Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 1, 2019

ஆய கலைகள் அறுபத்து நான்கு

Image may contain: outdoor
தமிழர் பண்பாட்டு பாரம்பரியம் என்பது பன்னூறு ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று தொன்மை மதிப்பு மிக்கதொன்றாகும். உலகில் உள்ள பழங்கால ஆதி சமயங்களில் இந்து சமயமும் ஒன்றாகும்.
தமிழர் என்ற நாமம் தமிழ் பேசும் மக்களை அடிப்படையாக்கொண்டு முத்திரை பொறிக்கப்படுவதாகும். வைணவம், சமணம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம், மற்றும் ஸ்மார்த்தம் என்று கடவுள்களை அடிப்படையாக்கொண்ட சமயப்பிரிவுகள் காணப்படுகின்றது.
இந்துக்கள் குறித்து விபுலானந்த அடிகளார் கூற்றுப்படி இந்துக்கள் என்பவர்களை வேதாந்திகள் என்று அழைப்பதே சிறப்பானது மற்றும் பொருத்தமானது. காரணம் அவர்கள் வேதத்தை பின்பற்றுபவர்கள் என்று பொருள்படும்.
இந்துக்களின் வேதம் என்கையில் நான்கு மூல வேதங்களான ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்பனவாகும். இவற்றில் உப பிரிவுகளாக உபநிடதங்கள் (வேதங்களுக்கான விளக்கங்கள்) உள்ளடங்கும். இதனை தொடர்ந்து அடுத்த படிகளில் இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம்) திகழ்கின்றது.
மேற்படி வேதங்கள் மற்றும் ஏனைய சமய நூல்களில் கூறப்பட்ட மானிட வாழ்வியல் ஒழுக்க விழுமியங்கள், நெறிமுறை, கலை மற்றும் பண்புகள் என்பனவே ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு எதிர்மாறாக ஆரியர் பண்பாட்டு விழுமியங்களில் காணப்பட்ட பாரம்பரிய கலைகள் ஆய கலைகள் என்றும் அழைக்கப்படுகின்றது. இது பிற்பட்ட காலப்பகுதியில் ஆரியக்கலைகள் ஆய கலைகளாக திரிபு பெற்று இருக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது.
தமிழ் இலக்கிய இலக்கணத்தில் கலைகள் என்பது முக்கிய வகிபாகத்தை பெற்றுள்ளது. அவ்வகையில் மனிதன் பூரணம் பெரும் அல்லது கடவுள் நிலை / உயர்நிலை ஞானம் அடையும் கலைகளே இவைகள் என்று அண்மைய இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

👉 ஆய கலைகள் அறுபத்து நான்கும் கலை தமிழ் விளக்கமும்
1. அக்கர இலக்கணம் - எழுத்திலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்) - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் - மறை நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி நூல் - நய நூல்
8. சோதிடம் - கணியக் கலை
9. தரும சாத்திரம் - அறத்து பால்
10. யோகம் - ஓகக் கலை
11. மந்திரம் - மந்திரக் கலை
12. சகுனம் - நிமித்தக் கலை
13. சிற்பம் - கம்மியக் கலை
14. வைத்தியம் - மருத்துவக் கலை
15. உருவ சாத்திரம் - உருப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிது மொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்த பிரமம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை - யாழ் இயல்
24. வேனு - குழலிசை
25. மிருதங்கம் - மத்தள நூல்
26. தாளம் - தாள இயல்
27. அகத்திர பரீட்சை - வில்லாற்றல்
28. கனக பரீட்சை - பொன் நோட்டம்
29. இரத பரீட்சை - தேர் பயிற்சி
30. கச பரீட்சை - யானையேற்றம்
31. அசுவ பரீட்சை - குதிரையேற்றம்
32. இரத்தின பரீட்சை - மணி நோட்டம்
33. பூ பரீட்சை - மண்ணியல்
34. சங்கிராம இலக்கணம் - போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகர்சணம் - கவிர்ச்சியல்
37. உச்சாடணம் - ஓட்டுகை
38. வித்து வேஷணம் - நட்பு பிரிக்கை
39. மதன சாத்திரம் - மயக்குக் கலை
40. மோகனம் - புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தர்வ விவாதம் - இன்னிசைப் பயிற்சி
44. பைபீல வாதம் - பிறவுயிர் மொழி
45. தாது வாதம் - நாடிப் பயிற்சி
46. கெளுத்துக வாதம் - மகிழுறுத்தம்
47. காருடம் - கலுழம்
48. நட்டம் - இழப்பறிகை
49. முட்டி - மறைத்ததையறிதல்
50. ஆகாய பிரவேசம் - வான்புகுதல்
51. ஆகாய கமனம் - வான் செல்கை
52. பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டு கூடுபாய்தல்
53. அதிரிச்யம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர சாலம் - மாயம்
55. மகேந்திர சாலம் - பெருமாயம்
56. அக்னி தம்பம் - அழற் கட்டு
57. சல தம்பம் - நீர்க் கட்டு
58. வாயு தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி தம்பம் - கண் கட்டு
60. வாக்கு தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில தம்பம் - விந்துக் கட்டு
62. கன்ன தம்பம் - புதையற் கட்டு
63. கட்க தம்பம் - வாட் கட்டு
64. அவத்தை பிரயோகம் - சூனியம்

இதுபோன்று இன்னொரு தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுலகு மற்றுமொரு 64 கலைகளை பட்டியலிட்டு எம்மிடம் தருகின்றது.
1. பாட்டு (கீதம்)
2. இன்னியம் (வாத்தியம்)
3. நடம் (நிருத்தம்)
4. ஓவியம்
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்
7. பூவமளியமைக்கை
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை
10. படுக்கையமைக்கை
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்)
12. நீர்வாரி யடிக்கை
13. உள்வரி (வேடங்கொள்கை)
14. மாலைதொடுக்கை
15. மாலை முதலியன் அணிகை
16. ஆடையணிகளாற் சுவடிக்கை
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை
18. விரை கூட்டுகை
19. அணிகலன் புனைகை
20. மாயச்செய்கை (இந்திரசாலம்)
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்)
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்)
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி)
24. தையல்வேலை
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி)
27. விடுகதை (பிரேளிகை)
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்)
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்
34. கதிரில் நூல் சுற்றுகை
35. மரவேலை
36. மனைநூல் (வாஸ்து வித்தை)
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை)
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்)
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்
40. தோட்டவேலை
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை)
45. மருமமொழி (ரகசிய பாஷை)
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி)
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
48. முற்குறி (நிமித்தம்) அம

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages