சந்தேகம் குறித்து நாம் விளக்கவேண்டுமானால் மூலையில் தோற்றம்பெறும் சிந்தனை குறித்து நாங்கள் தெளிவான கருவொன்றை கொண்டிருக்க வேண்டும். அதாவது சிந்தனையில் மூலம் முடிவு கிடைக்கப்பெறாத ஒரு வினாவே எமக்கு சந்தேகமாக தோற்றுவிக்கப்படுகின்றது.
சிந்தனை என்றால் என்ன?
Think science didn't find answer or evidence about how a thoughts generate in human mind. However, memories, reading, environment, experiences, our five senses, people, situations, ... could be considered as factors that help in generate thoughts.
சிந்தனை என்பதை இதுவரை அறிவியல் உலகு விவரித்ததாகத் தெரியவில்லை. சிந்திப்பதினால் விளையும் ஒரு கருத்தே சிந்தனை எனப்படுகின்றது.
என் கருத்து என்னவென்றால் யோசிப்பது வேறு சிந்திப்பது வேறு என்பதாகும். யோசிப்பது என்பது கிடைத்த சில தரவுகளை வைத்து ஒரு முடிவிற்கு வருவதற்காக செய்வது. சிந்தனை என்பது, கிடைத்த தரவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாது, அதற்கும் காரணங்களைத் தேடி, ஆழ்ந்து அலசி, பல்வேறு தளங்களிலும் அவற்றைப் பொருத்திப் பார்த்து, சாதகபாதகங்களை ஆராய்ந்து பார்த்து, ஒரு முடிவினை எட்ட முயற்சிப்பதாகும். யோசிப்பின் தளம் சிறியது. சிந்திப்பின் தளம் விரிவானது.
மாயத்தோற்றம் (Hallucination) எனப்படும் காட்சிப்பிழை நம் கட்டுப்பாடின்றி தானாக விளைவது. அதனை சிந்தனையோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். சிந்தனைக்கு புலன்களின் உள்ளீடுகளும் ஒரு தரவாகும். புலன்களால் உணர்ந்தவற்றையும் தாண்டியதோர் உணர்வைத் தேடுவதற்கு சிந்தனையால் மட்டுமே முடியும்.
பகுத்தறிவோடு, காரணகாரியத்தைத் தேடி, தர்க்கரீதியான அலசல்கள் ஆகியவற்றோடு கூடிய கற்பனைதான் சிந்தனையா என்று கேட்டால், இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்னால்.....
ஏனெனில், நம் கணிதவியலார்கள், ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், ராமானுஜன் ஆகியோருக்கு சுயநினைவோடு சிந்திக்கும்பொழுது எட்டாத தீர்வுகள் தன்னிலை மறந்து இருக்கையில் எட்டியிருக்கின்றன. பென்சீன் (Benzene) அமைப்புகூட தூக்கத்தில் வந்த கனவில் கிடைத்ததுதான். அதாவது பாம்பொன்று தனது வாலை தான் கடித்துக்கொண்டு வட்டவளையமாக தோன்றியது. அதனை கொண்டு Michael Faraday பென்சீன் கட்டமைப்பை உருவாக்கினார்.
ஆக சந்தேகம் என்பது ஒரு சிந்தனையின் தீர்வுபெறாத ஒரு தொக்கிநிற்கும் வினா என்றும் கூட கூறலாம்!
தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.) (அல்குர்ஆன் 25:73)
தேடல் வலைத்தளங்கள்
https://www.fastcompany.com/3068341/want-to-know-what-your-brain-does-when-it-hears-a-question
https://www.researchgate.net/post/How_a_thought_generates_in_the_Human_mind
No comments:
Post a Comment