தலைமுடி அவசியமா? .... ஆம்
இறைவனின் ஒவ்வொரு படைப்பும் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அத்தோடு வீணாக எதுவும் படைக்கப்படமாட்டது என்பது ஒரு நியதி. அவ்வகையில் தலைமுடி
1. தலையினை சூழ காற்றை சிறைப்பிடிப்பதனால் குளிர்ச்சி விளைவை தோற்றுவிக்குகின்றது.
2. சூரிய ஒளியில் வெளிவரும் உடலுக்கு தீங்கான கதிர்வீச்சை நேரடியாக தலையில் உள்வாங்காமல் தடுக்குகின்றது.
3. கண்பார்வைக்கான ஒளித்தெறிப்பு நிகழ்வை மந்தமாக்குகின்றது.
4. முகத்தசை சுருக்கம் மற்றும் முக அழகு என்பவற்றுக்கு துணைபுரியும்.
5. சமூகவியல் அந்தஸ்து.

தலைமுடி உதிர்வடைய காரணம்
1. போசணை குறைபாடு
2. வயது முதிர்வு
3. சில நோய்கள் - புற்றுநோய், புழு தொற்று நோய், சிலவகை சொறி, தேமல்
4. இரசாயன தாக்கங்கள் / மாத்திரை பாவனை
5. உடல் ஓமோனான தைரோயிட்ஸ் சுரப்பி செல்வாக்கு (Hyperthyroidism)
6. உடல் ஆரோக்கியம் - தோல், மயிர், தசை
7. மன அழுத்தம் / உளவியல் பிரச்சினை
8. போதைப்பொருள் பாவனை
9. பெண்களில் மகற்பேறு நிகழ்வு
10. பரம்பரை, திருமணம் (Congenital triangular alopecia - TTA)
மேற்கூறிய காரணங்களில் இறுதியாக குறிப்பிட்ட காரணத்தை மட்டும் இங்கே எடுத்துக்கொள்கின்றேன். பெரும்பாலும் இதுபற்றிய தெளிவு எம்மில் பலருக்கு இருக்க வாய்ப்பில்லை. அதனால் இதனை முன்வைக்கின்றேன்.
பரம்பரை / திருமணம் எவ்வாறு செல்வாக்குச்செலுத்தும்?
பெரும்பாலும் ஆண்களே சொட்டை விழுதல் நோய்க்கு ஆளாகின்றார்கள். அதிலும் குறிப்பாக இலிங்க நிறமூர்த்தம் (Sex DNA) சார்ந்து இந்நோய் பின்னணியில் இருப்பது.
அதாவது ஒரு ஆண் முடி கொட்டுதல் நோய் காவியாக இருப்பின் அவர் திருமணம் செய்யும் பெண்ணும் இவர் போன்று காவியாக இருப்பின் குழந்தைகள் நோய் உள்ள நிறமூர்த்தங்களை கொண்டு காணப்படும். இதனால் கண்டிப்பாக முடி உதிர்வு குழந்தைகளில் வெளிப்படும்.
எவ்வாறு தடுப்பது?
பரம்பரை ரீதியான பின்னணி உள்ளவர்கள் தாங்கள் திருமணம் செய்யும் திருமண உணர்வின் பரம்பரை பற்றிய பின்னணி அறிந்திருத்தல்.

மயிர் நடுகை (Hair Transplantation)
பக்கவிளைவுகள் பெரிதும் அற்ற சிகிச்சை முறை பெரும் வரவேற்பை உலகளாவிய ரீதியா பெற்றுள்ளது. இக்குறித்த பரிகாரச்செய்கை முறை மூலமாக பலருக்கு அழகியல் ரீதியாக திருப்தி அளித்துள்ளது. அத்தோடு மேற்படி செய்முறையில் நடப்படும் மயிர்கள் வளர்ச்சி அடைவதில்லை. அத்தோடு இதில் மற்றுமொரு முறையாக மயிர் கண்களை தூண்டும் சிகிச்சையும் அறிமுகமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேடல் வலைத்தளங்கள்
https://en.wikipedia.org/wiki/Hair_loss
https://www.healthline.com/health/male-pattern-baldness
https://en.wikipedia.org/wiki/Triangular_alopecia
https://en.wikipedia.org/wiki/Hair_transplantation
No comments:
Post a Comment