இவற்றுக்கு புறம்பாக மறுபுறம் உளவியல் ரீதியான பல்வேறு தாக்கங்களை சமூக வலைத்தள பாவனையாளர்கள் எதிர்நோக்குகின்றார்கள். குறிப்பாக பொறாமை மற்றும் தன்னிலை தனித்துவ உயர்ச்சி.
ஒப்பீட்டு தராசில் ஒப்பாயும் மாயை தோற்றம் காரணமாக தாழ்வுச்சிக்கலோடு பொறாமை, வஞ்சகம் போன்ற துர்நடத்தைகள் மேலோங்கிட இத்தளங்கள் ஊக்குவிப்பு செய்கின்றது.
முக்கியமாக தன்னிலை உயர்ச்சி பற்றி இங்கே சற்று பேசுவோம்....
சமூகவளைத்தள பதிவு ஒன்றை இடும் ஒருவரின் பதிவிற்கு கிடைக்கப்பெறும் துலங்கல் (Like, Comments, Shares) அப்பதிவின் தரத்தை எப்போதும் தீர்மானம் செய்யாது. ஆனாலும் பல பின்னூட்டல்களின் (Comments) வாயலக ஓர் பதிவின் நிறை, குறை தீர்மானம் செய்ய வாய்ப்பாகலாம்.
அந்தவகையில்.... பதிவிற்கான பின்னூட்டல் ஒருவரின் சிந்தனை, புரிந்துணர்வு, தேடல் மற்றும் பதிவின் அகப்புற பின்னணி நோக்கை அடிப்படையாக்கொண்டு அமையும். அதனை முதலில் பதிவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதவிடமேலாக பார்வையாளர்கள் (வாசகர்கள்) புரிந்துகொள்ளவேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஒருவரின் பின்னூட்டல் நேர், மறை, நடுநிலை என்ற சாடலை சார்ந்து இருக்கும். இவ்வாறான பதில்கள் பதிவாளருக்கு சார்பு, எதிர் என்று நோக்குவது முட்டாள்தனம் என்றுதான் நான் கூறுவேன்.
காரணம் கருத்துச் சுதந்திரம் என்ற ஒரு காரணியை திறந்தவெளியில் காணும் அனுபவிக்கும் உரிமைகொன்டாலும் பொதுத்தளத்தில் நின்றுகொண்டு தன்னிலை சார்பு பற்றி மட்டும் நாம் எதிர்பார்ப்பது என்ன நியாயம். கருத்து முரண்பாட்டு நிலைகளை கருத்து முரண்பாட்டு நிலைகளாகவே நோக்கி அவற்றின் சாதக, பாதகங்களை மீளாய்விற்கு பதிவாளர் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியமான நிலையை தோற்றுவிக்கும்.
இந்நிலை புரிந்துகொள்ள சமூக வலைத்தளத்தில் அல்லது சமூகத்தின் மத்தியிலான உரையாடல், உறவாடல் அனுபவம் தேவை. இந்த நிலை அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் பாடங்களைத் தான் சமூக வலைத்தள முதிர்ச்சி என்று நான் கருதுகின்றேன்.
கருத்து முரண்பாட்டை தனிநபர் ஆளிடைத்தொடர்போடு கோர்த்து நோக்கி குறிப்பிட்ட ஆளிடைத்தொடர்பை தரம் பார்ப்பது உண்மையில் அறியாமையே. இவ்விடயத்தை பதிவாளர்கள் சரியாக புரிந்துகொள்வதிலும் பார்க்க பார்வையாளர்கள் புரிந்துகொள்வதே தேவையாக இருக்குமென்று நான் உணர்கின்றேன்....
Ripen Social-Media Writer
No comments:
Post a Comment