அதாவது கருதுகோள் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கருந்துளையின் புகைப்படத்தை நாஸா விஞ்ஞானிகள் சுமார் இரண்டு வருட ஆய்வின் அப்பால் தற்போது உலகிற்கு கையளித்துள்ளார்கள்.
MIT Haystack observatory ஐத் தலையிடமாகக் கொண்டு, பூமியின் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்ட ‘Event Horizon Telescope’ (EHT) என்ற பூமியளவு பெரிய ஆண்டெனா டிஷ் போலத் தொழிற்படும் அதிசயத் தொலைக்காட்டி மூலமாக இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் 300 ஆண்டுகளுக்கு மேல் தேடிக் கொண்டிருந்த பிளக் ஹோல் என கூறப்படும் கருந்துளையை கண்டுபிடிக்க உலகம் உலகின் 6 இடங்களில் வைக்கப்பட்ட அதி நவீன ரேடியோ அலை தொலைதூர தொலைக்கட்டிகளின் உதவியுடன் இதன் புகைப்படம் அவதானிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட Supermassive Black hole சூரியனை விட 6.5 பில்லியனை மடங்கு பெரியது எனவும் இதனை பால்வெளியின் மத்தியான M87 எனும் இடத்தில் சுமார் 53.5 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் தோன்றியதாகவும் குறிப்பிடுகின்றனர்.அதாவது இன்றைய திகதியில் இருந்து 54 million light years முன்னர் வந்த புகைப்பட அமைப்பையே தற்போது நாங்கள் காண்கின்றோம். ஒளியாண்டு அளவு 300,000 x 365 x 24 x 60 x60 Km தூரமாகும்.
கருந்துளை என்றால் என்ன?
பெரிய சடப்பொருள் மிகச்சிறிய வெளிக்குள் ஒருக்கப்படும் போது ஈர்ப்புவிசை சடுதியாக அதிகரிப்பதோடு உயர் திணிவையும் கொண்டமையும்.

Kip Thorne உருவமைத்து முன்வைத்த கோளவடிவக் கருந்துளையை இதுவரை உலகம் ஏற்று இருந்தது. இந்த அமைப்பை 2014 இல் Christopher Nolan தயாரிப்பில் வெளியான Interstellar திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம்” (அல்-குர்ஆன் 56:75, 81:16)
தேடல் வலைத்தளம்
https://edition.cnn.com/2019/04/10/world/black-hole-photo-scn/index.html
https://www.theguardian.com/science/2019/apr/10/black-hole-picture-captured-for-first-time-in-space-breakthrough
https://www.news.com.au/technology/science/space/first-photo-of-a-black-hole-revealed-astronomers-capture-image-of-cosmic-phenomenon/news-story/2c66b4258c6aab47439840df895f160f
https://www.standard.co.uk/news/world/black-hole-picture-2019-live-stream-updates-as-event-horizon-telescope-collaboration-reveals-first-a4114176.html
No comments:
Post a Comment