பொருளாதார ரீதியாகவும் அரசியல், ஆன்மிகம், கல்வி, கலாசாரம், மானிடவியல் தொடர்புடமை மற்றும் உட்கட்டமைப்பு ரீதியாகவும் ஒரு வளர்சிப்பாதையில் இலங்கையின் போக்கு அண்மைய சில நாட்களாக எதிர்மறையாக இருந்து வருகின்றது. இதற்கு பின்னணியில் ஊடகம் தொடக்கம் தனிமனித மற்றும் சமூக குழுக்கள் வரை இனவாத சிந்தனையை தூண்டும் எண்ணக்கரு காணப்படுகின்றது.
நான்கு இன மக்களான பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தாரும் தங்களின் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் வரலாற்று நெடுகிலும் இன்றுவரை தமது வகிபாகத்தை நிலைநாட்டியுள்ளார்கள். அவ்வகையில் முஸ்லிம்களின் வகிபாகம் ஒப்பீட்டு அளவில் ஏனைய சமயத்தாரை விட சதவீத அளவில் முதன்மை பெற்று காணப்படுவது அவர்களின் தனித்துவத்தையும் இந்நாட்டில் மீதான பூர்வீக பிரஜாவுரிமையையும் நிலைநாட்டி நிற்கின்றது.

மேற்படி தலைப்பு இன்றுள்ள மக்கள் மன்றத்தில் முன்வைக்கவேண்டிய தார்மீக பொறுப்பு முஸ்லிம் சமூகத்தை சாடியுள்ளது. அன்றுதொடக்கம் இன்றுவரை ஒரு அமைதியான சாந்தகுண போக்கை கடைப்பிடித்த இந்த சமூகத்தில் சில காலங்களாக குற்றசாட்டு மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் காடையர்களினால் இழக்கப்பட்ட உடமை, உயிர் சேதங்கள் மற்றும் சீண்டகள் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அவ்வகையில் இப்பதிவின் ஊடாக மக்கள் மன்றத்தில் மதம் மறைத்த , மறந்த, மறுத்த ஒரு மானிடவியல் அர்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை முன்வைக்கப்படுகின்றது.
வரலாற்று வகிபாகம்
அ.வா. முஹ்சீன் அவர்களின் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் என்ற நூலின் மேற்படி விடயதானம் குறித்து மிகச்சிறப்பாக ஒப்பாய்வு நோக்கில் நிரூபணம் செய்கின்றார். இதே போன்று ஏ.எம். நஜிமுதீன் அவர்களின் முஸ்லிம்களும் கலவர சூழலும் மற்றும் முஸ்லிம்களின் சிங்கள வம்சாவளிப் பெயர்கள் என்னும் இரு நூற்கள் மேலும் வலுவான ஆதாரத்தை முன்வைக்கின்றது.
அரசியல் வகிபாகம்

மேற்படி அரசியல் நிலைப்பாட்டை பிற்பட்ட காலங்களிலும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ள முஸ்லிம் சமூகம். அந்தவகையில் சுதந்திர இலங்கையின் மீட்சுகையில் முஸ்லிம்கள் பெயர் குறிப்பிட்டுக்கூற முடிகிறது.








👑 சேகு டீ டீ(தோப்பூர்),

👑 முகம்மது சலாம் பதி உடையார் (குச்சவெளி)
👑 அபூபக்கர் ஈஸா (முகாந்தி ரம் சம்மாந்துறை)
👑 மீரா குசைன் காரியப்பர் (சம்மாந்துறை)

👑 அனீஸ் லெப்பை - டச்சு அரசின் முன்னாள் உத்தியோகத்தர். (மருதமுனை)
சட்டமூலம்
சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai)

பரிஸ்டர்:சேர்:மாக்கான் மாக்கார்(இலங்கையில் முதலாவது Sir பட்டம் பெற்ற முஸ்லிம்) N.H.M.அப்துல்காதர், கலாநிதி: துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya), கலாநிதி: பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.
1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில் சேர்:ராசீக் பரீட், டொக்டர்:M.C.M.கலீல் T.B.Jaya போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.
இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு சட்டத்தரணி M.C.சித்தி லெப்பை, கலாநிதி T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன. முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமை காரணமாக அவர்களின் பெயர்களை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமகாலங்களில் அரசியல் ரீதியான வகிபாகம் நாட்டின் பல்வேறு கட்சி ரீதியாகவும் பரவலாக்கம் பெற்றுள்ளதனால் நாட்டில் இனம், மதம், மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகள் அற்று பலதரப்பட்ட மக்களிற்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிவிருத்திகள் அனுபவிக்க வாய்ப்பாகிறது. அத்தோடு முஸ்லிம்களின் சிறுபான்மை கட்சி ஒன்றில் இந்நாட்டின் ஆட்சி தீர்மானிக்கும் சக்தியாகவும் நிலைபெற்று இருக்கின்றமை விசேட அம்சமாகும்.
பொருளாதாரம்
அதேபோல் இந்நாட்டில் பல்வேறு மனித பூர்வீக பகுதிகளில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிலைபெறுகின்றது. விவசாயக் காணிகளையும் மற்றும் பல பொருளாதார நிலங்களையும் முஸ்லிம்கள் தன்வசம் வைத்திருந்து இந்நாட்டின் பொருளாதார பங்கை அளித்து வருகின்றார்கள். பண்டைய இலங்கையின் காணிகள் விடயத்தில் முஸ்லிம்களுக்கு அரசர்கள் காணிகளை அன்பளிப்பு செய்துள்ளார்கள். இவை பிற்பட்ட காலப்பகுதியில் துண்டாக்கப்பட்டு பல்வேறு இனத்தாரின் குடியேற்றங்களிற்கு உரிமமானது. (டச்சு அரசின் ஆட்சி பீடத்தின் நிலைப்பாடு)
தற்போதும் கூட கிழக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய வடமத்திய மாகாணங்களில் பெரும்பாலான விவசாய துறை சார்ந்த நிலங்கள் முஸ்லிம்கள் வசமாக காணப்படுகின்றது.

முஸ்லிம்களை பொருத்தமட்டில் வியாபர நோக்கம் என்ற ஒரு தளத்தில் நின்று புனைப்பிக்கும் போக்கை வரலாற்றில் காணலாம். உண்மை அவ்வாறன்று. முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதியில் தங்களின் முறைமையை மக்கள் மயமாக்கினார்கள். அதாவது அந்நிய தொடர்புகள் மூலமாக வாசனை திரவியம், பொக்கிசங்களாக முத்து, இரத்தினம், பவளங்களையும் மற்றும் யானை தந்தங்களையும் ஏற்றுமதி செய்வதோடு தரமான ஆடைகள், ஆயுதங்கள் மற்றும் மருத்துவம் சார் கருவிகள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் இந்நாட்டிகு உதவி அளித்துள்ளார்கள் இன்னும் அளிக்கின்றார்கள்.
இலக்கியம்
முஸ்லிம்களை பொருத்தமட்டில் இலக்கிய வகிப்பாகம் மந்தமான போக்கையே காணமுடிகின்றது வரலாற்று நெடுகிலும். இருந்தபோதும் இலக்கிய துறையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களில் பலர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தகது. எழுத்தறிவு மட்டம் கூடிய சமூகமாக அரேபிய சமூகம் வரலாற்றின் கல்வி நாகரிக தொடர்ச்சியில் கருத்தப்படுகின்றதை இருண்ட ஐரோப்பிய நாகரிக வரலாறுகள் சான்றுபயக்குகின்றது. அவ்வகையில் நாடுகாண் பயணத்தின் போதானதும் தங்களின் மத போதனை அடிப்படையாகவும் இலங்கையின் கரையோரத்தில் செறிவான முஸ்லிம் சமூகம் இலக்கிய துறையில் மேன்மை தங்கிய போக்கை காணலாம். இதைவிடுத்து கண்டி இராசதானி மன்னர்களின் கீழ் பல இலக்கியம சார் புலர்வார்கள், சித்திர கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இருந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்துவந்த காலப்பகுதியிலும் மற்றும் இன்றும் கூட முஸ்லிம்களின் இலக்கிய வகிபாகம் தனித்துவமாக பல்துறை மொழியியல் சார்ந்து அமையப்பெற்றுக் காணப்படுகின்றது.
கலை கலாசாரம்

கலைகள் விடயத்தில் தற்காப்பு, வாள்பயிற்சி, வானியல் சார் ஆய்வுகள், விவசாய நடைமுறை போக்கு என்பவற்றை இந்நாட்டிற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தகது.
துறைசார் பகிபாகம்
இந்நாட்டில் அன்றுதொடக்கம் இன்றுவரை துறைசார் நிபுணர்களின் சேவை நிலைப்பாடு முஸ்லிம் தரப்பார் மத்தியில் பரந்த நோக்கில் அலசப்படவேண்டியதாகும். காரணம் பண்டைய இலங்கையின் வரலாற்று தொடக்கம் தற்கால இலங்கையின் வரலாறு வரை நாட்டின் பல்வேறு துறைகளில் தங்களின் பிரதிநித்துவத்தை தக்கவைப்பதோடு மாத்திரமன்றி நாட்டுக்கு விசுவாசமாகவும் கடமையாற்றி வருகின்றமை பெரும் ஒரு மைல்கல்லாக நோக்கப்படவேண்டும். பல்வேறு வெளிநாடுகளுடனான நல்லுறவு பேணுவதில் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு ஒரு மேல்மட்டத்தில் காணப்படுகின்றது. உள்நாட்டில் கொட்டப்படும் முதலீடுகள் தொடக்கம் வெளிநாடுகளின் நன்கொடைகள், அபிவிருத்திகள் மற்றும் ஆன்மீக ரீதியான கொடைகள் என்பன இந்நாட்டின் வளர்ச்சியில் பெரிதும் ஒரு பங்கை பெறுகின்றது.
சட்டவாக்கம், நாட்டுக்கு எதிரான விரோதிகளை களையெடுப்பது தொடக்கம் தங்களின் துறைசார் அறிவை முஸ்லிம் சமூகம் இந்நாட்டிற்கு முதலீடுகள் செய்துள்ளது.... அது கல்வியில் பாரிய விரிவாக்கம் பெற்று சதவீத அடிப்படையில் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு, வெளிநாட்டு பட்டப்படிப்புகள், அரச சேவை மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்களின் அடையாளத்தை நிலைநாட்டியுள்ளார்கள்.
மேற்படி சில காரணிகளுக்கு அப்பால் நாம் சமூக கட்டமைப்பு, முஸ்லிம்களின் நன்கொடைகள் (வக்குப்) சொத்துக்கள், உற்பத்தி திறன், வெளிநாட்டி வேலைவாய்ப்பு போன்றனவும் நோக்கப்படவேண்டிய தலைப்புகளாகும்.
இலங்கை முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பாக பல்வேறு ஆக்கங்கள், நூல்கள் மற்றும் ஆய்வு வெளியீடுகள் சமகால சூழலில் விரிவாக ஆராயப்பட்டு மக்கள் மன்றத்தில் கொண்டுசேர்க்கவேண்டிய கடப்பாடு இந்நாட்டின் முஸ்லிம்களிற்கு எழுந்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தங்களின் தேடல், ஆய்வு மற்றும் எழுத்துக்களை அமைப்பது சிறந்ததாக இருக்கும். அத்தோடு பத்திரிக்கை, சஞ்சிகை, இதர ஊடகங்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பதிவுகளை குறித்த துறைசார் எழுத்தாளர்கள் வாசகர்களிற்கு கொண்டுசேர்கவேண்டும். தொடர்ந்தும் எமக்குள் உள்ளக விவாதங்களை கலைந்து நாட்டின் இன ஐக்கியத்தினை வலுவூட்ட எம்மால் இயன்ற சிறிய பங்களிப்பை எமது அடுத்து தலைமுறைகளின் எதிர்கால நோக்கம் கருதி இன்றே நாம் அடித்தளம் இடவேண்டும்....
No comments:
Post a Comment