எல்-நினோ என்பது பசுபிக் சமுத்திரத்தில் 3 ~ 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய கடல்சார் வானிலை மாற்றம். காற்று மேற்கு நோக்கி வீசுவதால் கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதோடு மேல்பரப்பில் உள்ள காற்றின் வெப்பமும் அதிகரிக்கும். அதன் காரணமாக உருவாகும் அடந்த மழை மேகத்தின் காரணமாக தென்அமெரிக்க நாடுகளில் அதிக மழை பொழியும் அதேவேளை ஆசிய அவுஸ்ரேலிய நாடுகளில் அதிகளவான வறட்சி அல்லது மழைவீழ்ச்சி குறைவு நிலவும்.
இலங்கையில் அனேக நீர்நிலைகள் வற்ற ஆரம்பித்துள்ளன. நாட்டில் பல அரசியல் சமூக பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. நாட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அனேகமாக மே 9ஆம் திகதிவரை. பெரிய மழையை எதிர்பார்க்க முடியாது.ஆங்காங்கே சிறு மழைகள் பொழிந்தாலும் அவை 15-20 நிமிடங்களுக்கு மேல் இருக்காது.எனவே மே மாதம் வரை இந்தக் கடும் வெப்பமான காலநிலை நீடிக்கும் .இலங்கையின் மொத்த மின் உற்பத்தியில் 30% நீர் மின் உற்பத்தி மூலமே கிடைக்கிறது.இலங்கை மின்சார பொறியியலாளர்கள் தெற்காசியாவிலேயே சிறந்த மின் சக்தி முகாமை செய்பவர்கள் .ஆனால் இலங்கையை ஆளும்,ஆட்சி செய்த அரசுகள் சனத்தொகை வளர்சிக்கு ஏற்ப பொறியிலாளர்களால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாமையே இந்நிலைமைக்கு காரணமாகும்.
El Nino காலநிலை மாற்றத்தினால் இம்முறை எதிர்பார்கும் அளவிற்கு தென்மேல் பருவக்காற்று மழையை கொண்டுவராது என எதிர்பார்க்கலாம். இதனால் நாடு பயங்கர வரட்சியை எதிர்நோக்க நிறைய வாய்ப்புள்ளது.குறிப்பாக வடக்கு ,வடமத்திய ,வட மேல் ,ஓரளவிற்கு ஊவா ,கிழக்கு மாகாணங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.அத்துடன் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மே மாத இறுதயில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் நாட்டின் தென் மேற்கு பகுதியில் சிறு அல்லது பெரு வெள்ளம் ஏற்படும் அளவிற்கு மழை பொழிந்தாலும் .மொத்த எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை விட இது குறைவாக இருக்கும்.

இதற்கு அப்பால் இலங்கையின் பல இடங்களில் சில நேரம் மேல்மாகணத்திலும் கட்டாய நீர் வெட்டு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். அழித்த காடுகளின் விளைவை அனுபவிக்கின்றோம்.
காலநிலை மாற்றம்(Climate Science) தொடர்பான அறிவும் ஆய்வும் ஒரு நாட்டின் அபிவிருத்திற்கு முக்கியமானது.அரசிற்கு மாத்திரம் அல்ல தனியார் நிறுவனங்களும் இந்த ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.( காலநிலை மாற்றம் தொடர்பான பல இந்திய ,சரவதேச ஆய்வுகளை வாசித்து பெற்ற தகவல்களை பகுப்பாய்வு செய்து எனது தனிப்பட அவதானங்களையே இங்கு முன்வைத்துள்ளேன்.)
No comments:
Post a Comment