Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 11, 2019

முஸ்லிம்களின் கலாசாரம் வரையறை செய்யப்பட்டதா????

Related image
நவீன இஸ்லாமிய சிந்தனையின் எழுற்சி முஸ்லிம் சமூக மட்டத்தில் முற்போக்கான நடைமுறை வாழ்வியலை உண்டுபண்ணிய போதும் அவற்றில் இஸ்லாமிய குழுக்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடும் அடிப்படைவாத சிந்தனை கௌரவ நிலைப்பாடும் பல்லின சமூகத்தின் மத்தியில் நடைமுறைச்சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
உலகளாவியரீதியாக முஸ்லிம்கள் குறித்தான எதிர்மறை சித்தாந்தம் நாளுக்கு நாள் மறை கண்ணோட்டத்தில் விதைக்கப்பட்டு வளர்ச்சி காணும் வேளையில் எமது உள்ளக குழுக்களின் சில்லறை பிரச்சினைகள் குறித்து மீளாய்வும் கருத்து பரிமாறல்களும் மற்றும் தர்கவியல் சொல்லாடல்களும் சமகாலத்தில் தூக்கியெறியப்பட வேண்டும். நவீன இஸ்லாமிய சிந்தனைகளின் பரவலாக்கம் மிகவேகமாக மானிட உள்ளங்களை சென்றடையும் இத்தருணத்தில் முஸ்லிம் சமூகம் சமூகமட்ட நடைமுறை வாழ்வியல் குறித்தான சில அடிப்படைவாத எண்ணக்கருக்களை குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

அந்தவகையில் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் அண்மைகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஆடை கலசாரம், உணவு ஹலால் /கராம் நடைமுறை, இஸ்லாமிய கற்கை நிலையங்கள், இஸ்லாமிய அழைப்பு பணிகளும் அதனை சார்ந்த குழுக்களும் மற்றும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்பன முக்கியமானவை.
மேற்படி தலைப்புகள் குறித்து நாம் எந்நிலையில் எமது பின்பற்றுதல்களை ஏதுவாக்கிகொள்ள எத்தனிக்க வேண்டும்? என்று சுய பரீசிலனைக்கு உட்படுத்துவோம்.

ஆடை கலாசாரம்
Image result for islamic culture dress code"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: தங்கள் தேகத்தில் பெரும்பாலும் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்" (அல்-குர்ஆன் 24:31)
"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக" (அல்-குர்ஆன் 33:59)
மேற்படி இரு வசனத்தின் அடிப்படையில்....
ஆடை என்ற ஒன்றை அல்குர்ஆன் வரையறை செய்யவில்லை என்பதே அநேக இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடு. இருந்தபோதும் ஹபாயா ஆடை ஏன் முஸ்லிம் சமூகத்திற்கு விசேடமாக வரவேற்பு பெற்றுள்ளது? என்ற கேள்வியை இங்கே சற்று சுருக்கமாக ஆய்வோம்....
Related image
கருப்பு ஹபாயா 
ஹபாயா என்பது ஒருவகை உடலை மூடும் ஆடை. அதில் நாட்டுக்கு நாடுகள் ஆடை அமைப்பில் வேறுபாடு இருப்பதுபோல் பெயர் வேறுபாடும் நிலவுகிறது. ஹபாயா என்பதை இங்கே பேசவேண்டியதில்லை. காரணம் பதிவின் முடிவில் நீங்களே தெளிவுபெறலாம்.
அவ்வாறாயின் கருப்பு ஏன் ?
கருப்பு நிறம் என்பது ஒருவகை ஒளிக்கற்றைகளை தன்னுள் உருஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டது. இதனால் ஒளித்தெறிப்பு தடுக்கப்படுகின்றது. கருப்பு ஆடைகளின் அடுத்த முக்கிய தன்மை தன்னுள் உள்ளடங்கும் பரிமாணங்களை (வடிவம், பருமன்) வெளிகாட்டும் தன்மை குறைவு. அதாவது ஒரு பெண் கருப்பு ஆடை அணியும் போது உடல் உள்ளக அங்கங்கள் அளவு, பருபன் மற்றும் தோற்ற அமைப்பு என்பன வெளிக்காப்பட்டப்டுவது மிக குறைவாக காணப்படும். எனவே இஸ்லாமிய நடைமுறைக்கு பெண்களிற்கு கருப்பு ஆடை அறிவியல் ரீதியாக பொருத்தமானதாக அமைந்துள்ளது.
ஆனாலும் இஸ்லாமிய சட்டத்தில் அடிப்படை விதிமுறையா என்றால் இல்லை.... என்பதே உண்மை.
ஏன் ஹபயாவை வலியுறுத்துகின்றார்கள்?
கட்டாயம் அணியவேண்டும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் பலரது மனநிலை அவ்வாறு திரிபு பெற்று அதனை நாடுகின்றது. காரணம் பெரும்பான்மை விகிதாசாரமும் மனோநிலை ஒருதலை சார்பும்.
இஸ்லாமிய வரையறை என்ன? 
ஆபாசம் அற்றதும், அன்னியவர்களை (மஹ்ரம்) கவராததும், மிக ஆடம்பர கவர்சி அற்றதும் உடல் அங்கங்கள் வெளித்தெரியாத வகையிலும் அமைதல் அவசியம். இந்த ஒழுக்க விதிமுறைப்படி எந்த ஆடை உங்களிற்கு பொருத்தமானதாக இருந்தாலும் அவை இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் அணிய முழு சுதந்திரம் மற்றும் உரிமை உண்டென்று இஸ்லாமிய அறிஞர்களின் ஒருமித்த நிலைப்பாடாகும்....

ஹலால் உணவு 
உணவுகள் குறித்து இஸ்லாம் தெளிவான சட்ட வரையறை முன்வைக்கின்றது. கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இது குறித்து பேசுகின்றது...
Related image"தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், கரடி, புலி போன்ற விலங்குகள் கடித்துச் செத்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; அனுமதிக்கப்பட்டவற்றில் எதை நீங்கள் உயிரோடு பார்த்து, முறைப்படி அறுத்தீர்களோ அதைத் தவிர; அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச் சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன" (அல்குர்ஆன் 5:3)
எனவே இது குறித்து மேலும் அலசவேண்டிய தேவைப்பாடு இராது என்று எண்ணுகின்றேன்...
Related imageஇஸ்லாமிய கற்கை நிலையங்கள் 
குறித்த தலைப்பில் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் மௌலவி மார்களின் நிலைப்பாடு பற்றி ஒரே பார்வையில் சுருக்க ஒப்பாய்வு நோக்கில் நோக்குவோம்.
சமகாலத்தில் அந்நிய சமூகத்தின் மத்தியில் பெரும் ஐயத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ள முக்கிய தொனிப்பொருள் இஸ்லாமிய கற்கை நிலையங்களான அரபு மதரசாக்கள். இதற்கான அடிப்படை காரணம் பிரச்சார ரீதியாக நெகிழ்வு தன்மை கொண்டிராத முற்போக்கு வாதிகளின் ஆதிக்கம் சமகால சூழலில் மேலோங்கியமை. முன்னைய காலங்களில் இருந்த மதப்போதகர்கள் மிதவாத சிந்தனையோடும் மாற்று மதங்களின் மீதான சடங்கு சம்ரதாயங்களில் விட்டுக்கொடுப்பு நெகிழ்வு போக்குடன் ஒன்றித்த இஸ்லாமிய சம்ரதாய கலசாரம் காணப்பட்டது. ஆனால் நேரடியாக மாற்று மதங்களின் வழிபாட்டு முறைகள், கடவுள் கோற்பாடுகள் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்து நேரடி பொதுத்தள விமர்சனத்திலும் விவாதத்திலும் அசிங்கப்படுத்தி கொச்சைப்படுத்தும் நடைமுறையை முன்வைத்து அதனை செயற்படுத்தி எதிர்பலை ஒன்றை நாடெங்கும் தோற்றுவித்தனர்.
"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம்" (அல்குர்ஆன் 6:108)
குறிப்பாக மதத்தை கற்ற மதப்போதகர்கள் இக்குறித்த களவட்டதில் செறிவாக நிலைகொண்டமை மாற்று மததார்களிற்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனை அவர்கள் சிந்திக்கையில் அவர்களிற்கு விடையாக அரபு மதரசாக்கள் அடித்தளமாக இவ்வறானவர்களை வெளியீடு செய்கிரமை உணரமுடிந்தது.
Image result for islamic leaders
இதனால் சந்தேகப்பார்வை கொண்டு நோக்கும் தலைமுறை அந்நிய சமூகத்தில் தோற்றம் பெற்றது. அதுமட்டுமன்றி வெளியீடு செய்யப்படும் இஸ்லாமிய மதகுருக்கள் (மௌலவி) பலர் உலக அறிவு, தொழில்நுட்ப அறிவு  மொழியறிவு, எழுத்து அறிவு மந்தமானதாக வெளியீடு செய்யப்பட்டார்கள். இவர்களினால் பல்லின சமூகத்தின் மத்தியில் ஒரு தொழில் தளத்திலோ அல்லது கல்வி சூழல் தளத்திலோ மிதவாத போக்கை கடைப்பிடிக்க முடியாது திசை திருப்பப்பட்ட அம்புகளாக உந்தப்பட்டார்கள். இன்னும் சிலர்கள் போராட்டத்தில் தோல்வியுறவே தங்களின் குறுகிய வட்ட சூழலில் சுழல ஆரம்பித்துவிட்டார்கள்.
"மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்" (அல்குர்ஆன் 20:40)
Image result for leadersஇலங்கை முஸ்லிம்களின் தலைமை பீடம்
குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமை பீடம் என்ற ஒன்று நெடுங்காலமாக வெற்றிடமாகவே இருந்து வருகின்றது. அரசியல், ஆன்மிகம் என்ற இரு துறைகளை நோக்கியபோதும் சில்லறை சண்டைகளில் சமூகத்திற்கான தலைமைபீடம் எம்மிடம் இன்றுவரை கானல் நீராகவே இருந்து வருகின்றது. பெரும்பாலான சமூக பிரச்சினைகளிற்கு இக்குறித்த தலைமைபீட வறிதாக்கல் நிலை அப்பிரச்சினைக்கான தீர்க்கமான தீர்வை எட்டுவதில் தொக்கி நிற்கவேண்டிய நிலைப்பாடு உண்டாகியது.

ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்புகளையும் சந்தேக கேள்விகளையும் எதிர்கொள்ளமுடியாத சூழ்நிலைக்கு மொத்த சமூகத்தையும் தள்ளிய பெருமை மார்க்கம் கற்ற குறித்த வகுப்பறை சாரும். இவர்களின் அடிப்படை பொறுப்பு குறித்து மறந்த நிலையில் தங்களுக்குள்ளே விவாதங்களையும் போட்டிகளையும் நடாத்திக்கொண்டு தங்களை தாங்களே சீர்திருத்தவாதிகளாக முத்திரைகுத்தி சுய அரிப்பின் சொரிச்சலூடாக சுய-இன்பத்தையும் கண்டுகொண்டார்கள்...

தங்களின் தனித்துவ கலாசாரம், சடங்கு சம்ரதாயம் கல்வி நடைமுறை வியாபாரம் மற்றும் இன்னோறென்ன வாழ்வியல் தேவைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாம் இதுவரை பெரும்பான்மை அந்நிய சமூகத்திற்கு எத்திவைக்கவிலை என்பதுவே இவ்வணைத்து பிரச்சினைக்கும் அடிப்படை மூலாதாரமாக காணப்படுவதை எப்போது உணர்கின்றோமோ அப்போதே எமது பொறுப்புகள் கடமைகள் நாம் என்ன செய்யவேண்டும் எவ்வாறு எப்படி எங்கே என்பதை உணர்ந்து செயலாற்றும் அறிவையும் அனுபவத்தையும் பெறுவோம்....

நாம் என்ன செய்யவேண்டும்
Related image
அடிப்படை எண்ணக்கருவை கொண்டுசெர்தல் - இஸ்லாம் குறித்தான அடிப்படை எண்ணக்கருவை அந்நியமாத மக்களிடத்தில் தெளிவூட்டவேண்டும். இதனை சமூக ஊடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள், கேள்வி பதில் நிகழ்ச்சி, விடியோ பதிவுகள் மற்றும் மத நல்லிணக்க நிகழ்சிகள் ஊடாக தெளிவு படுத்தல்.
வெளிப்பாடு தன்மை பேணுதல் - மதரஸாக்கள், இஸ்லாமிய கற்கை நிலையங்களில் வெளிப்பாடு தன்மை பேணும் விதமாக கற்றல் கற்பித்தல் மற்றும் இதர வழிபாடுகள் இன்னும் செயற்பாடுகளை அந்நிய சமூகத்தையும் பார்வையிடவும் வந்து செல்லவும் திறந்த நிலை பொதுவெளி அமைப்பை உண்டாக்குதல்.
சமூக நலன் செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல் - ஒருதலைபட்சம் பாராத அபிவிருத்திகள், வேலைத்திட்டங்கள், இதர கலை கலாசார நடைமுறையில் அயல் சமூகத்தையும் இணைத்து ஒன்றித்த செயற்பாடுகள் மேற்கொள்தல்.
மதங்களையும் மதஸ்தளங்களையும் கண்ணியப்படுத்தல் - பொதுவெளியில் அசிங்கமான உரையாடல், ஒப்பீடு மத இழிவு படுத்தல் மற்றும் தனிநபர் செயற்பாடுகளை சமூகம் சார்ந்து சாடுதல் போன்றவற்றை கைவிடுதல்.
Image result for srilankan big mosqueதுறைசார் நிபுணர்களின் பங்களிப்பு - இஸ்லாமிய அறிவுலகின் துறைசார் நிபுணர்களை கொண்ட சமூக கட்டமைப்பை கொண்டு இளம் தலைமுறைக்கான முறையான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்குவதோடு அதனை மக்கள் மயமாக்கம் செய்வதனையும் துரிதப்படுத்தல்.
மறைத்தலும் மட்டுப்படுத்தளும் - ஆடம்பட பள்ளிவாயல்கள், வீடுகள், வாகனங்கள் மற்றும் தனியார் சொத்துக்களும் அரபு மதரசாக்களும் மிகைப்படுத்தப்பட்ட கட்டுமானத்தை தவிர்த்தல்.
பண்பாட்டு சீர்திருத்தம் - ஆரம்பகால முஸ்லிம்கள் மிகவும் நம்பிக்கையானவர்களகாவும் நட்புறவு கொண்டவர்களாகவும் வாழ்ந்தார்கள். ஆனால் பிற்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த வாழ்கின்றவர்கள் போதைக் கடத்தல், சட்டவிரோத வியாபாரம், பாதாள உலக கோஷ்டி என்று நாட்டுக்கு எதிரான போக்கை வெளிக்காட்டினார்கள். இந்நிலை மாற்றப்படவேண்டும்.
உள்ளக கருத்து மோதல்களை களைதல் 
இன ஐக்கியத்தை வலுவூட்டல் 
உள்ளூர் தலைமைகள் தங்களின் ஸ்தீரனத்தை உறுதிப்படுத்தல்
அறிவுசார் மற்றும் மொழியியல்சார் மேலோங்கிய மார்க்க அறிஞர்களை தோற்றுவித்தல். 
பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்யும் வழிகாட்டலை வழங்குதல் 
ஊடக பயன்பாட்டை வலுவூட்டல் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages