Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, March 7, 2019

பிரமிட்டுக்கள் (Pyramids)

Related imageகட்டிட நிர்மாணத்தின் அதிசயம் பிரமிட்டுகள் 
பிரமிட் உலக அதிசயங்களில் கடந்த 4000 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவருகின்றது. இதற்கான காரணம் என்ன? நான்காயிரம் ஆண்டுகள் அதிசயமாக திகழ அப்படி என்னதான் அதில் உள்ளது என்று பல சந்தேகம் உண்டாகலாம். உண்மையில் அதற்கான பல தகுதிகளை தன்னகத்தே கொண்டு அமைந்துள்ளது பிரமிட்டுக்கள்.
அவ்வகையில் நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிட்டு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இவ்வறிவியல் யுகத்தில் கூட விடைகாணமுடியாத நிலையில் விஞ்ஞானம் உள்ளது....
Image result for pyramidதற்கால எகிப்துத் தலைநகர் கெய்ரோவின் புறப் பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. இதன் உயரம் கிட்டத்தட்ட 500 அடி. பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 இலட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் சுமார் 2000 முதல் 9000 கிலோகிராம் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. காரணம் சுற்றுவரை பெரும் பாலைவனமாக உள்ள பகுதியில் இப்பிரமிட்டுக்கள் அமையப்பெற்றுள்ளது. கிசா பிரமிட்டின் முட்பக்கம் உள்ள மனித சிலை தனிக்கல்லில் செதுக்கப்பட்ட உலகில் முதல் மிகப்பெரும் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது. இது பாரோ மன்னனின் சிலையாகும்.

இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்றது மட்டுமன்றி ஒவ்வொரு கட்களிற்கும் இடையில் உள்ள இடைவெளி சுமார் 1mm அளவில் எவ்வாறு நுட்பமான சேர்த்து வைத்தார்கள் என்பதும் விந்தைதான். வெளிப்புற வெப்பநிலை 50 பாகை செல்சியசில் இருந்தபோதும் உள்ளக வெப்பநிலை 20 பாகை செல்சியசில் பகல், இரவில் பேணப்படுவதும் அதிசயம்தான். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவை பகல் வேளையில் தங்க நிறத்திலும் இரவு வேளையில் சிவப்பு நிறத்திலும் காட்சி தரும்.
Image result for pyramids and starsஅத்தோடு புற கற்களில் வித்தியாசமான எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்களை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள்கொண்ட நூல் அக்கமுடியுமாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பைதகரஸ் தொடர்புடமை (Pythagoras theorem ) என்கிற கணித விதிகளின்படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின நட்சத்திரங்களைக் குறிக்கின்ற துல்லியக் கோட்பாட்டின்படியும் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரமிட் அமைப்பு பூமியின் உண்மை வடக்கை (Truth North) திசையை மிகச்சரியாக வகைக்குறிக்கும் அமைப்பில் உள்ளது.

பிரமிடின் உள்ளே உள்ள உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.2004 இல் ரோபோக்களை உள்ளே செலுத்தி பார்வையிட்டபோது பல உள்பக்கம் அடைக்கப்பட்ட கதவுகள் கண்டறியப்பட்டது.
Image result for pyramidவியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டுள்ள பிரமிடின் கூம்பகங்களை பண்டைக் கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப்பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ அறிவுத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.

இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மம்மிப்படுத்துதல் பற்றி...
1.    இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.
Image result for pyramid and mummies2.    உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
3.    நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4.    இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5.    ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
6.    உடல், கல் உப்பால் மூடப்படும்.
7.    நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள்.
8.    உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9.    உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10.    இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.
Image result for pyramid alienகுறிப்பாக அடிமைகள் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல. பிரமிட்டு கட்டுவதை புனிதமாக கருதி மக்களின் ஒரு பகுதியினர் ஈடுபட்டார்கள் என்று அண்மைய ஆய்வு கூறுகின்றது.
இவ்வாறான பல மனித சிந்தனைக்கு அப்பால்பட்ட பிரமிட்டை அமைக்க மனித வலு சக்தி பயன்படுத்தபடமால் வேற்றுக்கிரகவாசிகள் சக்தி பயன்படுத்தப்பட்டதாக சில விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள்.
"அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், தடாகங்கள் போன்ற பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன" (அல்-குர்ஆன் 34:13)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages