Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 13, 2019

Chicken Dinner - Short film of Mutur

Image may contain: 4 people, including Wãžêêm Żėė and Sappu Andrew, people smiling, people standing, sunglasses and textஎமதூரின் புதுவரவு குறுந்திரைப்படம்.....
குறும்திரைப்படத்தை இவ்வளவு எளிமையாக தான் கூறவரும் எண்ணக்கருவை பார்வையாளர் மத்தியில் குறிப்பாக Online Video Game இளைஞசர்களோடும் அவர்களின் இயல்பு வாழ்வின் ஒவ்வொரு தருனங்கள் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பதையும் தோழமை உறவின் தரம் மற்றும் அதன் தகுதி என்ன என்பது பற்றியும் கூற முனைந்த விடயதானம் உண்மையில் பாராட்டத்தக்கது.

குறுகிய கால எல்லையில் குறைந்த கதாப்பத்திரங்களையும் மிகக்குறைந்த பின்னணி காட்சி தளங்களையும் கொண்டு நகர்த்தியிருக்கும் விறுவிறுப்பு காட்சி அமைப்பு உண்மையில் வெகுவாக என்னை ஈர்த்துவிட்டது.

நண்பன் என்பவன் எந்த வகிபாகத்தை ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பிடித்துள்ளான் என்பதை ஒரு சமூக கண்ணோட்டத்தில் கூறமுனையும் கதாசிரியர் சிந்தனை மற்றும் தயாரிப்பாளர் காணொளி கோர்வை ஒரு தரமான படைப்பாக இதனை எம்மிடம் கையளித்துள்ளதாக கருதலாம்.

Smartphone Camera வை மாத்திரம் கொண்டு Video பதிவு செய்தபோதும் அதன் தரம், ஒளிப்பதிவின் தரம் சிறப்பானது. அத்தோடு ஒலி அமைப்பும் இடத்திற்கும் பின்னணி கதைக்கும் ஏற்றால்போல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயல்பான ஊர் மொழிநடை மற்றும் ஆடை அமைப்பு மற்றும் விடுதி வாழ்வின் அமைப்பும் அதன் கற்றல் சூழலும், சமகால சூழலில் Online Game ஊடுருவல் மற்றும் பல எதார்த்த உண்மையை இங்கே எளிமையாக காட்சிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர்.

ஆங்காங்கே சில இடங்களில் இயல்பான முக பாவனை தவரவிடப்படபோதும் கதை களத்தில் பல தர்க்கவியல் (Logic) தவறுகள் அவ்வளவாக இடம்பெறவில்லை. குறிப்பாக பாதையில் விபத்திற்கு உள்ளாகும் நபரின் நடிப்பு மற்றும் அவர் பாதையில் இருந்து எழும்பும் போது கையில் வியர்வை ஈரம் வீதியில் படிந்து இருந்தமை உண்மையில் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அருமை அருமை...

மேலதிக தகவல்
Producer - N.M.Rawsan
Editor - RK.Kogul
Writer & Director - M.U.Wazeem
Actors - Rawsan, Wazeem, Kogul, Sabras
Total Cost - 5000
Period - 2 days

எது எவ்வாறோ...
எனது பார்வையில் இக்குறும்படம் பெற்றுக்கொள்ளும்
Rating .... 8/10

காணொளி பார்வையிட
https://www.facebook.com/mohamed.ihshan.790/videos/pcb.2350250508540038/2350249531873469/?type=3&theater

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages