
விடுதலைப்புலிகள் இந்நாட்டில் எந்நடைமுறையை கைக்கொண்டார்களோ அணுவும் பிசகாது அதே பாதையின் அடுச்சுவட்டை பின்பற்றும் சமகால பெரும்பான்மை இனவாதிகளின் செயற்பாடுகள் ஒத்தொழுகுகின்றமையை கண்கூடாக காணமுடிகின்றது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசியல் உறுதிப்பாட்டை இந்த அரசுக்கு முன்னைய அரசு நிலைநாட்டிட விடுதலைப்புலிகளின் அழிவு வழிகோலியது. இதனை தொடர்ந்து பெரும்பான்மை சமூகத்தில் உண்டாக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான மதம் சார் மேட்டுக்குடி நிலைப்பாடு சிறுபான்மை சமூகத்தில் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சீண்டல்களிற்கு தூண்டுகோலாக அமைந்தது.
எந்தவொரு சமூகம் பொருளாதரத்தில் பின்னடைவு காணுமோ அச்சமூகம் சார்ந்த ஏனைய அனைத்து துறைகளும் பின்தங்கிய போக்கை இலகுவாக அடைய வைத்துவிட முடியும் என்பது உலகின் விதி.
குறித்த காரணியின் பின்னியில் பௌத்தமத காப்பாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய இனவாத துஷ்ட சக்திகள் தங்களுக்கே உரிய பாதையில் சுதந்திரமாகவும் சுயேற்சையாகவும் இயங்கிடவும் அதிகாரம் செலுத்திடவும் தன்னிறைவு பெற்ற தருணத்தில் எதிர்பாராத திருப்புமுனையாக ஆட்சி மாற்றம் உண்டானது. குறிப்பாக சிறுபான்மை சமூகத்தின் மொத்த வலுவான ஒட்டு செல்வாக்கினால் நாட்டில் நல்லாட்சி என்ற ஓர் அரசாங்கம் நிறுவப்பட்டது.
நல்லாட்சி அரசின் ஆரம்பகட்ட நகர்வுகள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பூரண மன அமைதியை அளித்தது மட்டுமன்றி ஆட்சி மீதான நம்பிக்கையையும் வலுவூட்டிட ஏதுவானது. காலங்கள் கடக்கவே நல்லாட்சி அரசின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியது. நாட்டில் சடுதியாக ஏற்பட்ட பொருளாதார வீக்கம் ஊழல் மோசடிகளின் பின்னணியில் அரசியல் தலைமைகள் முகம் காட்டப்பட்டது. இவற்றை தொடர்ந்து அண்மைய சில மாதங்களாக நாட்டில் இனவாதம் தலைதூக்கிட ஆட்சி தளம்பல் நிலை வாய்பளித்து.
வேடிக்கை என்னவெனில் அரசின் கடுமையான பயங்கரவாத சூழலில் கூட சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கும் இன வெறியர்களின் அத்துமீரர்களை வேடிக்கை பார்க்கும் அரசின் லட்சணம்....

தொடர்ந்தும் முஸ்லிம்களின் பொருளாதார முடக்கத்தை கட்சிதமாக மேற்கொள்ளும் காடையர்களினால் இதுவரை தர்காநகர் அலுத்கம பேருவலை -மேல்மாகாணம், கிந்தொட்ட காலி - தென்மாகாணம், திகன கண்டி - மத்திய மாகானம், சிலாபம் குளியாப்பிட்டிய - வட மேல்மாகாணம் சூறையாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொத்து அழிப்பிலும் பல மில்லியன் பெறுமதியான முஸ்லிம்களின் உடமைகள் அநியாயமாக அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் எங்கெங்கெல்லாம் என்ன நடைபெறப்போகின்றது என்பதை பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்...
1990~ 2004 கு வரையான காலப்பகுதியில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் முஸ்லிம்கள் மட்டுமன்றி தங்களின் இனத்தார்களிடத்திலும் வரி, கொள்ளை, கொலை மிரட்டல் பறிமுதல் மற்றும் வழிப்பறிகளை மேற்கொண்டார்கள். இவற்றை தாண்டி செல்வந்தர்களை இலக்காகக்கொண்டு சொத்து பறிமுதல் மற்றும் சொத்து சேதங்களை உண்டாக்கினார்கள். இதனூடாக உள்நாட்டில் பல குடும்பங்கள் அநாதரவாக அகதிகளாக ஆளாகினார்கள்.
புலம்பெயர் வடகிழக்கு முஸ்லிம் தமிழ் சமூகம் தொடக்கம் புலம்பெயர் வெளிநாட்டு சமூகம் வரை இந்த வலிகளை நன்கு அனுபவித்த தருணங்கள் பல உண்டு. இவற்றுக்கு அப்பால் பொருளாதார முடக்கம் காரணமாக குறித்த குடும்பத்தின் அடுத்தகட்ட நகர்வு குறிப்பாக கல்வி சார் சமூகம் ஒடுக்கப்பட்டதோடு மட்டுமன்றி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் குறித்த காலக்கட்ட தலைமுறையின் மானிட வளம் பெரும் பற்றாகுறை நிலவியதை காணமுடிகின்றது.
விவசாயம், வியாபாரம் மற்றும் முதலீடுசார் பொருளாதார நஷ்டத்தை எவ்வாறு அன்றைய விடுதலை புலிகள் செயற்படுத்தினார்களோ அதே பாணியில் அரசின் ஒத்துழைப்புடன் இன்று பல இடங்களில் முஸ்லிம்களின் உடமைகளும் பொருளாதாரங்களும் அழித்தொழிக்கப்படும் நிலை நாடுபூராகவும் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது வெறும் நாவளவில் நாளாந்தம் வீராப்பு வெத்து பேச்சுகளையும் அறிக்கைகளையும் அள்ளி வீசி எறிகின்றார்கள் தங்களின் நன்றிக்கடன்களை அருமையாக நக்கி தீர்த்துக்கொண்டு...
இவைகளை சற்று நிதானித்து ஒருமித்த நோக்கில் நோக்கும் போது அடுத்த சந்ததிகளின் இயல்பு வாழ்வு பெரும் கேள்விக்குறியாக அமையும் என்பதில் ஐயமில்லை.....
No comments:
Post a Comment