நீரிழிவு நோய் என்றால் என்ன?
குருதி குளுக்கோஸ் மட்டம் 80~120 வரை நியம மட்டமாக கருதப்படுகின்றது. நியமடத்தை பேணுவதில் உடலில் குருதி குளுக்கோஸ் சீராக்கும் தொழிற்பாட்டு ஒழுங்கமைக்கப்படுகின்றது. இதனை உடலியல் ஓமோன்களான இன்சுலின், குளுக்காகோன் மேற்கொள்கின்றது. இன்சுலின் (Insulin) ஓமோன் குருதியில் உயர் குளுக்கோஸ் மட்டத்தை குறைப்பதிலும் குளுக்காகோன் (Glucagon) தாழ் குருதி குளுக்கோஸ் மட்டத்தை உயர்த்துவத்திலும் பங்காற்றும். நீரிழிவு என்பது குறித்த இரு ஓமோன்களும் முறையான தொழிற்பாட்டை காட்டமுடியாத நிலையினையே குறிக்கும்.
நீரிழிவு இருவகையில் வேறு பிரிக்கலாம். உயர் நீரிழிவு, தாழ் நீரிழிவு. பெரும்பாலான நபர்களிற்கு உயர் குருதி நீரிழிவு ஏற்படுகின்றது. இது வயது, பால், சூழல், பரம்பரை, உடல் ஆரோக்கியம், உணவு பழக்கு வழக்கம் மருந்து பாவனைகள் மற்றும் சில நோய்த்தொற்று என்பவற்றில் தங்கி இருக்கும்.
நீரிழிவு நோயின் பாதிப்பு
உடலில் குருதி குளுக்கோஸ் மட்டம் சீராக்கம் முறையற்றதாக காணப்படின் சிறுநீர் ஊடாக குளுகோஸ் வெளியேற்றம் நடைபெறும். அத்தோடு சிறுநீரகம் தனது தொழிற்பாட்டில் அதிகளவு வேலையை செய்வதனால் சிறுநீரகம் செயலிழக்க காரணமாகலாம். உயர் குருதி குளுகோஸ் காரணமாக இதய நோய்கள், கண்பார்வை இழப்பு, சோர்வு, அதிக தூக்கம், காயம் குணமாகாமை, நரம்புத்தளர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்.
காயம் குணமடையாமை
குருதியில் உயர் செறிவில் குளுகோஸ் காணப்படுவதனால் காயம் ஏற்பட்டால் காயத்தில் தோற்றுதலடையும் நுண்ணங்கி தொடர்ந்தும் உயிர்புற்று தொழிற்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் நுண்ணங்கியை அழிக்க முடியாத நிலை உண்டாகும்.

குறிப்பாக கால்களில் நீரிழிவு நோய் காரணமாக குருதி அழுத்தம் உண்டாகும். இதனால் இயல்பாக தோல் வெடுப்பு, சொறி, தோல் சார்ந்த புண்கள் உண்டாக காரணமாக அமையும்.
விரல் அகற்ற காரணம்
கால் விரல்களில் குருதி அழுத்தல் காரணமாக விரல் நரம்புகள் பாதிப்புற்று விரல் தோல் மற்றும் தசை பகுதி இறக்கும். இதனால் விரல்களை குறித்த பாதிப்புற்ற பகுதியில் பங்கசு தோற்று அதிகமாகும். வளர்ச்சியடையும் பங்கசுக்கள் என்பு மச்சையை தாக்க ஆரம்பிக்கும். இதனால் பாரியளவில் உடல் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்கும் முகமாகவே பாதிப்புற்ற விரல்களை தோற்றுதலையட முன்னர் சிகிச்சை முன்றையில் வெட்டி நீக்கம் செய்யப்படுகின்றது.
மேலதிக தகவல்
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை முறையாக இன்சுலின் ஊசிகள் வழங்கப்படுகின்றது. அத்தோடு உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், போதைப்பொருள், மதுபான பாவனை குறைப்பு, ஒய்வு, போதிய தூக்கம், உடல்பயிற்சி, உயரத்திற்கு ஏற்ற உடல் நிறை மற்றும் செயற்கை உணவுகளை போதியளவு குறைத்தல் போன்ற தீர்வாக அமையும்.
No comments:
Post a Comment