
இந்துக்களின் நேர்ச்சை செயற்பாடாகவே பூமித்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. குறிப்பாக பண்டிகை காலங்களில் கோயில் திடல் ஒன்றில் இராப்பொழுதுகளில் மக்கள் கூடிநிற்க ஒரு நெருப்பு படுக்கை ஒன்றின் மேலே நடப்பதுவே தீ மித்தல் நிகழ்வாகும். இதனை பலநூறு பக்தர்கள் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தீ படுக்கை குறிப்பாக நிலக்கரி, மரக்கட்டைகளை கொண்டு அமைப்பது வழக்கம். பொதுவாக நெருப்புப்படுக்கை நீளம் 08~15m ஆகவும் நெருப்பு குழி ஆழம் சுமார் 08~15cm உம் அமையப்பெற்று காணப்படும்.

ஒரு பொருளில் இருந்து மற்றுமொரு பொருளிற்கு வெப்பம் மூன்று முறைகளில் கடத்தப்படும்.
1. கடத்தல் (Conductio)- பொதுவாக திண்ம பொருட்களில் நடைபெறுவதை கூறலாம். இதன்போது இரு பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடுகையில் காணப்படும். உதாரணமாக கையில் நெருப்பு சுடுதல்.
2. மேற்காவுகை (Convection)- பாயி (திரவ, வாயு) மூலக்கூறுகளில் நடைபெறும். இதன்போது பாயி மூலக்கூறுகள் வெப்பத்தைபெற்று ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு அசையும். உதாரணமாக தண்ணீர் கொதிப்பதை குறிப்பிடலாம்.
3. கதிர்வீசல் (Radiation)- இம்முறைக்கு ஊடகம் தேவையில்லை. கதிர்ப்பு முறைமூலமாக வெப்பம் கடத்தப்படும். உதாரணமாக மைக்ரோ அவன் (Micro Oven) உள்ளே உள்ளபொருள் வெப்பமடைதல்.
தீ மித்தல் செயற்பாட்டின் அறிவியல்
தீ மிதித்து வந்தவர்களிற்கு பாதங்களில் எதுவித தீ காயங்களும் பெரும்பாலும் காணப்படாது. இதனை கடவுள் சக்தி என்று கூறுவார்கள். நம்பிக்கை ஒருபுறம் இருக்க இதில் என்ன அறிவியல் உள்ளது என்று நோக்குவோம்.
1. வெப்ப அரிதில் கடத்திகள் - தீ குழிகள் கொண்டுள்ள நெருப்பு மூலப்பொருளான நிலக்கரி, மரக்கட்டை தணல் என்பன ஒரு வெப்பஅரிதில் கடத்திகள். இவை உலோகங்களை போன்று விரைவாக வெப்பத்தை இடமாற்றம் செய்யாது. இதனால் நெருப்பு தணல் மேல் கால்கள் வைக்கப்பட்டாலும் விரைவாக வெப்பத்தை கடத்தாது. அதுபோல எமது பாதங்களின் கீழ் தோல் தடிப்பானதும் வெப்பத்தை இலகுவில் காவாத வகையிலுமே காணப்படும்.
2. தீ மிதித்தல் மேற்பரப்பு - தீ மித்தல் குழு பெரும்பாலும் நெருப்பை மூட்டி எஞ்சிய தணல் மேலேதான் நடக்க விடுவார்கள். அவ்வாறான வேளைகளில் தணல் மேலே புகை, சாம்பல் பதிவுகள் போர்வையாக தணலின் நெருப்பை மூடும். இதனால் மேலே நடப்பவர்களிற்கு நெருப்பு சுடாது. அத்தோடு நடக்க ஆரம்பிக்க முன்னர் பக்தர்கள் தங்கள் கால்களில் நீரை ஊற்றுவார்கள் அல்லது குளித்துவிட்டு நடப்பார்கள்.
இதனால் பாதங்களில் எப்போதும் நீர் படை ஒன்று காணப்படுவதனால் நெருப்பு சுடுவது தடுக்கப்படும். அதுமட்டுமன்றி முன்னாள் சென்றவர்கள் பெரும்பாலான நெருப்பு தணல்களின் நெருப்பை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். இதனால் பின்னால் வருபவர்களிற்கு நெருப்பு குழியே இல்லாமல் சாதாரண தரை போன்றே காணப்படும்.
3. தீ தொடுகை நேரம் - தீ மிதிப்பவர்கள் மிக விரைவாகவே தீ குழியை கடப்பார்கள். இதனால் நெருப்பு தணல் கால்களின் மீதான தொடுகை நேரம் மிக குறைவாகவே காணப்படும். இதனால் நெருப்பு வெப்பம் காலிற்கு கடத்தப்பட வாய்ப்பே இல்லை...
4. புறச்சூழல் - இரவு வேளையில் வெப்பம் குறைவாகவும் இடல் குளிராகவும் காணப்படும். அத்தோடு மக்கள் கூடி நிற்பதனால் நெருப்பு குழிகள் பொதுவாக வளிப்படை காபனீரொட்சைட் வாயு தரைமட்டம் மேலேயும் தூசு, புகை என்பன குறித்த தரைமட்டதிலே தொடர்ந்தும் படிந்து காணப்படும்.
மேலே உள்ள காரணிகளின் மூலமாக தீ மிதிப்பவர்களிற்கு காலில் நெருப்பு காயங்கள் ஏற்பட வாய்ப்பே இராது....
தீ மிதித்தல் உலகசாதனை
அமெரிக்காவில் ரெட்மண்ட் வில்லே என்கிற இங்கிலாந்து இயற்பியல் பேராசிரியர் 1997ஆம் ஆண்டு மிக அதிகமாக கொண்ட நெருப்பு படுக்கையில் நடந்து உலக சாதனை படைத்தார்.1602 டிகிரி முதல் 1813 டிகிரி ஃபாரன்ஹிட் வெப்பம் கொண்டதாக அது இருந்தது.இதற்கு முந்தைய உலக சாதனை 1575 டிகிரி பாரன்ஹிட் 1987ம் ஆண்டு நடந்தது ஆகும்.

எது எவ்வாறோ தீ மிதிக்க முன்வருபவர்கள் தைரியமானவர்களாகவும் இன்னும் கடவுள் நம்பிக்கை கூடியவர்களாகவும் கருத்தப்படுகின்றார்கள். இது அவர்களின் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளின் போது ஒரு உளவியல் உந்துசக்தியாக தொழிற்படுகின்றது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
தேடல் வலைத்தளம்
https://en.wikipedia.org/wiki/Firewalking
https://news.nationalgeographic.com/news/2005/09/why-fire-walking-doesnt-burn-science-or-spirituality/
http://scribol.com/science/physics/the-extraordinary-science-of-firewalking/
https://www.pitt.edu/~dwilley/Fire/FireTxt/fire.html
No comments:
Post a Comment