உலகில் எந்தவொரு படைப்புக்கும் விதிவிலக்கு என்ற ஒன்று இறைவனால் உண்டாக்கப்படே இருக்கும். காரணம் இறைவன் தனது படைப்பின் ஆற்றலை முன்னுதாரணமாக விளக்குவதற்கே விதிவிலக்கு என்ற ஒன்றை நிர்பந்தமாக உண்டாக்குன்கிறான். பரிணாம வளர்ச்சியில் இறைவனை மறுக்கும் நாஸ்திகர்கள் சிந்தனைக்கு விதிவிலக்குகள் எப்போதும் பெரும் தலைவலிதான்....
மானிட ஆண், பெண்
மனித இனத்தின் பால் ரீதியான இருபால் என்று பலர் கூறுவார்கள். உண்மைதான். ஆனால் முப்பால் தோற்றம் சமகாலங்களில் பாரிய வகிபாகத்தை உலகளாவியரீதியாக பெற்று வருகின்றது. ஆண், பெண் என்ற இனத்தில் தனித்துவ உடலியல், உளவியல் அடையாளங்கள் உண்டு. திருநங்கைகள் விடயத்தில் இக்காரணி சற்று வித்தியாசமாக இனங்கானப்படுகின்றது. அவ்வகையில் இலிங்க வேறுபாடுகள், உளவியல்சார் வேறுபாடுகள் என்ற வகையில் திருநங்கைகளை இருவகையாக வேறுபடுத்த முடியும். திருநங்கைகள் தோற்றத்தில் உடலியல் ஓமோன்கள், DNA, சூழல், என்பன செல்வாக்குச் செலுத்தும்.
DNA
நிறமூர்த்த குறியீட்டில் XX- என்பது பெண்ணையும் XY- ஆணையும் குறிக்கும். ஆண் பெண் தீர்மானத்தில் ஆணே செல்வாக்குச்செலுத்துகின்றான். அதேபோன்று திருநங்கை விடயத்தில் பெரும்பாலும் Y நிரமூர்த்தில் உண்டாகும் சில மாற்றங்கள் காரணமாகவே இந்நிலைமை உண்டாகின்றது. அதாவது ஒரு ஆனில் இருந்துதான் அதிகமான திருநங்கை உருவாக்க வாய்ப்பு அதிகம் என்று கூறலாம்.
DNA மாற்றங்கள் காரணமாக உடல் இலிங்க அங்கங்கள் மாற்றம் பெற்று இருக்கலாம். அதாவது ஆணின் இலிங்க உறுப்பு பெண்ணிலும், பெண்ணின் இலிங்க உறுப்பு ஆணிலும் உருவாக்கலாம். குறிப்பாக உடல் கட்டமைப்பு, தசை, குரல், மயிர் வளர்ச்சி என்பனவும் இதில் உள்ளடங்கும்.

மூளையின் பரிவகக்கீழ் பகுதியில் இருந்து சுரக்கப்படும் இலிங்க, உடல் இயல்புகளை தீர்மானிக்கும் ஓமோன்களான FSH, LH சுரப்பு செறிவுநிலை முக்கிய காரணியாக திகழும் ஆண், பெண், திருநங்கை விடயத்தில். சாதரணமாக இந்த ஒமொன்களே இலிங்க, மற்றும் பாலியல் மனநிலை மற்றும் இலிங்க புணரியாகத்தை தூண்டும் வேலையை செய்கிறது. இவற்றில் உண்டாகும் குளறுபடி காரணமாக ஒரு ஆணுக்கு பெண்ணின் மனநிலையும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மனநிலையும் உண்டாகிட அடிப்படையாகும்.
பெரும்பாலான திருநங்கை விடயத்தில் ஓமோன்களின் சீரற்ற சுரப்பு நிலைமை அவர்களின் இயல்பான ஆண், பெண் என்ற நிலையை மாற்றிவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
சூழல்
சூழலை பொருத்தமட்டில் உடல் அமைப்பு, ஓமோன்கள் செல்வாக்கு செளுத்தமாட்டது. ஆனால் அவர்களின அன்றாட பழக்க வழக்கங்கள் மற்றும் நடை, உடை பாவனையில் சில மாற்றங்கள் ஆளுமை விருத்தியில் மாற்றங்கள் காணப்படும். உதாரணமாக அதிகளவான பெண்கள் உள்ள சூழலில் பிறக்கும் அல்லது பழகும் ஆண் குழந்தை நடத்தை கோலம் பெண்களை ஒத்து அமைவது, அதுபோன்று ஆண்கள் உள்ள சூழலில் உள்ள பெண் குழந்தை ஆண்ணின் நடத்தை ஒத்து சாடுவதனை இது காட்டும்.

குழந்தைப்பேறு
இவற்றை தவிர திருநங்கைகள் திருமணம், மகற்பேறு நிலைமைகள் சற்று வேறுப்பட்ட நிலைப்பாட்டைகுறிப்பாக DNA மாற்றம் கொண்ட உடலில் காணலாம். இவர்களினால் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி நிலை பெறாதவர்களாக இருப்பார்கள். காரணம் இவர்களின் இலிங்க அங்கம் விருத்தியுறாத நிலையிலும் புணரி உருவாக்கம் தடைப்பட்ட நிலையும் காணப்படும்.
உலகளாவிய அரங்கில்
18% பிறப்புகள் திருநங்கை மொத்த சனத்தொகையில் பிறக்கின்றது. இருந்தபோதும் இவற்றில் பெரும்பான்மை வெளிக்காட்டப்படாத மறைமுக நிலையில்/ உறங்குநிலை இயல்பை கொண்டு காணப்படுகின்றது. சுமார்
8~9% மானவர்களே சமூக அரங்கில் வெளிக்காட்டப்படுகிறார்கள்.

சமூக அரங்கில் இவ்வாறானவர்களை இழிவாக நோக்கும் மனோநிலை காரணமாக இவர்கள் சமூக அந்தஸ்தை இழக்க நேரிடுகின்றது. இதனால் சமூகத்தில் இருந்து தூரமாக்கப்பட்டு அவர்களாகவே ஒதுங்கி வாழப்பழகுகின்றார்கள். இதன் தாக்கம் இம்ம்மானிடர்கள் மூலம் சமூகம் அடையவேண்டிய அடைவுகளை இழக்கின்றது.
திருமணம், சமய கலாசாரம் போன்றவற்றில் இவர்களின் வகிப்பகம் இழக்கப்படுகின்றது. இதனை மாற்றி அவர்களும் எங்களைப்போன்ற உளவியல், உடலியல் குணம் கொண்ட ஒரு மனித இனம் என்ற மனோநிலை சமூக அரங்கில் பரவலாக்கம் செய்யப்படவேண்டும். அத்தோடு சமூகத்தில் அவர்களுக்கான தனித்துவ இடம் வழங்கப்படுவதோடு அவர்களின் மனோநிலையை உணர்ந்து ஆண், பெண் என்ற அங்கத்துவத்தில் இடமளித்தல் வேண்டும். காரணம் நாம் செய்யும் சிறு தவறு அவர்கள் சமூகத்தின் மீதான வெறுப்புணர்வை உண்டாக்குவதோடு பல்வேறு சமூகவியல் சார்ந்த குற்றங்கள் அரங்கேற்றப்பட வாய்ப்பளிக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
தேடல் வலைத்தளங்கள்
https://www.livescience.com/54949-transgender-definition.html
https://reason.com/volokh/2018/08/30/are-all-transgenders-born-that-way
https://www.apa.org/topics/lgbt/transgender
https://en.wikipedia.org/wiki/Prenatal_hormones_and_sexual_orientation#Gender_dysphoria
https://www.google.de/search?q=what+the+resion+Transgender+born&trackid=sp-006
https://www.quora.com/What-causes-a-person-to-be-transgender
https://disruptingdinnerparties.com/2014/04/08/take-the-red-pill-the-truth-behind-the-biology-of-sex/
No comments:
Post a Comment