்கின்றவர்களுக்கு (மாணவிகள் , ஆசிரியர்கள்……) ஓர் மோசமான முன்ணுதாரனமாக அமைந்து விடக் கூடாது , அது சமூகத்தை இன்னும் பிற்போக்கான இக்கட்டான மிக மோசமான சூழ்நிலைக்கே கொண்டு போய் சேர்க்கும்.
நாட்டு சட்ட திட்டம்
முஸ்லீம்கள் , நாட்டு சட்ட திட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் , சட்டத்தை மதிக்காதவர்கள் , என்ற விமர்சனத்தை யதார்த்தமாக்கும் வகையில் எமது செயற்பாடுகளும் முடிவுகளும் அமைந்து விடக்கூடாது.
எனவே குறித்த அந்த சகோதரியை உத்தியோக பூர்வமாகவும் , கண்ணியமாகவும் அணுகி குறித்த முடிவின் பாரதூரங்களை எடுத்துச் சொல்லி உள ரீதியாக தைரியமூட்டி தனது பணியை தொடர்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவது சமூகக் கடமையாகும்.
இங்கே முன்வைக்கும் கேள்வி....
முகத்திரை மீதான குறித்த சட்ட நடவடிக்கை தொடர்ந்தும் நிலைபேறு அடையுமாயின் முகத்திரை அணியும் பெண் வர்கத்தின் எதிர்கால நிலைப்பாடு பாற்றி இன்றே நாம் என்ன தீர்வை சொல்ல இருக்கின்றோம்?
No comments:
Post a Comment