Post Top Ad
Your Ad Spot
Monday, March 4, 2019
புத்தாக்க சிந்தனை (Innovative thinking)
புத்தாக்க சிந்தனையும் புதுயுக தலைமுறையும்
புத்தாக்க சிந்தனையும் புதுயுக தலைமுறையும் என்ற தொனிப்பொருள் சமகால உலகில் பல்வேறு தரப்பார் இடத்தில் பல்வேறுபட்ட மட்டங்களில் முனைவாக்கமுற்று முளைப்பிக்கின்றதனை காணமுடிகிறது. ஆனாலும் இச்சிந்தனை நவீன இஸ்லாமிய சமூகத்தை ஆட்கொண்ட வேளையில் மேற்கத்தேய உலகு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஆனாலும் பிற்பட்ட காலப்பகுதியில் உண்டான கைத்தொழில் புரட்சி தொடக்கம் மிலேனிய ஆண்டை நோக்கிய மேற்கத்தேய சிந்தனை எதிர்பார்க்கை தலைவன் நோக்கிய தேடல் வரை சடுதியான நிலைக்குத்து அச்சுக்கு சமாந்தர எழுட்சியை அடைந்த பொழுதுகளில் இஸ்லாமிய சமூகம் மெல்லமெல்ல துயில் கொள்ள ஆரம்பித்தது எனலாம்.
நவீனத்துவ இஸ்லாமிய சிந்தனையின் பரவலாக்கம் அண்மைய ஓரிரு சகாப்தங்கள் நுகர்சியான காற்றை அனுபவித்த போதும் அவை இன்னும் கிழக்கத்தேய குறிப்பாக தென்னாசிய சமூகத்தை அவ்வளவாக செல்வாக்குச் செலுத்தவில்லை எனலாம். இலங்கையை பொறுத்தவரையில் உள்ளக இயக்கங்களில் மூழ்கிய புதுயுக தலைமுறையின் தேடல், ஆய்வு, சுவாசிப்பு என்பன மீள்வாசிப்பு செய்யவேண்டிய தேவையை அண்மைய தலைமுறையின் சிந்தை வேறுபாடு மற்றும் அடைவு மட்டம் நிரூபணம் செய்கின்றது.
குறிப்பாக முன்னோடிகள் சென்ற தொடக்கிவித்த பாதைவழி வழிகாட்டும் வழிகாட்டிகள் மற்றும் சமூக தலைமைகள் சற்று முட்டியில் இருந்து வெளிவரவேண்டிய குஞ்சிகள் போல் உள்ளார்கள். பாரம்பரிய மரபுவழி நடைமுறையை நவீனத்துவ உலகோடு பயணிக்க வழிசமைக்கும் சமூக அங்கீகாரம் பெற்ற கல்வியல் சூழல் சற்று வித்தியாசமான நடைமுறை உபாயங்களை நடைமுறைபடுத்த மீள் ஒழுங்கு மேற்கொள்ளப்படவேண்டும். அத்தோடு கடந்த கால வரலாற்றில் நாம் பதித்த் சுவடுகள் சற்று அலசப்பட்டு முன்னேற்றம் பெற்றுள்ள சமூகத்தோடு எம் அடைவுகள் ஒப்பாய்வு செய்யப்படவேண்டிய நிலைக்கும் நாங்கள் ஆளாகியுள்ளோம்.
புத்தாக்க சிந்தனை என்பது புதுயுக தலைமுறையின் அத்தியாயத்தை ஒருகணம் நிலைபேறுற்ற தடயமாக தடம்பதிக்க வாய்பளிக்கும் அவை எவ்வாறு சமூக மயமாக்கம் செய்யப்படுகின்றது என்பதனை பொறுத்து. தகவல் தொழில்நுட்பம், இயந்திரவியல், பௌதீக, இரசாயன மற்றும் உயிரியல் துறையில் இவை நுணுக்கமான நூதனத்தை கையாளவேண்டிய வழிகாட்டி வழிநடத்தல் மேம்படுத்தப்படவேண்டும். அவற்றை பற்றிய குறுகியகால மற்றும் நீண்டகால நோக்கை நாம் தற்போதே அடித்தளமிடவேண்டும்.
குறிப்பாக மானிட இடைத்தொடர்பு (Human Bonds), தலைமைத்துவ சந்ததி உருவாக்கம் (Leadership Society), சார்பு நிலை பயணம் (Relative Journey), ஆளுமை விருத்தியுறும் சந்ததி (Personality Development), அதிகார பரவலாக்கமும் தக்கவைப்பும் அத்தோடு ஆன்மீக கொள்கையோடு உறவாடும் அரசியல், பண்பாட்டு பாரம்பரியம், பொருளாதார குவிப்பு கொண்ட நவீனத்துவ இளம் சந்ததி உருவாக்கம் போன்றவற்றில் கவனக்குவிப்பு செய்யவேண்டும்.
காலத்தின் தேவை கருதிய கற்றல், கற்பித்தல் சூழல் மாற்றப்பட்டு நடைமுறைக்கு ஒப்பாகும் தரமானதும் தகுதிவாய்ந்துமான பாடத்திட்டங்கள், பயிற்சி நெறிகள் மற்றும் தொழில்சார் கற்றல்கள் எம் சமூகத்திற்கு அறிமுகம் செய்வதோடு அவற்றை முறையாக கண்காணிப்பு செய்து அவற்றின் அடைவுகள் பற்றிய பரிசீலனை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
புத்தாக்க சிந்தனையின் வறட்சியை இன்றுள்ள சந்ததிக்கு முன்னுள்ள தலைமுறை அனுபவித்து வந்ததனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது. ஆனாலும் நீங்கள் விட்ட அதே தவறை தொடர்ந்தும் விட்டுக்கொண்டு பொடுபோக்காக வாழ்கையை வாழாமல் சற்று வித்தியாசமான புதுமையான சமகால உலகில் போட்டிபோடும் பயன்மிக்க தலைமுறை சமூக ஆளுமைகளை உருவாக்க வேண்டிய பல்வேறு தரப்பட்ட சிந்தனை பாகுபாடுகள் கொண்ட முற்போக்கு தரப்பார் இந்த சமூகத்தில் ஒரு புள்ளியில் ஒருங்கிணைய வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.....
"தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்" (அல்-குர்ஆன் 25:73)
கூர்புறும் நவீன மானிட சமூகத்தை கட்டியெழுப்ப நாமும் தயாராகுவோம்...
Tags
islamiya sattam#
Share This
About Mutur-jmi
islamiya sattam
Tags
islamiya sattam
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment