
பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் திருமண சட்டங்கள் மாற்றுமதத்தவர்களின் திருமண உறவு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இஸ்லாமிய சட்டவியல் நடைமுறையும் மாற்று சமூகத்தின் மத்தியில் தவறான கண்ணோட்டத்தில் சமூகமயமாக்கப்பட்டதும், இஸ்லாமிய குடும்பவியல் பற்றிய எண்ணக்கரு மக்கள் மன்றம் பரவலாக்கப்படாததும் இஸ்லாம் மீதான துர்கண்ணோடத்தை காட்சிப்படுத்தி மெருகூட்டியது.
பண்டைய நாகரிக வரலாற்றை சற்று நோக்குவோமானால் இஸ்லாமிய திருமண சட்டவியல் வரையறை ஒருமித்த சமாந்தர போக்கை காணமுடியும். ஆண், பெண் உடலியல், உளவியல் தேவையை நன்கு உணர்ந்த இறை சட்டங்களும் சம்ரதாயங்களும் நடைமுறை வாழ்விற்கு வலுவூட்டுவதாகவே அமையவேண்டும்.
சமூக கண்ணோட்டம், தனிநபர் தேவைப்பாடுகளை ஒப்பியல் நோக்கோடு இஸ்லாமிய வரையறைகளை நாங்கள் அளவீடு செய்யமுடியாது. அவ்வகையில் முதுமைத் திருமணம் குறித்தான பிற்போக்கு சிந்தாந்தம் அண்மைய நாகரிக முதிர்ச்சியின் விளைவாக தோற்றம் பெற்ற ஒன்றாகும்.

ஏன் முதுமைத் திருமணம் சமூகம்
நிராகரிக்க வேண்டும்?
👉 பிள்ளைகள் மனோபாவம். - சமூகமட்டத்தில் வளர்ச்சியுற்ற பிள்ளைகள் தன்மானப்பிரச்சினை.
👉 சமூக வரையறை - வயதெல்லை தாண்டிய திருமணத்தை சமூகம் தவறான கண்ணோட்டத்தில் குறிப்பாக பாலியல் தேவையை மட்டும் கொண்டு நோக்குதல்.
👉 சொத்துப்பங்கீடு
👉 இரண்டாவது திருமண மணப்பெண் தேர்வு நடைமுறை சிக்கல்.
ஏன் முதுமைத் திருமணம் சமூகம்
அங்கீகரிக்க வேண்டும்?
👉 உளவியல் தேவை - தனது கவலை, மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளவும், ஆசா பாசங்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டு பேசிக்கொள்ளவும் ஒரு உரிமையுள்ள துணை தேவை. இதனால் தனிமை உணர்வு இல்லாமை, தனிமை யோசனை இல்லாமை போன்றவற்றால் உள ஆரோக்கியம் கிடைப்பதோடு மனவெழுச்சி ஆறுதல் கிடைக்கும்.

👉 பாதுகாப்பும் பராமரிப்பும் - இயலாமை காரணமாக நோய், உடலியல் செயலிழப்பு ஒருவேளை ஏற்படுமாயின் அவர்களின் துணை அவர்களை பாதுக்காத்து பராமரிக்கும் பாரிய பணியை மேற்கொள்வார்கள். குழந்தைகளிற்கு பொறுப்பு இருந்தபோதும் அவர்கள் சமகால உலகில் தொடர்ச்சியாக கவனிக்கும் வாய்ப்பு மந்தமாகவே காணப்படும்.
👉 சுதந்திரம் - தனி வாழ்கையில் இல்லறமொன்றில் தனிக்கும் அவர்களின் உணவு, உடை, உறக்கம் மற்றும் உறவு முறைகள் மீதான தனித்துவ தேவையையும், விருப்பு வெறுப்புகளையும் மற்றவர்களிற்கு இடையூறற்று புரிந்துகொண்ட வாழ்வார்கள்.
👉 சுய கெளரவம் - குழந்தைகள் பராமரிப்பில் தொடர்ந்தும் நிலைத்திராமல் தனி வாழ்கையில் சுய கெளரவம், தன்னம்பிக்கை, சுய தேவைகளை நிறைவு செய்யும் அங்கீகாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் மீதான தன்னிலை அதிகாரம் என்பன கிடைக்கப்பெறும்.
👉 சமூக அந்தஸ்து - அடிமைத்தனம், மற்றவர் தயவில் வாழும் ஒட்டுண்ணி வாழ்வை உடைத்து தனக்கென சமூக அந்தஸ்தை பெற்றுக்கொள்வார்கள். இதனூடாக தனது மார்க்க வரையறையில் ஆன்மீக செயற்பாடுகளில் கரைகள் இல்லாமலும், ஓய்வுநிலை கால பயனுள்ள களிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் சாதகமாகும்.
"தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், நீங்கள் திருமணமுடிக்க தகுதியானவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து மஹராக கொடுத்துத் திருமணம் செய்யத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது" (அல்-குர்ஆன் 4:24)
No comments:
Post a Comment