தேவாலயம் மீதான தாக்குதல் இன ரீதியில் நோக்குவது எமது மடமையின் வெளிப்பாடகவே நான் காண்கின்றேன். கடந்த மூன்று தசாப்த உள்நாட்டு போரை கடந்துவந்த இன்றைய தலைமுறையில் மாறாத வடுக்களையும் இழப்பீடு செய்யமுடியாத பல கைசேதங்களையும் அனுபவித்த உடல், உளம் அண்மைய சில ஆண்டுகளாக சுபீட்சமான சுமூகமான சமூகவியல் மானிட பொருளாதார கட்டமைப்பை அடித்தளமிட்டு அபிவிருத்தி காணும் இவ்வேளையில் தீவரவாதிகளின் தாக்குதல் என்பது குறுகிய நோக்கில் நோக்கப்படவேண்டிய விடயதானமன்று. மாறாக கீழ் மேற்கோள்காட்டும் காரணிகளின் ஒன்றோ அல்லது பலதோ பின்னியில் நிச்சயமாக தொடர்புடமை பெரும் என்பதில் ஐயமில்லை.
1. அரசியல் ஸ்தீறனம் - நாட்டில் அண்மைய சில மாதங்களாக தொடர்ந்துவரும் அரசியல் முறுகல்கள் மற்றும் உலக வல்லரசு நாடுகளின் சூழ்ச்சியிலும் பனிப்போர்களிலும் சின்னாபின்னமாகும் இலங்கையின் அரசியல் அச்தீவரம் மீதான நிலைபேறற்ற தன்மையில் குளிர்காய நினைக்கும் அந்நிய சக்திகளின் அரசியல் நக்கிகளின் செயற்பாடும் மற்றும் தேர்தல் மீதான முற்போக்கு, பிற்போக்கு ஆர்வம் என்பன காரணமாக அமையலாம்.
2. இன ரீதியான வன்முறை - நாட்டின் மதங்களிடையிலான அண்மைய புரிந்துணர்வு மற்றும் இன ஐக்கியம் வலுப்பெறும் நிலையில் மானிடவியல் சமூக கட்டமைப்பு வளர்ச்சியுற்ற நிலையில் இதனை குழப்பி குளிர்காய நினைக்கும் உள்நாட்டு விரோதிகள் மீதான செயற்பாடாக கூட இருக்கலாம்.
3. சுற்றுலாத்துறை மீதான மேலாதிக்கம் - கடந்த ஆண்டு இலங்கை சர்வதேச ரீதியில் சுற்றுலாதுறையில் முதலிடம் பெற்றது. மேற்படி சாதனையினால் உள்நாட்டில் பாரிய முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு கம்பனிகள் மீதான பொருளாதார கேந்திர மையம் இலங்கையின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. குறித்த காரணியின் மீதான முதலீடுகள் காலப்போக்கில் பாரிய வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் இலங்கையில் குவிக்க நேரடி தொடர்புடையதாக அமையும். இதனை இலக்காக கொண்டும் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம்.
4. இலங்கையின் எண்ணெய் தளம் - கடந்த 50 ஆண்டுகள் முன்னர் ஊர்ஜீதப்படுத்தப்பட்ட இலங்கையின் எண்ணெய் வளம் அண்மைய ஆய்வில் உயிர்வாயு இருப்பதாக சாத்தியக்கூறுகள் வெளியாகியுள்ளது. மேற்படி வளத்தை தனதாக்கும் போராட்டத்தில் உள்நுழைய முயற்சிக்கும் சக்திகள் குறித்த திட்டத்தை நடைமுறைபடுத்தி தங்களின் முயற்சியில் மக்கள், அரசியல் பார்வையை திசைதிருப்பி இருக்கலாம்.
5. பழிவாங்கல் - கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல் தாக்குதல், சீண்டல்களில் விரக்தி மற்றும் பழிவாங்கலை நோக்கக்கொண்டு எச்சரிக்கை சைகை ஒன்றை பொதுத்தளத்தில் முன்வைத்து இருக்கலாம். இதனூடாக எதிர்கால அச்சம் ஒன்றை உண்டாக்குதல்.
6. போதைபொருள் மாபியா - அண்மைய சில மாதங்களாக இலங்கையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றுகை, போதைப்பொருள் சார்ந்த நபர்களின் கைதுகள் மற்றும் பாதாள கோஷ்டிகளின் மீதான முடக்கம் என்பன ஒரு வகை தூண்டுகோலாக அமைந்து இருக்கலாம்.
மேற்படி காரணங்களை தாண்டி பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தபோதும் ஒரு இனத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீவரவாத தாக்குதல் என்பது எதிர்காலத்தில் அவ்வினத்தின் சுதந்திர நிலைத்திருப்பில் பாரிய நடைமுறை சிக்கலை உண்டாக்குவதோடு குற்றவுணர்வோடு நோக்கவேண்டிய மனோபவத்தை சமூக அரங்கில் தோற்றுவிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
மேற்படி தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து உள்நாட்டில் குடிகொண்ட சர்வதேச உளவுப்பிரிவு மற்றும் பக்கத்து நாடுகளின் கைக்கூலிகளின் செல்வாக்கு என்பன நிச்சயமாக இந்நாட்டு மக்களளின் சமூக பொருளாதார அரசியலில் பாரிய உட்செருகளை உண்டாக்கும். இதன் தாக்கம் காரணமாக எதிர்காலத்தில் பாரியளவில் பொருளதார வறட்சியை சந்திக்க இந்நாடு தயாராக இருக்கவேண்டும்.....
No comments:
Post a Comment