இஸ்லாம் பற்றிய அறிமுகம்
ஒரு சமூகத்தின் வரலாறு பற்றி ஆய்வு செய்யவேண்டுமாயின் அச்சமூகத்தின் தொடக்கம் பற்றியதான தேடல் மிக அவசியமாகின்றது. அந்தவகையில் பல சமூகத்தார் தங்களின் வரலாற்று பூர்வீகம் பற்றி பல்வேறு தேடல்தலங்களை வகுத்து அதனூடாக தங்களின் சமூகத்தின் நிலைத்திருப்பு மற்றும் வகிபாகம் தொடர்பாக தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்திய மட்டுமன்றி அதனை நிரூபிக்க ஆதாரங்களையும் சான்றுகளையும் முன்வைக்குகின்றார்கள்.
அந்தவகையில் இலங்கை மண்ணின் சமகாலத்தில் எழுந்துள்ள பௌத்த இன தேசியவாதம் தொடர்பில் சிறுபான்மை சமூகம் நடுநிலை கண்ணோட்டத்தில் நிலைகொண்டு நிற்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனாலும் தங்களின் நிலைப்பாட்டை பேரினம் அறியவேண்டிய தேவையும் அதனை அறியப்படுத்தவேண்டிய நிர்ப்பந்த சூழலும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்துள்ளது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை இப்பொறுப்பு சூழ்ந்துள்ளது.
பௌத்த சமயத்தின் ஆரம்பம் 5000 ஆண்டுகள் முன்பாக அவதரித்த கௌதம புத்தரின் வருகையினை தொடர்ந்து ஆரம்பமாகின்றது. அதுபோல கிறிஸ்துவம் 2000 ஆண்டுகள் முன்பான இயேசுநாதர் (ஜீஸஸ்) அவரின் பிறப்பை தொடர்ந்தும், இந்துசமயம் 10,000 ஆண்டுகள் முன்பான மற்றுமொரு அறிவிப்பில் நூறாயிரம் ஆண்டுகள் முன்பான சிவபெருமான் அவரின் அவதாரத்தினை கொண்டு ஆரம்பம் ஆகின்றது என்று நம்பப்படுகின்றது. இங்கே முஸ்லிம்கள் சமூகத்தின் இஸ்லாம் என்ற தொடக்கம் பற்றி நாங்கள் தெளிவற்ற நிலைப்பாட்டில் பலர் காணப்படுகின்றார்கள்.

இஸ்லாம் அரேபியா மண்ணில் வாழ்ந்த இறைதூதர் முஹம்மது (அவருக்கு சாந்தி உண்டாகுக) அவர்களின் பின்னர் உண்டாக்கப்பட்ட சிந்தாந்த சிந்தனைதான் இஸ்லாமிய மார்க்கம் என்பது என்று பலர் எண்ணுகின்றார்கள். உண்மை அவ்வாறல்ல. முதல் மனிதன் ஆதம் சுவர்கத்தில் இருந்து பூமிக்கு எப்போது இறக்கப்பட்டனோ அப்போதில் இருந்தே இஸ்லாம் தொடக்கம் பெற்று விட்டது இப்பூமியில்.
“சுவனமான இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு. அத்தோடு அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; இறுதியாக நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்" (அல்குர்ஆன் 7:24,25)
முதல் மனிதன் சுவனத்தில் இருந்து பூமிக்கு வந்தவன் என்று பல சமயங்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் காணப்படுகின்றது. குறிப்பாக கிறிஸ்தவம், யூத மதம் மற்றும் இந்து சமயமும் கூட. இந்துக்கள் சிவனும் பார்வதியும் இணைந்த தோற்றமுடைய "அர்த்தநாரீசர்" என்ற அமைப்பை வணங்குவதும் முதல் தாய் தந்தை அதம், ஹவ்வா (ஆதம், ஏவாள்) என்பதையே சாடி நிற்கின்றது. இதில் இறுதி ஆரம்பமாகின்றது மனித வரலாற்று தொடக்கம்
"அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்" (அல்குர்ஆன் 4:1, 6:98)
இருந்தபோதும் மனித குடித்தொகையின் வளர்ச்சி மற்றும் பரம்பல் பல்கிப்பெருகவே மனிதனை நேர்வழியில் செலுத்த மேப்பாளர்கள் (இறை தூதுவர்கள்) இறைவனுக்கு அவசியமானார்கள். இவ்வாறான இறை தூதுவர்கள் மக்களின் பொது குண இயல்புகளில் இருந்து வேறுபட்டவர்களாக குறிப்பாக ஒழுக்கம், பண்பாடு மற்றும் மாந்திரீகம் (அற்புத சக்திகள்) மற்றும் சட்ட நூல்கள் (வேதங்கள்) கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். இவ்வாறான தூதுவர்கள் பிற்பட்ட காலங்களிளும் சரி அவர் வாழ்ந்த காலத்திலும் சரி கடவுள் நிலையில் வைத்து நோக்கப்பட்டதோடு அவரை வழிபடும் சமூகமும் தோற்றம் பெற்றது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சான்று பயக்குகின்றார்கள்.
"அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்" (அல்குர்ஆன் 10:74, 30:47)
அவ்வாறான இறைதூதர் வரிசையில் இறுதியாக வருகை தந்த ஒருவரே நபி முஹம்மது அவர்கள். அவருக்கு வழங்கப்பட்ட இறை நூலே புனித அல்குர்ஆன். முஹம்மது அவர்கள் அரேபிய மண்ணில் பிறந்தபோதும் அவர் உலக மக்கள் யாவருக்கும் பொதுவான தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"முஹம்மது(ஸல்) இறைவனின் தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் அல்லாஹ்வின் தூதர்கள் பலர் காலம் சென்றுவிட்டார்கள்" (அல்குர்ஆன் 3:144, 33:40, 48:29)
ஆக இஸ்லாம் என்பது முதல் மனித தோற்றத்தோடு ஆரம்பமாகும் ஒரு மார்க்கமாகும்.
No comments:
Post a Comment