
சமகால உலகில் குழந்தைப்பராமரிப்பு என்பது சமூகவியல் கண்ணோட்டத்தில் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். கல்வி தொடக்கம் கலவி வரையாக பல்வேறு காரணிகளில் இது பரந்துபட்ட நோக்கில் அவதானிக்கப்படுகின்றது.
குழந்தை உருவாக்கம் கணவன், மனைவியின் இல்லறவாழ்வியலை குறித்து நிற்கின்றது. குறிப்பாக பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை அடிப்படையாக்கொண்டது.
மாதவிடாய் சுழற்சி
ஆண்களை போன்று பெண்களில் புணரிகள் தொடர்ச்சியாக விடிவிக்கப்படமாட்டது. அதாவது பெண்களின் பூப்படைதலை தொடர்ந்து வெளியாகும் சூல் (முட்டை/ Egg) ஒவ்வொரு மாதமும் ஒருமுறை வெளியேறும். கருக்கட்டப்படாத முட்டைகளே மாதவிடாய் வெளியேற்றமாக வெளியாகும்.

1. மாதவிடாய் அவத்தை (29~4 திகதி)
2. பெருக்கல் அவத்தை (5~14 திகதி)
3. சுரப்பு அவத்தை (15~27 திகதி)
மேற்படி அவத்தைகளில் சூல் விடுவிப்பு 14 ஆம் நாள் (பெருக்கல் அவத்தை) அளவில் விடுவிக்கப்படும். இக்குறித்த நாள் அன்று பலோப்பியன் குழாயில் ஆணின் விந்து காணப்படுமாயின் கருக்கட்டல் நடைபெறும்.
புணர்தல் மூலம் விடிவிக்கப்படும் விந்து அன்னளவாக 20~300 மில்லியன் ஆகும். இவ்வாறு விடுவிக்கப்படும் விந்து கருக்கட்டல் நடைபெறும் தானத்தை சென்றடைய சுமார் இரண்டு நாட்கள் (48 hours) தேவைப்படும். இவ்வாறு கருக்கட்டல் நடைபெறாத சூல் மற்றும் கருப்பையில் வளர்ச்சியுற்ற மேலணி இழையம் என்பன உதிர்ந்து மாதவிடாய் வெளியேற்றமாக மாத இறுதியில் யோனிவழியே வெளியேறும். இதன்போது இரத்தம் கலந்தவண்ணமாக வெளியாகும். இக்காலப்பகுதியில் பெண்கள் தங்களில் உடல் சுத்தம் மற்றும் உடலிற்கு தேவையான போசணைமிக்க உணவுகளை உட்கொள்ளுதல் என்பவற்றை கருத்தில் கொள்தல் அவசியம்.
ஆக கருக்கட்டல் நடைபெறவேண்டுமாயின் 10~15 திகதி வரையான காலப்பகுதியில் தம்பதிகள் கூடல் அவசியம் என்று மருத்துவம் கூறுகின்றது.
கருக்கட்டல் நடைபெறுவதை விரும்பாதவர்கள் இக்குறித்த இக்காலப்பகுதி தவிர்ந்த ஏனைய நாட்களில் தங்களின் இல்லறவாழ்வை தொடர்தல் நன்று.

கருத்தடை முறைகள்
கருக்கட்டல் தடைசெய்யும் முறை இரு பிரதான முறைகளை கொண்டது.
1. தற்காலிக கருத்தடை
👉 கருத்தடை மாத்திரை பாவனை - இது தொடர்ச்சியான பாவனை உடலியல் பக்கவிளைவை உண்டாக்கும்.
👉 பாதுகாப்பு உறை (Condams) பாவனை - ஆண், பெண்ணுக்கு என்று தனித்தனியே உண்டு. இதனால் பாலியல் நோய்கள் தடுக்கப்படுகின்றது.
👉 ஊசி மூலமான கட்டுப்பாடு - ஓமோன்களை கட்டுப்படுத்தி சூல் விடுவிப்பை கட்டுப்படுத்தல்.
👉 பலோப்பியன் குழாய்களை முடிச்சு இடுதல்
👉 கருப்பையில் அந்நிய பொருட்களை தங்க வைத்தல்.
2. நிரந்தர கருத்தடை
👉 பலோப்பியன் குழாய்களை வெட்டுதல்.
👉 கருப்பை அகற்றுதல்.
குழந்தை உருவாகினால் சூல் விடிவிப்பு நிறுத்தப்படும். கருப்பையில் பதிக்கப்படும் சூல் சுமார் 10 மாதங்கள் வளர்ச்சியுற்று குழந்தையாக வெளியாகும். சிசு களைப்பு சுமார் மூன்று மாதங்கள் முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும்.
No comments:
Post a Comment