அறிவு கூறிய அங்கிகளில் குழந்தை எண்ணிக்கை குறைவாக இருப்பதோடு குழந்தை பராமரிப்பு கால எல்லை மிக உயர்வாக காணப்படும். முள்ளந்தண்டுலி, முள்ளந்தண்டிலி கணத்தில் முள்ளந்தண்டு உள்ளவை கூர்ப்பு முன்னேற்றம் கொண்டவை. மீன்கள் தொடக்கம் முளையூட்டிகள் வரை குழந்தை பராமரிப்பை கருத்தில் கொண்டால் முளையூட்டிகள் முன்னிலை பெரும். அதிலும் மனிதன், சிம்பஞ்சி, தேவாங்கு, கங்காரு, யானை, என்பன முன்னிலை பெற்றுக்கொள்ளும்.
இரட்டை குழந்தை பிரசவம்
இது இருவகைப்படும். ஒத்த வகை இரட்டையர், ஒவ்வாதவகை இரட்டையர் என்பனவாகும். இவர்களின் பிறப்பு மற்றும் கருகட்டல் வெவ்வேறானதாக காணப்படும். அதுபோல இயல்பும், தோற்றம், மற்றும் குணாதிசயங்கள் வேவேறானதாகவே அமையும்.

ஒத்த வகை இரட்டையர் (Identical or Monozygotic twins)
பெண்ணின் சினை (சூல்/ முட்டை - Egg) விடுவிக்கப்படும் நிலையில் பலோப்பியன் குழாயில் விந்து (Sperm) கருகட்டல் நடைபெறும். இவ்வாறு நடைபெற்ற கருவுற்ற சினைமுட்டை (நுகம்) கருப்பையை நோக்கி நகர்த்தப்படும் உள்ளாக பிசிர் அடிப்பினால். இவ்வாறு அசையும் கருவுற்ற நுகம் (Zygote) உடைவுற்று பிளவு படுமாயின் அவை எத்தனை பிளவுகளாக பிளவு படுமோ அத்தனை குழந்தைகள் பிறக்கும். பொதுவாக இரண்டாக பிளவுபடவே சாத்தியம் உண்டென்பதனால் இரட்டை குழந்தை பிறக்கும்.
கருவுறும் போது ஆண்/ பெண் என்றே தீர்மானிக்கப்பட்டு விடும். பிளவுபடும் நுகம் ஒரே வகை என்பதனால் இரண்டு குழந்தையின் இரத்த வகை, தோற்ற அமைப்பு, ஒரே வகையாகவே காணப்படும். ஆனாலும் குணத்தில் சூழல், வளர்ப்பு என்பன தாக்கம் செலுத்தும்.
இவர்களின் DNA மிகச்சிறிய மாறுபாடுதல் காணப்படும். இதனால் விரல் ரேகை (Finger Print), கண்ணின் கதிராளி அமைப்பு, என்பன மாறுபட்டு காணப்படும்.
பிரிகையடையும் போது பூரணமாக பிரிகையடையாத நிலையில் ஒட்டிய நிலையில் அல்லது பகுதி அங்கம் வளர்ச்சியடைந்த நிலையில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வாதவகை இரட்டையர் (Fraternal or dizygotic twins)
பொதுவாக பெண்ணில் சூழகத்தில் இருந்து ஒரு சமயத்தில் ஒரு முட்டையே விடுவிக்கப்படும். தற்செயலாக இரண்டு அல்லது மூன்று விடுவிக்கப்படுமாயின் அவை பல்கருக்கட்டல் நிலைக்கு உள்ளாகி பல் குழந்தை தோற்றத்தை உண்டாக்கும். இவ்வாறு உருவாகும் குழந்தைகள் ஆண், பெண் ஆக பிறப்பதோடு தோற்ற இயல்பு, உடலியல் இயல்பு முழுமையாக மாறுபட்டதாகவே காணப்படும்.
மேற்படி இரண்டாவது நிலைப்பாட்டை ஒத்த கருவுற்றலைத்தான் சில முலையூட்டி விலங்குகள் காண்பிக்கும். உதாரணமாக நாய், பன்றி, சில சமயம் கால்நடைகள் கூட. அதாவது ஒரே சமயத்தில் பல குட்டிகள் ஈனும் நிலைப்பாடு.
மேலதிக தகவல்
Test tube Baby மூலமாக கருக்கட்டல் நடாத்தும் சமயங்களில் பல் சூல்கொள்ளச் செய்யும் ஓமோன்கள், ஊசிகள், மாத்திரிகளை பெண்களிற்கு வழங்குவார்கள். இதனால் ஒரே சமயத்தில் பல சூல்கள் விடுவிப்பு செய்யப்படும். இதனை சேகரித்து பல கருக்கடல் நிலையை உண்டாக்கி முளைய முற்பதித்தலை வைத்தியர்கள் செயற்கையாக மேற்கொள்வார்கள். எஞ்சிய கருவுற்ற நுகங்களை காப்பகத்தில் பாதுகாப்பாக சேமிப்பு செய்வார்கள்.
தேடல் வலைத்தளம்
https://www.betterhealth.vic.gov.au/health/ConditionsAndTreatments/twins-identical-and-fraternal
https://www.pregnancybirthbaby.org.au/types-of-twins
https://www.pregnancybirthbaby.org.au/giving-birth-to-twins
https://www.huggies.com.au/childbirth/multiple-births/twins/how-to
No comments:
Post a Comment