அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.7:72.
ஆக இவ்வாறு நிராகரிப்போர் முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டப் பின் எஞ்சியோர் அல்லாஹ்வை வழிபடும் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களிடமும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டதும் ஷைத்தான் மிக அழகாக அவனுக்கே உரிய நடையில் லாவகமாக சென்று இலேசாக தட்டத் தொடங்கினான் அவர்களும் அவனுடைய தட்டுதலில் பட படவென விழத் தொடங்கினர்.
அந்த மக்களுக்கும் அவர்களுடைய கோத்திரத்திலிருந்தே ஒரு நபியை ஸாலிஹ் (அலை) அவர்களை தேர்வு செய்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறைச்செய்தியுடன் அனுப்பி வைத்தான்.
ஸமூது கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை அனுப்பி வைத்தோம். . . 7:73
ஆது சமுதாயத்து மக்களுக்கு அல்லாஹ் உடல் வலிமையைக் கொடுத்தது போல் ஸமூது சமுதாய மக்களுக்கும் உடல் வலிமையைக் கொடுத்திருந்தான் ஏறத்தாழ ஆது சமுதாயத்து மக்கள் போன்றே இவர்களும் இருந்தனர். நூஹ் (அலை) அவர்களுடைய சமுதாயத்து மக்கள் போன்று இடம் விட்டு இடம் பெயர்ந்து வசிக்க வில்லை.
ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட அதேப்பகுதியில் ஸமூது சமுதாய மக்கள் தோற்றுவிக்கப்பட்டதால் உடல் வலிமையும், புத்திக்கூர்மையும் அவர்களுக்கிருந்தது போலவே இவர்களுக்கும் இருந்தது அவர்களைப் போன்றே இவர்களும் வானளாவிய மாளிகைகளைக் கட்டி படாடோபமாக வாழ்ந்தனர்.
''ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!'' (என்று அவர் கூறினார்)..7:74
"மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்" (அல்குர்ஆன் 11:84)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட அச்சமுதாயம் ஷைத்தான் பிண்ணிய சதிவலையில் சிக்கி அகப்பெருமைக் காரர்களாகவும், ஆணவக் காரர்களாகவும் மாறி அவனது தூதர் கொண்டு வந்த தூதுத்துவத்தைப் பொய்ப்பித்ததுடன் அவற்றை பகிரங்கமாக நிராகரித்தனர்.
''நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்'' என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர். 7:,76
தொடர்ந்து இறைநிராகரிப்பில் வீழ்ந்து தங்களை அழிவுக்கு ஆளாக்கிக் கொண்டனர் ஆனாலும் ஸாலிஹ் நபி(அலை)அவர்கள் தொடர்ந்து அம்மக்களுக்கு நல்லுபதேசம் செய்து கொண்டும், எச்சரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்! .எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).26:149, 152
வரம்பு மீறிய ஷைத்தானின் சிஷ்யர்கள் பூமியில் குழப்பத்தை தவிற அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் ? தொடர்ந்து குழப்பங்களின் மூலமாக சந்தேகத்தை உண்டு பண்ணினர் தனது இறைவனிடமிருந்து அத்தாட்சியை கொண்டு வந்துக் காட்டும் படிக் கோரினர்.
''நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்'' என்று அவர்கள் கூறினர்.. ''நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்) 26:153,4
அதன்படி அல்லாஹ் ஓர் பெண் ஒட்டகத்தை அனுப்பி வைத்தான் அவ்வொட்டகம் அனுப்பப்பட்டதன் நோக்கம் ஒட்டகத்தின் மூலம் சாதனைகள் நிகழ்த்துவதற்காக அல்ல மாறாக வரம்பு கடந்த மனிதர்களை சோதிப்பதற்காகவேயாகும். அதனால் இந்த ஒட்டகத்தை சீன்ட வேண்டாம் எனும் கட்டளையுடன் அனுப்பி வைத்தான்.
அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).'' 26:156
அல்லாஹ்வுக்குத் தெரியும் அவர்கள் வரம்பு கடந்து விட்டார்கள் அவர்களுடைய தவனை காலம் முடிவுற்றுக் கொண்டிருக்கிறதென்று அதனாலேயே நபிக்கு அனுப்பிய அத்தாட்சியை அவர்களின் மீது சோதனைப் பொருளாக ஆக்கினான் அவன் எண்ணியபடியே அவர்கள் அச்சோதனையில் தோற்றனர் அல்லாஹ்வின் அந்த அத்தாட்சியை (பெண் ஒட்டகத்தின்) கால் நரம்புகளை அறுத்து துண்டித்து விட்டனர்.
அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர். 26:157
அத்துடன் அவர்கள் விட்டார்களா என்றால் ? அது தான் இல்லை. அத்தாட்சியைக் கேட்டார்கள் அத்தாட்சி கொடுக்கப்பட்டது அத்தாட்சியை அழித்தனர் அத்துடன் நபியின் மூலம் விடுத்த எச்சரிக்கையை பொய்ப்பிக்கும் விதமாக அத்தண்டனையை கொண்டு வந்து காட்டும் படி திமிர் தனத்துடன் கூறினர்.
பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். ''ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்'' எனவும் கூறினர்.7:77
ஏற்கனவே அம்மக்களின் அட்டூழியங்களின் மீது கோபம் கொண்டிருந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அத்தாட்சியை அழித்ததன் மூலம் இன்னும் கோபம் கொண்டிருந்த நிலையில் இறைவன் புறத்திலான வேதனைக்கு அவசரப்பட்டனர் இறுதியில் அல்லாஹ் தனது வேதனையை அவர்களுக்கு பூகம்பமாக இறக்கினான்.
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 7:78.
அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு பெரும் சப்தத்தையே நாம் அனுப்பினோம். உடனே அவர்கள் கூளங்களைப் போல் ஆனார்கள். .54:31
மனித சமுதாயத்திலேயே ஆது, ஸமூது கூட்டத்தாருக்கு அல்லாஹ் மாபெரும் உடல் வலிமையை கொடுத்திருந்தான் மனிதர்களிலேயே அதிகபலம் பொருந்தியவர்களாக அவர்கள் திகழ்ந்தனர். தங்களிடம் இருந்த உடல் வலிமையை உண்ர்ந்த அவர்கள் அல்லாஹ்வை மறுத்து மாபெரும் இருமாப்புடன் நடந்து கொன்டனர்; ஆகையினால் இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (அண்டம் கிடுகி
��
ReplyDelete