அறிவுபூர்வமான ஆரோக்கியமான பல செயற்பாடுகளை மற்றும் மாற்று வழிமுறைகள் இருந்தும் தங்களின் தனித்துவத்தை மற்றும் அடையாள இருப்பை தக்கவைக்க இவர்களின் எல்லை கடந்த காதலின் விளைவை இன்றைய சிறுபான்மை சமூகம் உணர்வு பூர்வமாக உணர்கின்றது.
கடந்த மூன்று தசாப்த்தங்களை கசப்பான அனுபவங்களை அடைவாக பெற்று இன்னும் வடுக்கள் கூட மறையாத தருணத்தில் சிலரின் மூடத்தனமான முரண்பாட்டு முன்னெடுப்புக்கள் எமது பொது எதிரிகளுக்கு தங்களின் வகிபாக பலஹீனதை அம்பலப்படுத்தி அம்மணமாய் ஆட விடுகின்றது....
இலங்கை வரலாற்றின் நெடுகிலும் போராட்டம், புரட்சி, பதாதைகள் ஏந்திய ஒன்றினைவால் இதுவரை நாம் எதனை சாதித்துள்ளோம் என்று ஒருகணம் அமைதியாக இருந்து சிந்திப்பின் பல விடை கிடைக்கா வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அடுத்த பயனுள்ள நகர்வை நகர்த்த முடியும்...
சிறுபான்மையின் ஒன்றிணைவை ஓயாமல் கங்கணம் கட்டு காத்திருக்கும் கழுகளுக்கு காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் நிலைத்திருப்பை கூட்டிக்கொடுக்கும் காயவர்களுக்கு எமது சமூகத்தின் பதில் அடிதான் என்ன???
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை சிதைக்க முயலும் சதிகாரர்களுக்கு ஒருபோதும் இடமளித்து விடலாகாது....எமது முன்னெடுப்புகள்...
No comments:
Post a Comment